விடாமுயற்சி Perseverance பிப்ரவரி 18, 1962 பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. நன்றி, சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி, காலை வணக்கம், நண்பர்களே. கர்த்தருடைய சமுகத்தில் இந்த கூடாரத்தில் ஜனங்களுடன் இன்று காலை இருப்பது ஒரு சிலாக்கியமே. வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது தான் நான் காரோட்டி இங்கு வந்து சேர்ந்தேன். நீங்கள் பாடும் விதத்தையும், கைகளைக் கொட்டும் விதத்தையும் நான் கேட்ட போது, அவர்களுக்கு உள்ளே ஆசீர்வாதத்தின் மழை பெய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அது மிகவும் நல்லது. எனவே இந்த நாளுக்காக நாம் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அது ஒரு ....நமக்கு மழை அவசியம். மழை இல்லாமல் போனால், எஜமான் அவருடைய பலன்களைச் சேகரிக்க முடியாது. எனவே நமக்கு உள்ளே ஆவிக்குரிய மழை பொழிகிறது. இல்லையென்றால் அறுவடைக்கு பலன் எதுவும் இருக்காது. நமக்கு வெளியே மழை அவசியம், இல்லையென்றால் நமக்கு இயற்கையான அறுவடை எதுவும் இருக்காது. அது உண்மை . 2. உங்களுக்குத் தெரியும். இவ்விரண்டிலும், நாம் உயிர் வாழ்வதற்கென்று ஏதோ ஒன்று சாக வேண்டியதாயுள்ளது. அறுவடை ஜீவனைக் கொண்டு வருகிறது. ஜீவன் மரணத்தைப் பிறப்பிக்க வேண்டும். மரணத்தின் மூலம் நாம் ஜீவிக்கிறோம். உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு நாளும், உங்கள் இயற்கை வாழ்க்கையில், நீங்கள் உயிர் வாழ்வதற்கென ஏதோ ஒன்று சாக வேண்டும். நீங்கள்... ஏதோ ஒன்று சாகின்றது. எனவே நீங்கள் இறந்த பொருளைப் புசித்து அதனால் உயிர் வாழ்கிறீர்கள். நீங்கள் பன்றி இறைச்சி சாப்ஸ்' சாப்பிட்டால் அதற்காக பன்றி சாகின்றது. நீங்கள் மாட்டு இறைச்சி 'ஸ்டீக்' சாப்பிட்டால், அதற்காக பசு சாகின்றது. நீங்கள் சோளம் சாப்பிட்டால், அது முதலில் சாகின்றது நீங்கள் கோதுமை சாப்பிட்டால், அது முதலில் சாகின்றது. நீங்கள் கோதுமை ரொட்டி சாப்பிட்டால், கோதுமை முதலில் சாகின்றது. நீங்கள் முட்டை கோஸ் சாப்பிட்டால், அது முதலில் சாகின்றது. நீங்கள் இயற்கையில் இறந்த பொருளைக் கொண்டு உயிர் வாழ்கின்றீர்கள். அப்படியானால், நாம் நித்தியமாக வாழ்வதற்கென்று, ஒருவர் மரிக்க வேண்டுமென்பது உண்மை அல்லவா-? நாம் நித்தியமாக வாழ வேண்டுமென்பதற்காக தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து மரித்தார். எனவே இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அழிவின் காலங்களிலே, கிறிஸ்து பாவிகளுக்காக மரித்தார் என்றும் நான் ஒரு பாவி என்றும், அவர் எனக்காக மரித்தார் என்றும் அறிந்திருப்பதில் இன்று காலை நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். 3. சென்ற ஞாயிறு என்று நினைக்கிறேன், அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு கர்த்தர் என்னுடன் பேசி நமக்கு... என்று நான் கூறினது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா-? சென்ற ஞாயிறு ஒலிப்பதிவான நாடாவில் அழிவு வரப்போகிறது என்றுள்ளது என்பதைக் கவனியுங்கள். நான் வந்து கொண்டிருந்த போது, ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஜெர்மனியில் இதுவரை சம்பவித்து இராத பயங்கரமான வெள்ளம் வந்துள்ளதாம். அது நூற்றுக் கணக்கானோரைக் கொன்று போட்டது, ஜனங்கள் வெள்ளத்துக்கு தப்ப எல்லாவிடங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். நான் வந்து கொண்டிருந்த போது, இதை குறிப்பு எழுதிக் கொண்டேன். ஜெர்மனியில் அணைகள் உடைந்து விட்டனவாம். இங்கிலாந்திலும் மிகவும் பயங்கரமான புயல் காற்று வீசி, அது ஏற்கனவே எழுபதாயிரம் வீடுகளை அழித்து விட்டது என்று நினைக்கிறேன். பாருங்கள்-? நல்லது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இந்நாட்களில் ஒன்றில் இயேசு பிரசன்னமாவார். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அது தொடக்கம் மாத்திரமே, இது மேலும் மேலும் தொடரும். நாம் முடிவில் இருக்கிறோம். 4. இன்றைய செய்திக்குப் பிறகு, நாளை நாங்கள் மறுபடியும் அரிசோனாவுக்குச் செல்ல ஆயத்தமாவோம். எனவே நாங்கள் செல்லும் போது, சபை எங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். பிறகு நண்பர்களே, நான் பெரிய தீர்மானங்கள் செய்ய வேண்டும், அவைகளை என்னால் தனியாக செய்ய முடியாது. ஏனெனில் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனவே என்னுடன் சஞ்சரிக்கும் ஒரு கூட்டம் விசுவாசிகள் என்னும் முறையில், நான் சரியான இடத்துக்கு செல்லும் தீர்மானத்தைச் செய்ய வேண்டுமென்று, இந்த சபை எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெளி நாடுகளிலுள்ள ஏறக்குறைய முந்நூறு பட்டினங்கள் என்று நினைக்கிறேன், எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆப்பிரிக்கா, மற்றும் எல்லா இடங்களிலிருந்தும் அழைப்பு வந்துள்ளன. எனவே தேவன் எங்கே எங்களை உபயோகிக்க முடியுமோ, அங்கு செல்லும் சரியான தீர்மானத்தைச் செய்ய தேவன் உதவி செய்ய வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் எனக்காக ஜெபியுங்கள். நான் உங்களுக்காக எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டு இருப்பேன், அது உங்களுக்குத் தெரியும். எனவே தேவனாகிய கர்த்தர் என்னை வழி நடத்த வேண்டுமென்று எனக்காக ஜெபியுங்கள். 5. அரிசோனாவிலிருந்து திரும்பி வந்த பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால், உங்கள் கவனத்தைக் கோர விரும்புகிறேன், அதை நாங்கள் சபையில் அறிவிப்போம், இங்கு அவர்கள் அறிவிப்பார்கள். சபையோரிடம் பேச சிறிது அதிகமான நேரத்தைப் பெற விரும்புகிறேன்... என்னிடம் ஒரு செய்தி உள்ளது. அதை ஏறக்குறைய எட்டு மணி நேரம் பிரசங்கிக்க விரும்புகிறேன், பாருங்கள், அது போன்று. நாம்.... 6. ஒரு ஸ்திரீ என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள், இந்த சபையைச் சேர்ந்த திருமதி.உட், நான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் மில் டவுனிலுள்ள பாப்டிஸ்டு சபையில் ஆராதனை நடத்திக் கொண்டிருந்தேன். அது அவர்கள் உடைய முதலாம் ஆராதனை என்று நினைக்கிறேன். அவள் என்னிடம், "சகோ. பிரான்ஹாமே, நான் பத்து மணிக்கு வந்தேன். நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் நடுப்பகல் வரைக்கும், அதன் பிறகு பிற்பகல் முழுவதும் பிரசங்கம் செய்து கொண்டிருந்தீர்கள். பகல் உணவு அருந்துவ தற்காக. அவர்கள் பதினைந்து நிமிடம் நேரம் தந்தார்கள். நாங்கள் அன்றிரவு பத்து மணிக்குப் புறப்பட்டோம், அப்பொழுதும் நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தீர்கள் என்றாள். நான் அவளிடம், “எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் வழக்கத்துக்கு மாறான சிறு காரியங்களை நான் அறிய நேர்ந்தால், அவரைப் பேசும்படி விட்டுவிடுகிறேன். நான்.... அவருக்கு எல்லாம் தெரியும்,” என்றேன். எனவே, நானும் கூட அதைக் கேட்க ஆசைப்படுகிறேன். நான்.... அதை நான் சுற்றி வளைத்து கூறினேன். 7. நான் திரும்பி வந்த பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால், நான் சீக்கிரமாக தொடங்கி, கர்த்தர் என் இருதயத்தில் அருளிக் கொண்டிருக்கிற செய்தியை விரைவாகப் பிரசங்கிக்க விரும்புகிறேன். சபைக்கு கடைசி நாளில் அதை அளிப்பதற்காக, அவர் எனக்கு வனாந்தரத்தில் அதை முழுவதையும் அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். பாருங்கள், ஆவியின் கடைசி அசைவுகளில் ஒன்று சமீபமாயுள்ளதென்று நான் நம்புகிறேன். கர்த்தராகிய இயேசு வானத்தை தேவனுடைய வல்லமையினால் அசைக்க ஆயத்தமாயுள்ளார் என்றும், அது வானத்தை கிழிக்குமென்றும் நாம் விசுவாசிக்கிறோம். அவர் அதைச் செய்யப் போகிறாரென்று நாம் விசுவாசிக்கிறோம். எனவே நாங்கள் திரும்பி வரும் போது, அவர் நமக்கு முழுமையான செய்தியை அளிப்பாரென்று நாம் நம்புகிறோம். அப்பொழுது நாம் ஏறக்குறைய காலையில் ஏறக்குறைய 9 அல்லது 9-30 மணிக்குத்தொடங்கி, 2 அல்லது 3 மணிவரைக்கும் பிரசங்கிக்க லாம், அல்லது அதை எப்பொழுது முடிக்க முடியுமோ அப்பொழுது, பாருங்கள். 8. ஒருக்கால் நான் அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்லலாமென்று நினைக்கிறேன் - கர்த்தர் அந்த வழியில் தொடர்ந்து நடத்துவாரானால், அல்லது கன்வென்ஷன் கூட்டங்களுக்காக முதலில் சுவிட்சர்லாந்து, பிறகு பாலஸ்தீனா, ஆப்பிரிக்கா. எனவே ஜெபத்தில் தரித்திருங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், இன்று மேலே நோக்கி ஜெபியுங்கள், ஜெபியுங்கள். அவ்வளவுதான். நமக்குள்ள ஒரே நம்பிக்கை ஜெபமே. 9. நாம் கடந்து விட்டோம்.... நான் தேவதூஷணம் கூறுவதாக தோன்றவில்லை என்று நம்புகிறேன், அல்லது யாராகிலும் ஒருவர் அவர் என்ன பேசுகிறார் என்று அறியாதிருப்பது போல. நமது நாடு, ஒரு நாடாக, மீட்பின் காலத்தைக் கடந்து விட்டதென்று நான் நம்புகிறேன். அங்கு அதிகமாக அங்கு போதிய கிறிஸ்தவர் கள், அதை ஒன்று சேர்த்து இழுக்க போதிய கிறிஸ்தவர்கள் இருப்பார்களானால்; நிறைய இழுப்பு நடந்து விட்டது. எல்லாவிடங்களிலும் பெரிய சுவிசேஷகர்கள் பெரிய ஆராதனைகள், ஆயினும் நாடு தொடர்ந்து குழப்பத்தில் அமிழ்ந்து கொண்டு வருகிறது. எனவே, நான் விசுவாசிப்பது என்னவெனில், எல்லா பெரிய நாடுகளும் விழுந்து போக வேண்டும். எல்லா முறைமைகளும் விழுந்து போக வேண்டும். 10. ஜனநாயகத்துக்காக மனிதர் தங்கள் உயிரைத் தியாகம் செய்வதை நினைத்துப் பாருங்கள். அது இந்த நாட்டுக்கு செய்யும் ஒரு விசுவாசமான செயல். அது நல்லது. அதற்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் கிறிஸ்துவுக்காக நமது உயிரைக் கொடுப்பது குறித்தென்ன, பாருங்கள்-? ஒரு மனிதன் ஹீரோ'வாக இருக்கலாம். அவன் வாலிபனாக வளர்ந்து தன் இளமை பருவத்தில் தன் தலை துப்பாக்கியால் சுடப்பட்டு. அது உடலிலிருந்து தனியே பிரிந்து வந்து அவன் 'ஹீரோ'வாகி விடலாம். அதைக் குறித்து அவனுடைய குடும்பத்தினரும் அவனை அறிந்துள்ள அயலகத்தாரும் தவிர வேறு யாரும் ஒருக்கால் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். இருப்பினும் கிறிஸ்துவுக்கு என்று சகலத்துக்கும் போதுமான இந்த தீர்மானத்தை தைரியமாகச் செய்ய முன்வர நாம் பயப்படுகிறோம், பாருங்கள். "தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான்” என்றுள்ளதே (மத்.10:39). எனவே நமக்குள்ள எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசுவில் வைத்து, உலகத்தின் காரியங்களிலிருந்து நம்மை முத்தரித்துக் கொண்டு, அவரை நோக்கிப் பார்த்து, அவருடைய வார்த்தையை விசுவாசித்து அவருடன் முன்னேறிச் செல்வோமாக. 11. இப்பொழுது. இதற்கு முன்னால்... இப்பொழுது. இன்று. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான்... சென்ற ஞாயிறன்று, தேவனும் அவருடைய ஜனங்களும் ஒன்றாயிருத்தல் என்னும் பொருளின் பேரில் உங்களை அவ்வளவு நேரம் பிடித்து வைத்து விட்டேன். இன்று உங்களை நேரத்தோடு விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஜெபித்துக் கொள்வதற்காக பலர் சென்ற ஞாயிறன்று வந்திருந்தனர். பிரசங்கத்துக்குப் பிறகு ஜெப வரிசையை அமைக்க எனக்கு நேரமில்லாமல் போய் விட்டது. சென்ற ஞாயிறு அவர்கள் ஜனங்களுக்கு சில ஜெப அட்டைகளைக் கொடுத்தனர் என்று நினைக்கிறேன். அது என்னவா னாலும், அவர்கள் கட்டிடத்தில் இருந்தால் அவர்களை நாம் அழைப்போம். அவர்கள் இல்லாவிட்டாலும், நாம் எப்படியும் ஜெபிப்போம். 12. இன்றைக்கு, ஒருவிதமாக விசுவாசத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு பொருளின் மேல் பேச விரும்புகிறேன். நீங்கள் ஏதாகிலும் ஒன்றை... இங்கு போதகர்கள் இருப்பார்களானால் - அவர்கள் இருக்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை - நீங்கள் ஜனங்களிடம் பேசும்போது, இரட்சிப்பைக் குறித்துப் பிரசங்கிக்கும் சூழ்நிலை இருக்குமானால், அப்பொழுது நீங்கள் ஜனங்களை இரட்சிப்புக்குள் அழைக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் சுகமளித்தலுக்கான சூழ்நிலையைப் பெற விரும்பினால், தேவனுடைய வார்த்தையின் மூலம் நீங்களே உங்கள் மேல் அபிஷேகத்தை முதலில் பெற்றுக் கொண்டு, அதன் பிறகு அதை ஜனங்களுக்கு அளிக்கிறீர்கள். அது முழு கூட்டத்தையுமே ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக அபிஷேகத்துக்குள் கொண்டு வருகிறது. அப்பொழுது நாம் ஒரு குறிப்பிட்ட காரியத்தை எதிர்பார்க்கிறோம். பாருங்கள், நாம் ஒன்றை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 13. அப்படியானால், அதை இன்னும் சிறிது உயரே கொண்டு செல்வோமானால், தேவன் இப்பொழுது தமது சபை அனைத்தையும், அதாவது வெளியே அழைக்கப்பட்ட மீதியான தமது சபையை, அவருடைய வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும்படி வைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன், பாருங்கள். அவருடைய முதலாம் வருகையின் போது, அவர் பண்டிகைக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டு, வாசலில் எதிர் நோக்குதல்கள் அந்த மகத்தான பெரிய வெள்ளிக் கிழமையன்று இருந்தன என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. அவர் ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்வாரென்று ஜனங்கள் எதிர்பார்த்து இருந்தனர். வேறு சிலர் அவரைக் காணவேண்டுமென்று விரும்பினர். மற்றவர் அவரைக் கேலி செய்ய வேண்டுமென்று நினைத்தனர். அவர் நகரத்துக்குள் சவாரி செய்து வந்த போது, அது நீண்ட காலத்துக்கு ஒரு வித்தியாசமான பஸ்காவாக இருந்தது. அவர் நம்மை வீட்டுக்கு அழைத்து செல்வாரென்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அப்பொழுது அவர், இந்த முறை வரும்போது, நம்மை அழைத்துச் செல்வார். 14. இப்பொழுது நாம் தலைவணங்கி அவருடன் பேசுவோம். இங்குள்ள ஜனங்களில் யாருக்காவது தேவனுக்குத் தெரியப்படுத்த விரும்பும் விண்ணப்பம் ஏதாகிலும் இருக்குமானால், உங்கள் கைகளையுயர்த்தி, "தேவனே, என் மேல் கிருபையாயிரும். எனக்கு இரட்சிப்பு தேவை. எனக்கு சுகம் தேவை. 'நான் உம்முடன் நெருங்கி நடக்க விரும்புகிறேன்” என்று சொல்வீர்களார் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கட்டிடம் முழுவதும் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. 15. எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுக்கு இந்த அற்புதமான கிருபையைக் கொண்டு வந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உமது கிருபாசனத்தை அணுகும் இந்நேரத்தில். பாவமில்லாத அவர் இறங்கி வந்து அபாத்திரராகிய எங்களுக்கு இரட்சிப்பை சம்பாதித்து தந்ததற்காக எங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு நாங்கள் எவ்வளவாக நன்றி செலுத்துகிறோம்-! நாங்கள் அபாத்திரராய் இருந்த போதிலும் அவருடைய இரத்தம் சிந்துதலினால் அவருக்கு சமீபம் ஆனோம். அவர் வார்த்தை என்னும் தண்ணீரினால் எங்களை சுத்திகரித்து அவருடைய பிதாவுக்கு முன்பாக கற்புள்ள கன்னிகைகளாக, சுத்திகரிக்கப் பட்டவர்களாக, அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக, கழுவப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டவர்களாக, தேவனுடைய பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கவர்களாக நிறுத்துவார். பலியானது கழுவப்பட்டதை நாங்கள் சிந்தித்துப் பார்க்கும் போது, அவர் தண்ணீருக்குள் நடந்து வருகிறதை யோவான் கண்ட போது, அவன், "நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாய் இருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா-?” என்று கேட்டதை நினைத்துப் பார்க்கிறோம். 16. இயேசு, “யோவானே, இப்பொழுது இடங்கொடு” என்றார். ஓ, அது எனக்கு பிரியம். வேறு விதமாகக் கூறினால், "யோவானே, நீ அந்த தீர்க்கதரிசி. நான் உன்னுடைய தேவன். இந்த நாளில் நாம் முக்கியமான மனிதர்கள். நீ புரிந்து கொள்கிறாய் என்று எனக்குத் தெரியும், நானும் புரிந்து கொள்கிறேன். ஆனால், யோவானே, ஞாபகம் கொள், இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.” பலி செலுத்தப்படும் முன்பு பலியானது கழுவப்பட வேண்டும் என்றும், அவரே அந்த பலியென்றும் யோவான் அறிந்திருந்தான். எனவே பாவமில்லாத அவருக்கு அவன் ஞானஸ்நானம் கொடுத்து, பலியானது செலுத்தப்படுவதற்கு முன்பு அதைக் கழுவினான். 17. தேவனே, எங்கள் இருதயங்களை இன்று காலை கழுவுவீராக. நாங்கள் எங்களை உம்மிடம் ஒப்புவிப்பதற்கென, எங்களை, வார்த்தை என்னும் தண்ணீரினால் கழுவுவீராக. கர்த்தாவே, எங்களை சகல அவிசுவாசத்தினின்றும் சுத்திகரித்து, நாங்கள் தேவனுக்குப் பரிசுத்தமும் பிரியமுமான ஜீவ பலியாக உமக்கு சமீபமாய் இழுத்துக் கொள்ளப்பட அருள் புரியும். இதுவே நாங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. இவைகளுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இங்கு வந்துள்ள ஒவ்வொரு நபருக்காகவும் உமக்கு நன்றி. நாடுகள் அனைத்திலும் உலகம் முழுவதிலும் வியாபித்துள்ள ஜீவனுள்ள தேவனுடைய சபையை நீர் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இன்று காலை எங்கெல்லாம் போதகர்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இருக்கிறார்களோ, தங்கள் கடமையில் நிலைத்திருக்கும் அந்த ஒவ்வொரு விசுவாசமுள்ள போதகர் மீதும், சுவிசேஷகர்கள் மீதும், மிஷனரிமார்கள் மீதும் உமது ஆவியை அற்புத விதமாய் பொழிந்தருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஓ தேவனே. வெளிநாடுகளில் ஊழியம் செய்யும் அவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களில் சிலருக்கு அணிய காலணிகள் கிடையாது. அவர்கள் கிழிந்து போன கால் சட்டையை அணிந்து கொண்டு, காடுகளின் வழியாக சென்று, கிறிஸ்துவை விட்டு தூரமாயுள்ளவர்களுக்கு சமாதானத்தையும் விடுதலையையும் கொண்டு வர அரும்பாடுபடுகின்றனர். 18. தேவனே. நாங்கள் இயேசுவை சீக்கிரம் அனுப்பும். கர்த்தராகிய இயேசுவே, வாரும்" என்று சொல்லுகிறோம். இப்பொழுது நாங்கள் இயற்கையை காண்கிறோம், சாஸ்திரிகளை பெத்லகேமுக்கு நடத்திய நட்சத்திரத்தைப் போன்ற அடையாளம் மறுபடியும் நகர்ந்து செல்கிறது. அது வேதனையின் காலமாயிருக்கும் என்றும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யம் எழும்பும் என்றும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள் தோன்றும் என்றும், கடல் கொந்தளிப்பு, பெரிய புயல்கள், பேரலைகள், பூமியதிர்ச்சிகள் பல இடங்களில் உண்டாகும் என்றும் இயேசு கூறினார். ஆனால் இவையனைத்தும்... எங்கள் இருதயங்களை உஷார்படுத்தும் மணி, கர்த்தாவே அதற்காக நாங்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறோம். அவர் எந்த நிமிடத்தில் அல்லது எந்த மணி நேரத்தில் வருவாரென்று நாங்கள் அறியோம். 19. நாங்கள் இன்று உம்மிடம் வரும்போது, உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கையின் பின்னால் மறைந்திருக்கும் இரகசியத்தை நிறைவேற்றி ஆசீர்வதித்து தருமாறு ஜெபிக்கிறோம். தேவனே. அதைக் குறித்து நீர் எல்லாம் அறிந்திருக்கிறீர்: கர்த்தாவே. அவர்களையும், அவர்களுடைய பலியையும் விருப்பத்தையும் கழுவி, அவர்களுடைய தேவையை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இன்று நாங்கள் உம்மண்டையில் வரும்போது. உம்மை இரட்சகராக அறிந்திராதவர் இருப்பார்களானால், இது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய நாளாய் அமைந்து, அவர்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு “ஆம்” என்று செல்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். 20. பிதாவே, உம்முடைய வார்த்தையைப் படித்து, ஜனங்களுக்கு விசுவாசத்தை ஊட்ட நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களை ஆசீர்வதிப்பீராக. தேவனே, உம்முடைய வார்த்தையை வல்லமையுடன் இந்தக் கட்டிடத்திலும், இந்த ஒலிநாடாக்கள் செல்லவிருக்கும் தேசங்களிலும் அயல் நாடுகளிலும், அது எங்கிருந்தாலும் நீர் அனுப்பி, அநேகர் தேவனுடைய மகிமைக்கென்று இரட்சிக்கப்பட்டு சுகமடைவார்களாக. இதை அவருடைய அன்பான பரிசுத்த குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 21. அவருடைய வார்த்தையை வாசிக்கும் போது, தேவன் தாமே தமது அபரிதமான ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக என்று நாம் ஜெபிப்போம். ஞாபகம் கொள்ளுங்கள், என் வார்த்தைகள் தவறிப்போம், அது மனிதனுடைய வார்த்தை, ஆனால் அவருடைய வார்த்தை தவறாது. "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” அது இன்று எத்தகைய நம்பிக்கையாய் உள்ளது-! நான் எட்டி பெர்ரோனெட்டுடன் சேர்ந்து, "இயேசு நாமத்தின் வல்லமையை எல்லோரும் ஆர்ப்பரியுங்கள், தேவதூதர்கள் சாஷ்டாங்கமாய் விழுவார்களாக. ராஜரீக கிரீடத்தைக் கொண்டு வந்து அவரை எல்லோருக்கும் கர்த்தராக முடிசூட்டுங்கள். நான் கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன்; மற்றெல்லா தரைகளும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலே” என்று பாட விரும்புகிறேன். 22. இப்பொழுது, எங்களுடன் சேர்ந்து படிக்கும் அநேகருக்கும், வேதபாகத்தையும் நான் குறிப்பெழுதியுள்ள வேதவசனங்களையும் குறித்துக் கொள்ளவிரும்புவோரு க்கும்; நாங்கள் இக்காலை பரி.மத்தேயு.15:21-லிருந்து படிக்கப் போகின்றோம். பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப்புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். அப்பொழுது, அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றபடியல்ல வென்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். மத். 15:21-28 23. இன்று காலை நாம் விசுவாசம் என்பதின் பேரில் பேச விரும்புகிறோம். இன்று காலையில் என் பொருள் "விடாமுயற்சி" விடாமுயற்சி என்றால் "தளராமல் தொடர்ந்து குறிக்கோளை நோக்கிச்செல்லுதல்” என்று பொருள் படும். இப்பொழுது, "விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது.” 24. நமக்கு ஒரு சரீரம் உண்டு. இங்குள்ள இந்த சரீரம் ஒரு விதையைப் போன்றது. ஒரு விதைக்கு வெளிப்பாகத்தில் ஓடு உள்ளது. அந்த ஓட்டுக்குளளே தோல், என்னை மன்னிக்கவும், சதை பாகம் உள்ளது. சதை பாகத்துக்குள்ளே ஜீவ அணு உள்ளது. நாமும் அப்படித்தான் இருக்கிறோம்: சரீரம், ஆத்துமா ஆவி. சரீரத்துக்கு ஐம்புலன்கள் உள்ளன: பார்த்தல், ருசித்தல், உணருதல் , முகர்தல், கேட்டல். ஆத்துமாவுக்கு மனச்சாட்சி போன்ற ஐந்து வழிகள் உள்ளன. 25. ஆனால் அதற்குள் ஒரே வழி மாத்திரமே. அந்த இடத்தில் தான் தேவன் ஆதாம் ஏவாள் முதற்கொண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் சுயசித்தம் என்பதை வைத்தார். நீ வாழ சித்தம் கொள்ளுகிறாய் அல்லது நீ மரித்துப் போவாய், இவ்விரண்டில் நீ விரும்பும் ஒன்று. அது உன்னுடைய சுதந்தரமான ஒழுக்கத் தன்மையை ஆதாரமாகக் கொண்டது. எந்த ஆவி உன்னை ஆட்கொள்ள நீ இடம் கொடுக்கிறாயோ, அதன் கனிகளை நீ தோன்றச் செய்வாய். உன் வாழ்க்கை உனக்கு உள்ளே இருப்பதைக் கொண்டு ஆட்கொள்ளப்படுகிறது. விசுவாசம் என்பது... எத்தனையோ பேர் வெளியே உள்ள இந்த ஐம்புலன்களின் மேல் சார்ந்து உள்ளனர். அவை நல்லவையே, அவைகளுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அவை இந்த ஆறாம் புலனுடன் ஒத்துப் போக வேண்டும். இந்த ஆத்துமா... இந்த ஆவி இரு வகைகளாக மாத்திரமே இருக்க முடியும், ஒன்று தேவனுடைய ஆவி, மற்றது பிசாசின் ஆவி. ஒரே நேரத்தில் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. நீங்கள் ஒன்றுக்கு உங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்க வேண்டும், அல்லது மற்றதுக்கு அர்ப்பணிக்க வேண்டும். உங்களுக்குள் தேவனுடைய ஆவி இருக்குமானால், உங்களுக்கு விசுவாசம் இருக்கும், அப்பொழுது தேவன் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிப்பீர்கள். உங்களுக்கு தேவனுடைய ஆவி இல்லாமல் போனால் நீங்கள் ஒருக்கால்... 28. சிலர் நினைக்கிறபடி பிசாசு "நீசமானவன்” அல்ல. அவன் வஞ்சிக்கிறவன். நீங்கள் சரியென்று பிசாசு உங்களை நினைக்கச் செய்வான். நீங்கள் வார்த்தை உடன் இணங்காமல் போனால், அது தேவனுடைய ஆவி அல்ல என்பதை அது காண்பிக்கிறது. ஏனெனில் வேதாகமத்தை எழுதியவர் பரிசுத்த ஆவியானவரே. அது வார்த்தையுடன் இணங்க வேண்டும். போன ஞாயிறு நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள், தேவனுடைய வார்த்தையின் பேரில் ஏவாள் கொண்ட ஒரு சிறு அவநம்பிக்கை. சாத்தான் அவளிடம் சத்தியத்தைக் கூறினான். வார்த்தை உண்மை என்பதை அவன் மறுக்கவே இல்லை. ஆனால் வார்த்தையின் அந்த ஒரு சிறு பாகம் அத்தனை தொல்லையையும் உண்டாக்கியது. அந்த ஸ்திரீ அதை அவிசுவாசித்தாள், ஏனெனில் அவள் வார்த்தையில் நிலைத்திருப்பதற்கு பதிலாக ஞானத்தை தேடிக் கொண்டு இருந்தாள். தேவன் ஒன்றைக் கூறுவாரானால், வானமும் பூமியும் ஒழிந்து போம். ஆனால் அவருடைய வார்த்தை ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு எழுத்தின் உறுப்பும் உட்பட நிறைவேற வேண்டும். எழுத்தின் உறுப்பு உட்பட அது நிறைவேற வேண்டும். 27. இப்பொழுது, விடாமுயற்சி, தளர்ந்து போகாமல் குறிக்கோளை நிறைவேற்ற பிரயாசப்படுதல். உங்கள் மனதை ஏதாவதொன்றின் மீது வைத்து தளர்ந்து போகாமல் அதில் உறுதியாய் நிற்றல். ஏனெனில் அது தான் உனக்கு வேண்டும் என்று நினைக்கிறாய், அதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று விசுவாசிக்கிறாய். இப்பொழுது, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றை தளராமல் செய்யும் போது, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்திராமல் அல்லது தேவனைக் குறித்து ஒன்றை அறிந்திராமல், தேவன் பேரில் விசுவாசம் கொள்ள முடியாது. 28. யாராவது ஒருவர் உங்களிடம், “நீங்கள் சென்று அந்த கம்பத்தைத் தொடுவீர்களானால் சுகமடைவீர்கள். நீங்கள் வியாதியாயிருக்கிறீர்கள்,” என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். அதை நான் நம்பமாட்டேன். ஒருக்கால் நீங்கள் நம்பலாம். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு என் விசுவாசத்துக்கு மிகவும் கடினம். ஒரு சொரூபத்தில் அல்லது ஒரு ஞாபகச் சின்னத்தில் அல்லது இயேசுவின் உருவைக் கொண்டிருக்கும் சிலுவையில் வல்லமை கிடையாது என்று நான் விசுவாசிப்பது போல, இந்த கம்பத்தில் வல்லமை உள்ளது என்று என்னால் விசுவாசிக்க முடியாது. 29. வல்லமை கிறிஸ்துவில் உள்ளதென்று நான் விசுவாசிக்கிறேன். கிறிஸ்து தான் வார்த்தை. ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார்”. வார்த்தையே மறுபடியுமாக பரிசுத்த ஆவியின் உருவில் உங்களுக்குள் வருகிறது. அது உங்களுக்குள் இருக்கும் வார்த்தை. தேவன் உங்களுக்குள் இருத்தல். அநேகர் தேவனை எட்டாத தூரத்திலுள்ள ஏதோ ஒரு புரிந்து கொள்ள முடியாதவராக சுட்டிக் காட்டுகின்றனர். அவர் அதிக தூரத்திலுள்ளபடியால் அவரை எட்டிப் பிடிக்க முயல்கின்றனர். தேவன் உங்களுக்குள் இருக்கிறார். கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார். கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கிறது. உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை, நீங்கள் தூரத்தில் எட்டிப் பிடிக்க முயல்கிறீர்கள். தேவன் மானிடரில் வாசமாய் இருத்தல் எல்லா ..... 30. கிறிஸ்து இவ்வுலகத்தில் இருந்த போது, தேவனுடைய சரீரமாயிருந்தார். தேவன் அந்த சரீரத்தை சிருஷ்டித்தார். அது வித்தியாசமான சரீரம், இருந்தாலும் அது மானிட சரீரம். சாலொமோன் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ஸ்தேவானோ, "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார், ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்,” என்றான் (அப்.7:48; எபி.10:5). தேவன் கர்த்தராகிய இயேசுவின் ரூபத்தில் தமக்கென ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினார். அவரே கிறிஸ்து. கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். தேவன் என்னவெல்லாமாக இருந்தாரோ, அது அனைத்தும் கிறிஸ்துவுக்குள் இருந்தது. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகா ரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. அப்படித் தான் வேதம் கூறுகிறது. தேவன் என்னவெல்லாமாக இருந்தாரோ அது அனைத்தையும் கிறிஸ்து வுக்குள் ஊற்றினார். அவர் இம்மானுவேல், தேவன் நம்மோடிருக்கிறார்-! 31. கிறிஸ்து என்னவெல்லாமாக இருந்தாரோ, அது அனைத்தையும் அவர் சபைக்குள் ஊற்றினார். அது என்ன-? அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர், அவருடைய வார்த்தை எப்பொழுதும் பிழைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய பணியைத் தொடர்ந்து செய்தல். அவர் தம்முடைய பிதாவின் வார்த்தையினால் பிழைத்தார். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திர மல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். சபை அப்பத்தினால் மாத்திரமல்ல, கிறிஸ்துவின் வார்த்தை யினால் பிழைக்கிறது. பரிசுத்தாவி வந்து கிறிஸ்துவின் வார்த்தையை எடுத்து அதை செயல்முறையில் ஜீவிக்கும்படி செய்கிறது. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்”. 32. பாருங்கள், தேவன் - மாற முடியாது. தேவன் ஒரு தீர்மானத்தை செய்வார் ஆனால், அது அவ்விதமாகவே நிலைத்திருக்க வேண்டும். அவர் அதை மாற்றினால், அவர் என்னைப் போல் ஒரு மானிடனாகக் கருதப்படுவார். அவர் தவறு செய்கின்ற ஒரு மனிதனாகி விடுவார். ஆனால் அவரோ முடிவற்றவர்-! அவர் முடிவற்றவர், சர்வசக்தி வாய்ந்தவர். அவர் தவறு செய்து விட்டு தேவனாக இருக்க முடியாது. எனவே அவருடைய முதல் தீர்மானம்... மனிதன் பாவம் செய்த போது, அவர், அவனை அவருடைய வார்த்தையை விசுவாசித்தல் என்னும் அடிப்படையில் மன்னித்தார். அடுத்த மனிதன் வரும் போது. அவர் அதே விதமாக நடந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர் முதன் முறை தவறாக நடந்து கொண்டார். ஒரு மனிதன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தினால் தெய்வீக சுகமளித்தலினால் சுகமடைந்தால், அவர் அதை முதலாம் மனிதனுக்கு அருளி இருந்தால், அடுத்த மனிதன் வரும் போது, தேவன் அதே அடிப்படையில் அவனிடமும் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், அவர் பட்சபாதம் உள்ளவர், அவர் பாரபட்சமாக நடந்து கொண்டார். அது நிச்சயம் அவரை தேவனாகச் செய்ய முடியாது. பாருங்கள்-? 33. நீங்கள் செய்வதில் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் நம்மைக் குற்றப்படுத்தாதிருந்தால்". வேதம் ஒன்றைப் போதிக்கிறது என்று நாம் அறிந்தும் அதை நாம் செய்யத் தவறினால், நமக்கு அதன் பேரில் விசுவாசம் இருக்க முடியாது. பாருங்கள், நீங்கள் உங்களை ஒன்றாக சேர்த்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் போதித்த சில காரியங்களை உங்களால் கைக்கொள்ள முடியவில்லை. அப்படி நீங்கள் செய்வீர்களென்றால், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்-? பாருங்கள், நீங்கள் எதற்காக வந்து இருக்கிறீர்களோ, அதற்கு உங்களுக்கு விசுவாசம் இருக்க முடியாது. நீங்கள் இங்கு வந்து, "நேற்று இரவு நான் குடிபோதையில் இருந்தேன். கர்த்தாவே, இன்று காலை நீர் என்னை சுகமாக்க வேண்டுகிறேன். நான் அதிகமாக குடிக்க மாட்டேன்” என்று கூற முடியாது. நீங்கள் உங்களை தேவனிடம் முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும். அவருடைய வார்த்தையின் ஒவ்வொரு சிறிய பாகத்தையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். உங்களை முழுவதுமாக அர்ப்பணித்து, அதன் பிறகு வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த வார்த்தை சபையில் உள்ளது. அது ஜீவிக்கிற வார்த்தை . 34. வேதம், "தேவனுடைய வார்த்தையானது விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்ட விதைக்கு ஒப்பாயிருக்கிறது" என்கிறது. நீங்கள் களையை விதைத்து கோதுமையைப் பெற முடியாது. நீங்கள் கோதுமையை விதைத்தால், கோதுமையை அறுப்பீர்கள். நீங்கள் களையை விதைத்தால், களையை அறுப்பீர்கள். எனவே நீங்கள் தேவனுடைய வார்த்தையை உடையவர்களாய் இருக்க வேண்டும். 35. எந்த ஒரு விசுவாசியும் தேவனுடைய வார்த்தையை முன் காலத்தில் எங்கோ வைத்து, அவரை பலவீனராகவும் சரித்திரப் பிரகாரமான தேவனாகவும் செய்துவிட மாட்டான். அவர் சரித்திரத்தில் உள்ள தேவன் என்பது உண்மை தான், ஆனால் அவர் மாறாதவராயிருக்கிறார்” என்று வேதம் உரைக்கிறது. "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று எபி. 13:8 உரைக்கிறது. எனவே அவர் சரித்திரத்தில் எவ்வளவாக இருந்தாரோ, அவ்வளவு இன்றும் இருக்கிறார். அவர் தமது வல்லமையை இழந்து விட முடியாது. பலவீனம் எங்குள்ளது என்றால், இந்த வல்லமை தொடக்கத்தில் ஆதி அப்போஸ்தல சபையில் விழுந்தது. ஆனால் நாம் என்ன செய்து விட்டோம்-? நாம் அந்த சபையை எடுத்து, ஐக்கியத்தை முறித்துப் போட்டு, வெவ்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த ஜனங்களையும் ஸ்தாபனங்களையும் உண்டாக்கிக் கொண்டு, முடிவில் அது ஒன்றுமில்லாத ஒரு பெரிய குழப்பமாகி விட்டது. வார்த்தைக்குத் திரும்புங்கள்-! தேவனிடத்தில் திரும்புங்கள்-! ஜீவிக்கிற வார்த்தைக்குத் திரும்புங்கள் -! 36. வேதாகமம் உரைத்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அது செயல் படுத்தாமல் போனால், அதன் மேல் எனக்கு விசுவாசம் இருக்க முடியாது. ஆனால் அது உரைத்துள்ள "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்னும் வார்த்தையை நான் முதலாவதாக சோதித்து பார்த்த போது, அது உண்மையாயிருந்தது. அப்படி ஆனால் இது வார்த்தை தானா அல்லது வார்த்தை இல்லையா-? அது வார்த்தையாய் இருக்குமானால், அது வாக்குத்தத்தம் செய்துள்ள எல்லாவற்றை யும் செயல்படுத்த வேண்டும். அது வார்த்தை இல்லையென்றால், அப்பொழுது அது... எது சரி, எது தவறு-? என்னைப் பொறுத்த வரையில் அது எல்லாமே தேவனுடைய வார்த்தையாயிருக்க வேண்டும், இல்லை யென்றால் எதுவுமே தேவனுடைய வார்த்தை அல்ல. எல்லாமே அல்லது எதுவும் அல்ல, இரண்டில் ஒன்று. எனவே நான் அதன் ஒவ்வொரு பிரமாணத்தையும், ஒவ்வொரு வரிசையையும், ஒவ்வொரு நிறுத்துக் குறியையும் (punctuation) ஒவ்வொரு காற் புள்ளியையும் (comma), ஒவ்வொரு இணைக்கும் இடைக்குறியையும் (hyphen) விசுவாசிக்கிறேன். முழுவதுமே தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசித்து, என் ஆத்துமாவை அதன் மேல் சார்ந்திருக்கும்படி செய்து இருக்கிறேன். 37. ஒரு கம்பத்தைத் தொடுவதோ, வேறெதையாகிலும் தொடுவதோ, பழங் குடியினரின் மரபுச் சின்னம் கொண்ட கம்பத்தை (totem-pole) தொடுவதோ, அல்லது ஏதோ ஒரு மனிதனை அல்லது ஸ்திரீயைத் தொடுவதோ அல்ல. அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதன் மூலம், தேவனைத் தொடுவதில் மாத்திரம் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் செய்யும்போது, அந்த வார்த்தை உங்களுக்குள் ஜீவனுள்ள வார்த்தையாக மாறுகிறது. தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றுமே ஜீவனைப் பெறுகிறது. நீங்கள் ஒரு கைப்பிடி கோதுமையை அள்ளி அதை இந்த மேடையின் மேல் பிடிப்பீர்கள் ஆனால், அது இங்குள்ளதனால் ஒரு உபயோகமும் இல்லை. அது நிலத்தில்: விதைக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்ல, அது வளர வேண்டுமானால் அது சரியான நிலமாக இருக்க வேண்டும். நல்ல வார்த்தை தரிசு நிலத்தில் விழுந்தால், அது குறைந்த விளைச்சலைத் தரும். நீங்கள் நல்ல தானியங்களை எடுத்து நல்ல நிலத்தில் விதைத்தால், அது சரியான சூழ்நிலையில் நூறாக பலன் தரும். அவ்வாறே தேவனுடைய வார்த்தையானது விசுவாசம் கொண்டு உள்ள கர்த்தராகிய இயேசுவின் மேல் தீராத விசுவாசம் கொண்டுள்ள மனித இருதயத்தில் கொண்டு வரப்பட்டு, பரிசுத்தாவி மற்றும் தேவனுடைய வல்லமை என்னும் தண்ணீரை அதற்கு பாய்ச்சினால், அது ஜீவனடைந்து, அது செய்வதாக சொன்ன எல்லாவற்றையும் தோன்றச் செய்யும். அது வார்த்தை. அது தேவனுடைய வார்த்தை . 38. இயேசு, யோவான் 14:12ல், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" என்றார். நான் நிச்சயம் அதை விசுவாசிக் கிறேன். "இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் சரியான மொழிபெயர்ப்பு "இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளைச் செய்வீர்கள். நீங்கள் அவரைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்ய முடியாது. அவர் இயற்கையை நிறுத்தினார், மரித்தோரை எழுப்பினார். அவர் எல்லாவற்றையும் செய்தார். வேறு விதமாகக் கூறினால், தேவன் கிறிஸ்து என்னும் ஒரு மனிதனில் வெளிப்பட்டார். இப்பொழுது அவர் உலகம் முழுவதும் உள்ள தமது சபையில் வெளிப்பட்டிருக்கிறார். அதே கிரியைகள். ஆனால் "இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகள்”. 39. அண்மையில் ஒருவர் என்னிடம் சிறிது குற்றம் கண்டுபிடிக்கும் விதத்தில்," இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்' என்று சொன்னார். நாங்கள் பெரிய காரியங்களைச் செய்கின்றோம்,” என்றார். 40. நான் அவரிடம், "நீங்கள் பெரிய காரியங்களைச் செய்யும் முன்பு சிறிய காரியங்களைச் செய்யுங்கள். உங்கள் சிறிய காரியங்களை எனக்குக் காண்பியுங் கள் பார்க்கலாம்,” என்றேன். நீங்கள் அதை திரித்து, அது வேறொன்றைக் கூறும்படி செய்யலாம். ஆனால் அப்பொழுதும் அது அதே வார்த்தையாகவே இருக்கும். அதை விசுவாசிக்க போதிய விசுவாசம் கொண்டுள்ள யாரையாகிலும் நீங்கள் கவனியுங்கள், தேவன் செய்த விதமாகவே அந்த கிரியைகள் அவரில் வெளிப்படும். இன்று நம்மிடையே உணர்ச்சியின் அடிப்படையில் எத்தனையோ காரியங்கள் உள்ளன. அதற்கு விரோதமாக சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. அது தனிப்பட்ட நபருக்கும் தேவனுக்குமிடையே உள்ள விவகாரம். 41. ஆனால் என்னைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் இந்த வேதாகமத்தில் இருந்து வரவேண்டும். அது தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும், அப்பொழுது அது உண்மை என்று நான் அறிந்து கொள்வேன். வேதாகமம் ஒன்றை ஆதரித்து, ஒரு வாக்குத் தத்தத்தின் மூலம் அது உண்மையென்று உரைக்குமானால், அது உண்மை. விசுவாசத்தைக் கண்டு கொண்ட யாராகிலும் ஒருவர் அந்த வார்த்தையில் நிலை நின்று அதை மறுபடியும் ஜீவிக்கச் செய்கிறார். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை நாம் தேவனுடைய வார்த்தையில் காணும் போது, அதை விடாமுயற்சியுடன் பற்றிக் கொள்ளலாம். நாம் உண்மையில் விசுவாசித்து அதில் நிலைத்திருக்கலாம், ஏனெனில் அது தேவனுடைய வாக்குத்தத்தம். அது நிறைவேற எவ்வளவு காலம் சென்றாலும் பரவாயில்லை, அதில் நிலைத்திருங்கள், அப்பொழுது அது நிறைவேறும். 42. உங்களுக்குத் தெரியுமா, ஒரு முறை அவர் கடுகு விதையைக் குறித்துப் பேசினார், அதாவது கடுகு விதையளவுள்ள விசுவாசம். இது மிகச் சிறியது. கடுகு விதை இன்று பூமியிலுள்ள எல்லா விதைகளைக் காட்டிலும் மிகச் சிறிய விதை. ஆனால் அது ஏன்-? அது எந்த விதையுடனும் கலக்காது. கடுகு விதை வேறு எந்த விதையுடனும் கலக்காது. நீங்கள் முட்டை கோஸ் விதையையும் பசலைக் கீரை விதையையும் கலந்து 'ரேப்' செடியை உண்டாக்கலாம் ('ரேப்' செடி என்பது ஒரு வகை எண்ணெய் வித்து செடி - தமிழாக்கியோன்). நீங்கள் விதைகளைக் கலந்து வெவ்வேறு செடிகளைத் தோன்றச் செய்யலாம். ஆனால் கடுகு விதையோ எதனுடனும் கலவாது, நீங்கள் அதை எதனுடனும் கலக்க முடியாது என்று அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். அது கடுகு விதையாயிருந்தால், எப்பொழுதும் கடுகு விதையாகவே இருக்கும். 43. ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் போது, அந்த விசுவாசம் எவ்வளவு குறைவுள்ளதாயிருந்த போதிலும் அது அவிசுவாசத்துடன் கலவாது. அது அவனை வெளிச்சத்துக்கு கொண்டு வரும். நம்மில் சிலருக்கு அற்புதங்களைச் செய்யும் அளவுக்கு மிகுந்த விசுவாசம் உள்ளது. வேறு சிலருக்கு அது நிறைவேறும் வரைக்கும் அதைப் பற்றிக் கொள்ளும் அளவுக்கு விசுவாசம் உள்ளது. ஆனால் அது உண்மையான விசுவாசமாய் இருக்குமானால், நீங்கள் ஒரு முறை அதை பற்றிக் கொள்ளும் போது, எதுவுமே உங்களை அதிலிருந்து அசைக்க முடியாது. அது கலவாது. அப்பொழுது, அந்த நபர் அது நிறைவேறும் வரைக்கும் விடாப்பிடியாய் உறுதியாய் இருக்கிறார். அவருக்கு விடாமுயற்சி உள்ளது. எத்தனை பேர் அவரிடம், "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று சொன்னாலும் அவர் அதை நம்பமாட்டார். அவர் பற்றிக் கொண்டு இருக்கிறார், ஏனெனில் அவர் நிபந்தனைகளைச் சந்தித்து அந்த வார்த்தையை, விசுவாசிக்கும் தனது இருதயத்தில் ஆழமாகப் பதியச் செய்து இருக்கிறார். அதில் அவர் நிலைத்திருக்கிறார். 44. அதை நான் அறிந்திருக்கிறேன். ஜனங்களிடமிருந்து புற்று நோய் விலகிச் செல்வதை நான் கண்டிருக்கிறேன். உலகம் முழுவதிலும் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள் சொஸ்தமடைவதையும் மரித்தோர் உயிரோடு எழுவதையும் நான் கண்டிருக்கிறேன். அது உண்மையென்று எனக்குத் தெரியும். உண்மை-! தரிசனத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்ட கிரியைகள், அப்பொழுது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது தேவனுடைய சித்தம் என்ன என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். வேதத்திலுள்ள ஒரு வாக்குத்தத்தம் ஒரு குறிப்பிட்ட காரியத்தை உங்களுக்கு கூறுமானால், அது தேவனுடைய வார்த்தை. அப்பொழுது அவர் தமது ஆவியை மறுபடியும் சபைக்கு அனுப்பி, வரங்களை அளித்து, சிறு வேறுபாடுகளை அகற்ற தம்மை வெளிப்படுத்தி, தம்மை நமது மத்தியில் தத்ரூபமுள்ளவராகச் செய்கிறார். ஓ. என்ன, அவர் நம்மிடம் வந்து தம்மை அவ்வளவாக அறியப்படுத்தி, தம்மை சரீரத்தில் வெளிப்படுத்தும் போது, வேறெதை நாம் கேட்க முடியும்-? தேவன் தமது ஜனங்களின் நடுவே இருத்தல். 45. "கொஞ்சக் காலம் உலகம்”, உலகம், அதற்கான காஸ்மாஸ் என்னும் கிரேக்கச் சொல் "உலக ஒழுங்கு" என்று பொருள்படும். அது புதைந்து போகும். ஒவ்வொரு உலக ஒழுங்கும், சாத்தானின் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு நாடும் புதைந்தே ஆகவேண்டும். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது, அது இனிமேலும் அவ்வாறே இருக்கும் - இஸ்ரவேல் நாட்டைத் தவிர, அவர்கள் ஒரு நாடாகும் போது... சாத்தான் இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டு சென்று உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்து - இருந்தவைகளையும், இனி வரப்போகிறவைகளையும் - "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்,” என்றான். 46. அவர், "அப்பாலே போ, சாத்தானே” என்றார். ஆயிரம் வருட அரசாட்சியில் இவையெல்லாம் அவருக்குச் சொந்தமாகும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் ஒவ்வொன்றும்... உலகத்தை ஒரு காலத்தில் பார்வோன்கள் ஆட்சி செய்த இடத்தில் நான் நின்றேன். அவர்களுடைய ராஜ்யங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் பூமிக்கு அடியில் இருபது அடி தோண்ட வேண்டும், அவர்கள் ஒரு காலத்தில் உட்கார்ந்திருந்த சிம்மாசனங்கள், ரோமாபுரியின் சீஸர்கள், எகிப்தின் பார்வோன்கள், இவையெல்லாம். உலகம் நீடித்திருக்குமானால், இந்த ஜனநாயக நாடுகளும் அதேகதியை அடையும். ஆனால் அங்கு ஒரு... அவர்கள் எல்லோரும் எதைக் குறித்துப் பேசுகின்றனர்-? மனித இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று ஒற்றுமையைக் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கிறது. 47. நீங்கள் மாத்திரம் கவனிப்பீர்களானால், ஒற்றுமை என்பது தேவனிடத்தில் இருந்து வருகிறது. அது தேவனுடைய வல்லமையினால் உண்டாகிறது. விசுவாசி - தேவன் இவ்வுலகில் சிருஷ்டித்த அந்த சிருஷ்டி - தேவனுடன் இணையும் போது, ஒரு ஒற்றுமை உண்டாகி அது விசுவாசத்தை அளிக்கிறது. ஒரு மனிதன் அதைக் காணும்போது, அதில் தளராமல் உறுதியாய் நிற்கிறான். யாருமே அவனை அசைக்க முடியாது. 48. இயேசு இங்கு, "நான் செய்கிற கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். கொஞ்சக் காலம் உலகம் (காஸ்மாஸ்) என்னைக் காணாது," என்றார். அதாவது உலக ஒழுங்கு. “அவர்கள் என்னைக் காணமாட்டார்கள்". 49. ஸ்தாபன சபைகளுக்குச் சென்று கொண்டிருக்கும் அநேக அங்கத்தினர்கள், அருமையான மக்கள், அவர்கள் செய்வது சரியென்னும் கருத்தை உடையவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். ஸ்தாபன சபை அங்கத்தினர் என்னும் முறையில் நீங்கள் சரியல்ல. நீங்கள் ஒரு குடிமகன். நீங்கள் சரியானதை செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் நண்பனே, இதை உன்னிடம் கூற விரும்புகிறேன், நீ மறுபடியும் பிறக்க வேண்டும். நீ கைகளை குலுக்குவதன் மூலம் சபைக்குள் வருவதில்லை. நீ அங்கத்தினர் ஆவதன் மூலம் சபைக்குள் வருவதில்லை. நீ பிறப்பின் மூலமே சபைக்குள் வருகிறாய். 50. நான் ஐம்பத்திரண்டு ஆண்டு காலமாய் பிரான்ஹாம் குடும்பத்தில் இருந்து வருகிறேன். என் பெயரை பிரான்ஹாமாக செய்வதற்கு நான் குடும்பத்தை சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் என்னிடம் கேட்டதில்லை. நான் பிரான்ஹாமின் குடும்பத்தில் பிறந்தேன். நான் பிறப்பின் மூலம் ஒரு பிரான்ஹாம். 51. அது போன்று நீங்களும் பிறப்பின் மூலமே கிறிஸ்தவராகின்றீர்கள் - நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறக்கும் போது. தளராமல் விடாப்பிடியாய் உறுதியாய் இருத்தல்-! ஆம், அப்பொழுது தான் நீங்கள் ஏதாவதொன்றை சாதிக்க முடியும். காலங்கள் தோறும் வாழ்ந்த மனிதர் எப்பொழுதும் சாதிக்க முடிந்தது... அவர்கள் சாதிக்க முயன்றதில் அவர்களுக்கு விசுவாசம் இருந்ததால், அவர்கள் தளராமல் உறுதியாய் நின்றனர். நீங்கள் சாதிக்க விரும்புவது என்னவென்பதை அது பொறுத்தது. நீங்கள் எதைச் செய்ய முயல்கிறீர்கள் என்பதையும், நீங்கள் தளராமல் உறுதியாய் இருக்கிறீர்களா இல்லையாவென்றும், நீங்கள் செய்வதில் உங்களுக்கு எவ்வளவு விசுவாசம் உள்ளதென்பதையும் அது பொறுத்தது. நமக்கு தேவனிடத்தில் விசுவாசம் இருக்க வேண்டும், நாம் தேவனை விசுவாசிக்க வேண்டும். 52. இப்பொழுது. நான் குறிப்பிட விரும்பும் அநேக வேதவசனங்களை இங்கு எழுதி வைத்து இருக்கிறேன். ஒரு மனிதன் தளராமல் உறுதியாய் நிற்க முயன்றால், அவன் செய்வதில் அவனுக்கு விசுவாசம் தரக்கூடிய ஒன்று முதலாவதாக அவனுக்கு இருக்க வேண்டும். வேதாகமம், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று உரைத்திருப்பது முதலாவதாக நமது நினைவுக்கு வருகிறது. அதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன், கிறிஸ்து. இவ்வுலகில் இருந்த போது, அவர், "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்," என்றார். “நீங்கள் உலகமெங்கும் போய்” என்று மாற்கு 16 உரைக்கிறது. அதுவே இயேசு சபைக்கு அளித்த கடைசி சொற் பொழிவு. கவனியுங்கள். 53. அவர் சபைக்கு அளித்த முதலாம் கட்டளை, அவர் வருவதற்கு முன்பு பட்டணங்களுக்குச் சென்று மத்தேயு.10- "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தம் ஆக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்பு ங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்” என்பதே. அதுவே அவர் சபைக்கு அளித்த முதலாம் கட்டளை. 54. கடைசி கட்டளை, அவர் போகும் போது அவருடைய உதடுகளிலிருந்து பிறந்த கடைசி சொற்கள்; அவர், ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும் வரும் வரைக்கும் இது கைக்கொள்ளப்பட வேண்டிய கட்டளை. அவர், "நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவனோ இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கப் படுவான். மற்றும் (And)...” 'மற்றும்' என்பது இரண்டு வாக்கியங்களை இணைக்கும் இணைச்சொல் (Conjunction) (இது தமிழ் வேதாகமத்தில் இடம் பெறவில்லை-தமிழாக்கியோன்). "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையா ளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதென்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். ''அவர்கள் சந்தோஷத்தோடேதிரும்பி வந்தார்கள். கர்ததர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்” என்று வேதம் உரைக்கிறது. பாருங்கள்-? அவர்களுக்கு... அவர்கள் தளராமல் இதில் உறுதியாய் நின்றார்கள். ஏனெனில் அவர்களுக்கு சாதிக்க ஏதோ ஒன்று இருந்தது. அவர்களுக்கு நேரடியான கட்டளை இருந்தது. அந்தக் கட்டளை எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்-? உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும். எத்தனை சந்ததிகளுக்கு-? ஒவ்வொரு சந்ததிக்கும், சர்வ சிருஷ்டிக்கும். 55. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொ ருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளை களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். அப்படியிருக்க, நீங்கள் பரிசுத்த ஆவியும் தேவனுடைய வல்லமையும் முன்பு எப்பொழுதோ இருந்த சந்ததிக்கு (சரித்திரத்துக்கு முன்பிருந்த காலத்துக்கு) உரியது என்று எப்படி கூற முடியும்-? அவர்கள் அவ்விதம் சொல்வார்கள் என்று தேவன் அறிந்திருந்தார். ஆகையால் தான் அவர் "உங்களைத் திக்கற்றவர்களாக (Comfortless) விடேன். நான் பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்வேன், அப்பொழுது அவர் வேறொரு தேற்றரவாளனை (Comforter), பரிசுத்தாவியை, உங்களுக்கு அனுப்புவார். இன்னும் கொஞ்சக்காலம் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான்...” 'நான்' என்பது தனிப்பட்ட பிரதிப் பெயர் (personal pronoun). உங்கேளாடிருந்து, முடிவுபரியந்தம் உங்களுக்குள் இருப்பேன்” என்றார். ஆமென். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். தேவன் தமது சபையில், தமது ஜனங்களுக்குள் இருக்கிறார். 56. சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எந்த ஸ்தாபனம்-?" அவர் ஸ்தாபனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேவன் தனிப்பட்ட நபர்களுடன் ஈடுபடுகிறார் - அவரை விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனிடமும், ஒவ்வொரு ஸ்திரீயிடமும், ஒவ்வொரு பையனிடமும், ஒவ்வொரு பெண்ணிடமும். அவர்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் கவலையில்லை. அவர் பசியுற்ற இருதயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். 57. இப்பொழுது, தளராமல் அதில் ஈடுபட்டிருத்தல், ஏதோ ஒன்றைச் சாதிக்க. காலங்கள் தோறும் மனிதர் அவ்வாறே இருந்து வந்துள்ளனர். இப்பொழுது நாம் நோவாவை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவன் தேவனுடைய சித்தத்தைக் கண்டு கொண்ட பிறகு, தளராமல் அதில் உறுதியாய் ஈடுபட்டு இருந்தான். 58. நீங்கள் முதலில் தேவனுடைய சித்தத்தைக் கண்டு கொள்ள வேண்டும். நீங்கள் ஜெபித்துக் கொள்ள வரும் போது, தேவனுடைய சித்தத்தை நீங்கள் இக்காலை வேளையில் கண்டு கொள்ள வேண்டும் - உங்களுக்கு சுகமளிப்பது தேவனுடைய சித்தமா இல்லையாவென்று. அடுத்தபடியாக நீங்கள் செய்ய வேண்டியது, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள நீங்கள் வருவீர்களானால், உங்களை இரட்சிப்பது தேவனுடைய சித்தமா இல்லையாவென்று நீங்கள் கண்டு கொள்ள வேண்டும். முதலாவதாக நீங்கள் தேவனுடைய சித்தம் என்னவென்பதைக் கண்டு கொள்ள வேண்டும். அதன் பிறகு, நீங்கள் உண்மையில், அந்த விதையை உங்கள் இருதயத்தில் பெற்றிருந்தால், நீங்கள் உறுதியாய் அதில் ஈடுபடலாம். எதுவுமே உங்களை அசைக்க முடியாது. நுண்ணறிவுள்ள மனிதன் எவ்வளவாக "இது அப்படியல்ல, இது இதுவல்ல, அதுவல்ல, மற்றதல்ல” என்று சொல்ல முனைந்தாலும், உங்களை அது ஒரு அணுவும் கூட அசைக்காது, ஏனெனில் தேவனுடைய சித்தம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் உரைத்து உங்கள் இருதயத்தில் வைத்தார், உங்கள் விசுவாசம் அங்கு நிலைத்திருக்கிறது, அது கடுகு விதையளவு சிறியதாயிருந்தாலும் அங்கு பற்றிக் கொண்டிருக்கும். அது உங்களை அந்த இடத்துக்கு கொண்டு வந்து விடும். தேவனுடைய சித்தம். 59. ஜலப்பிரளயம் வரப்போகிறதென்றும், அது உலகத்தை அழிக்குமென்றும், இயற்கை கோபம் கொள்ளப் போகிறது என்றும் தன்னுடன் உரைக்கிற தேவனுடைய சத்தத்தை, நோவா கேட்டான். "நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்,” என்று இயேசு கூறவில் லையா-? இயற்கை கோபத்துடன் நடந்து கொள்ளும், அதை நாம் இன்று காண்கிறோம். 60. இங்கு ஒரு நிமிடம் நிறுத்த விரும்புகிறேன். நான் பம்பாய்க்கு சென்றே போது, அங்கு எங்களுக்கு... கர்த்தர் எங்களுக்கு இதுவரை இல்லாத மிகத் திரளான ஜனக் கூட்டத்தை அருளினார். ஒரே கூட்டத்திற்கு பிரசங்கத்தைக் கேட்க 5 லட்சம் பேர் வந்திருந்தனர். செய்தித்தாளில் ஒரு செய்தி காணப்பட்டது. அதை நான் படித்துக் கொண்டிருந்தேன். அது, "பூமியதிர்ச்சி நின்று போயிருக்க வேண்டும். பூமியதிர்ச்சி உண்டாவதற்கு சில நாட்களுக்கு முன்பு...” என்றது. இந்தியாவில் அவர்கள் ஏழைகள், மிகவும் ஏழைகள். அவர்கள் பாறைகளைக் கொண்டு வேலிகள் அமைப்பார்கள். பாறைகளில் கூடு கட்டி தங்கியிருந்த சிறு பறவைகள், தங்கள் கூடுகளை விட்டுப் பறந்து வயலுக்குச் சென்று மரங்களில் உட்கார்ந்து கொண்டன. சுவர்களைச் சுற்றி நின்ற மாடுகள் கடும் வெயிலில் வயலுக்குச் சென்று விட்டன. அவை நிழலில் நிற்காமல், வெயிலில் நின்றன. இந்த விசித்திரமான சம்பவத்தின் காரணம் என்னவென்று அவர்களுக்குப் புரியவில்லை. அப்பொழுது திடீரென்று பூமியதிர்ச்சி உண்டாகி சுவர்களைக் கீழே தள்ளினது. அந்த சிறு பறவைகள் அந்த சுவர்களில் தங்கியிருந்தால், அவை கொல்லப்பட்டிருக்கும். மாடுகள் அவைகளின் கீழ் நின்றிருந்தால், அவைகளும் கொல்லப்பட்டிருக்கும். 61. நோவாவின் காலத்தில் பறவைகளையும் மிருகங்களையும் எச்சரித்த அதே தேவனை உங்களால் காண முடிகிறதல்லவா-? தேவன் அந்த பறவைகளுடன் ஈடுபட்டிருக்கும் போது நீங்கள் ஏன் அதை முன்னெச்சரிக்கை (premonition) என்றோ அல்லது வேறெதாவது பெயரில் அழைக்க வேண்டும்-? பூமியதிர்ச்சி உண்டாவதற்கு முன்பு இந்த பறவைகள் அங்கிருந்து பறந்து செல்வதற்கு தேவன் அவைகளுக்கு உள்ளுணர்வை (instinct) அளித்திருந்தார். தேவன் ஒரு அடைக்கலான் குருவிக்காக அவ்வளவு கவலை கொண்டு அதை சுவற்றில் இருந்து அகற்றுவாரானால், நீங்கள் அடைக்கலான் குருவியைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர்கள்-! அவர் தமது சொந்தமானவர்களுக்காக எவ்விதம் கவலை கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். 62. இந்த கட்டிலில், டோலியில் கிடக்கும் சகோதரியே, அவர் அடைக்கலான் குருவியைப் போஷித்து, வயலைக் காட்டுப் புல்லினால் உடுத்துவிப்பாரானால், அவர் உனக்காக எவ்வளவு அதிகம் கவலை கொள்வார்-! நீ அடைக்கலான் குருவியைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவள்-! எண்ணங்கள் என்னவாய் இருந்தாலும், தேவன் மேல் விசுவாசமுள்ளவளாயிரு. இது தேவனுடைய வார்த்தை. அதை பற்றிக் கொள், அதில் உறுதியாயிரு. அதை விசுவாசி. அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொள். 63. பூமியதிர்ச்சி நின்றவுடன், அந்த சிறு பறவைகள் மறுபடியும் பறந்து வந்து, பாறைகளில் கூடு கட்டி அங்கு தங்கின. மாடுகளும் அவ்விதமே திரும்பி வந்தன. 64. நோவாவின் காலத்தில் இருந்த தேவன். நோவா-! நீங்கள் நினைக்கலாம், விஞ்ஞானம் அவனிடம் கூறியிருக்கும்.... இப்போதைக்காட்டிலும் அப்பொழுது அவர்களுக்கு சிறந்த விஞ்ஞானம் இருந்தது. இப்போதைக்காட்டிலும் அப்பொழுது அவர்கள் பெரிய காரியங்களைச் சாதித்தனர். அவர்களிடம் ஒரு சாயம் இருந்தது. அது இன்று வரைக்கும் போகாமல் அப்படியே கெட்டியாக உள்ளது. அவர்கள் பெற்றிருந்த சவத்-தைலத்தால் 'மம்மி'களை உண்டாக்கினர். அவ்விதம் இன்று நம்மால் செய்ய முடியாதென்று நான் கேள்விப்படுகிறேன். வேறொரு காரியம், அவர்கள் கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டினர். இன்று யாரால் கூர்நுனிக் கோபுரத்தைக் கட்ட முடியும்-? அந்த பிரம்மாண்டமான உருண்ட பாறைகள் அவ்வளவு உயரத்தில் உள்ளன. நான் அங்கு நின்று கொண்டு பார்த்தேன், அந்த ஸ்பின்களையும் பார்த்தேன். அவைகளை ஒரு அடி உயர்த்த அநேக பாரம் தூக்கும் இயந்திரங்கள் தேவைப்படும். அவர்கள் எவ்விதம் அந்த பாறைகளை அவ்வளவு உயரத்துக்கு தூக்கினர்-? பெட்ரோல் சக்தி அதற்கு போதாது. நம்மிடம் அதைப் போன்ற எதுவுமே கிடையாது. அது அணுசக்தியாகத் தான் இருக்க வேண்டும். அந்த அணுசக்தி தான் பூமியை அதன் சுழற்பாதையில் இருந்தும் சூரியனில் இருந்தும் விலக்கி அதை பின்னால் தள்ளி, மழையை உண்டாக்கி, அந்த அழிவு ஏற்படக் காரணமாயிருந்திருக்க வேண்டும். 65. மழை பெய்யும் என்று தேவன் உரைத்தால், மழை முன்பு பெய்திருந்தாலும் பெய்யாமல் போயிருந்தாலும் அது எப்படியும் பெய்தேயாக வேண்டும். நோவாவுக்கு எத்தனை விஞ்ஞான நிரூபணங்கள் காண்பிக்கப்பட்ட போதிலும், "மழை பெய்யும்,” என்னும் தேவனுடைய சத்தத்தை அவன் கேட்டான். அதற்கு முன்பு பூமியில் மழை பெய்ததில்லை. பார்த்தீர்களா-? 66. அவர் ஆபிரகாமை மலையின் உச்சிக்குக் கொண்டு சென்று, அங்கு தன் சொந்த மகனை பலியிடும்படி கட்ளையிட்டார். அதற்காக ஆபிரகாம் ஈசாக்கை ஆயத்தப்படுத்தின போது, சிறுவன் ஈசாக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தான். நல்லது. அது தேவனுக்கும் அவருடைய குமாரனுக்கும் முன்னடையாளமாய் உள்ளது. அவன், ஈசாக்கின் கைகளைப் பின்னால் கட்டினான். ஈசாக்கு, "இதோ நெருப்பும் இருக்கிறது, 'கட்டையும் இருக்கிறது, கற்களும் உள்ளன, பலி பீடமும் உள்ளது. ஆனால் பலி எங்கே" என்று கேட்டான். 67. அந்த வயோதிப தகப்பனுக்கு அப்பொழுது ஏறக்குறைய நூற்று பதினான்கு வயது இருக்கும். அவனும், கடினமான சூழ்நிலையில் அவன் இருபத்தைந்து ஆண்டுகளாக காத்திருந்த அவனுடைய குமாரனும் அங்கிருந்தனர். அவன் எவ்வளவாக அழியாத தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் கொண்டு, அவனுக்கு எப்படியும் குழந்தை கிடைக்கும் என்று விசுவாசித்தான்-! அவன் என்ன செய்தான்-? தளராமல் அதில் உறுதியாய் நின்றான். அவன், "அவனை நான் இதுவரைக்கும் வளர்த்து கொண்டு வந்திருக்கிறேன். தேவனை நான் விசுவாசித்ததினால் அவர் எனக்கு இவனைக் கொடுத்தார். எனவே அவனை அவர் மரித்தோரிலிருந்தும் எழுப்புவார் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். பார்த்தீர்களா-? தேவனுடைய வார்த்தையை முதலில் பற்றிக் கொண்டு, அதில் தளராமல் உறுதியாய் நிற்றல். 68. அவனைக் கொல்ல அவன் ஆயத்தமான போது, ஒரு தேவ தூதன் அவன் கையைப் பிடித்து அந்த கத்தியை நிறுத்தினான். அப்பொழுது அவனுக்குப் பின்னால் அந்த வனாந்தரத்தில் கொம்புகள் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்டுக்கடா இருந்தது. அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது-? அவன் மூன்று நாள் பிரயாணமாய் இருந்தான். அக்காலத்தில் எந்த மனிதனும் எளிதாக 25 மைல் நடக்க முடியும். நான் வேட்டைக்குச் செல்லும் போது அல்லது வேலை சம்பந்தமாக ரோந்து செல்லும் போது ஒவ்வொரு முறையும் 25, 30 மைல் நடப்பது வழக்கம். என்னால் எளிதில் அவ்வளவு தூரம் நடக்க முடியும். எங்களுக்கு பெட்ரோல் பாதங்கள் என்று அழைக்கப்படுபவை உள்ளன. ஆபிரகாம் மூன்று நாட்கள் பிரயாணம் செய்தான், அவன் தொலை தூரம் நோக்கி மலையைக் கண்டான். காட்டு மிருகங்கள் அந்த ஆட்டுக்கடாவைக் கொன்று போட்டு இருக்கும். மற்றொரு காரியம் என்னவெனில், அவன் மலை உச்சியில் இருந்தான். அங்கு தண்ணீர் எதுவும் கிடையாது. அந்த இடத்திற்கு அவன் யேகோவாயீரே. அதாவது "கர்த்தர் தமக்கென்று ஒரு பலியை அருளுவார்" என்று பெயரிட்டதில் வியப்பொன்றுமில்லை. 69. "சகோ. பிரான்ஹாமே, விஞ்ஞான நாட்களில், மகத்தான விஞ்ஞான உலகத்தின் நாட்களில் அவரால் இதை எப்படி செய்ய முடிந்தது-? அவரால் இந்த காரியத்தை எப்படி செய்ய முடிந்தது-?" அவர் இன்னும் யேகோவாயீரேவாக, கர்த்தராக இருக்கிறார். அவருடைய வார்த்தையை நாம் கைக் கொண்டால், அவர் உரைத்ததை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். ஆமென். அவரால் மரித்துப் போன, குளிர்ந்த, சடங்காச்சாரம் நிறைந்த சபையிலிருந்து ஒரு அங்கத்தினனைத் தெரிந்து கொண்டு, தேவனுடைய ஜீவனை அவனுக்குள் வைத்து, சுவிசேஷத்தினால் அவனைப் பற்றியெரியச் செய்ய முடியும். அவரால் தெருவிலுள்ள ஒரு வேசியைத் தெரிந்து கொண்டு, சந்திலுள்ள ஒரு குடிகார னைத் தெரிந்து கொண்டு அவர்களைக் கண்ணியமுள்ள ஆணாகவும் பெண்ணாகவும் மாற்ற முடியும். ஏனெனில் அவர் யேகோவாயீரே-வாக. " கர்த்தர் தமக்கென்று ஒரு பலியை அருளுவார்" என்பவராக இருக்கிறார். ஆமென். 70. நாம் எவ்வளவாக தேவனை நம்முடைய அடிப்படையில் தாழ்த்துகிறோம். நம்முடைய அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம். நம்முடைய அடிப்படையில் நாம் விசுவாசிக்கிறோம். அதை விட்டு விடுங்கள். அது தான் ஏவாளைத் தொல்லைக்கு உட்படுத்தியது. அவள் தன்னுடைய சொந்த அடிப்படையில் யோசித்துக் கொண்டிருந்தாள். தேவனுடைய அடிப்படையில் சிந்தியுங்கள், அவருடைய வார்த்தை என்ன சொல்லுகிறதென்று. அவருடைய வார்த்தையை விசுவாசித்து. விசுவாசத்தின் மூலம் உங்களை அதற்கு உயர்த்திக் கொள்ளுங்கள். 71. நோவா, "மேலே தண்ணீர் இல்லையென்று விஞ்ஞானம் எவ்வளவாக நிரூபிக்க முடிந்தாலும் எனக்கு கவலையில்லை. தேவன் அங்கு தண்ணீரை வைக்க வல்லவராய் இருக்கிறார். அவர் வாக்களித்து உள்ளதனால், அதை செய்வார். அவர் வாக்களித்தால் நிச்சயம் செய்வார்,” என்றான். 72. அவன் என்ன செய்தான்-? அவன் எல்லா இடங்களிலும் சென்று, “அவர் என்னிடம் இதைக்கூறினார். ஆம், அது நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்,” என்று சொல்லிக் கொண்டு திரியவில்லை. அவன் அதைக் குறித்து ஏதோ ஒன்றை செய்தான். ஓ. சகோதரனே, சகோதரியே, நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா-? அவன் அங்கு உட்கார்ந்து கொண்டு "தேவன் அவ்விதம் உரைத்தார்" என்று கூறிக் கொண்டிருக்கவில்லை. அவன் அதைக் குறித்து ஒன்றை செய்தான். இன்று காலை நீ இரட்சிக்கப்பட விரும்பினால், அதைக் குறித்து ஏதாகிலும் ஒன்றைச் செய், இங்கு சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்காதே. ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு உன் கடிதத்தைக் கொண்டு செல்லாதே. அவர் இரட்சிப்பை, விடுதலையை, வாக்களித்துள்ளார். 73. நீ வியாதியாயிருந்தால், "இங்கு ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்-?” நகரம் முற்றுகை இடப்பட்ட போது அந்த குஷ்டரோகி, "நாம் சாகும் வரைக்கும் இங்கு ஏன் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்-?” என்று சொன்னது போல். சமாரியா, சீரியர்களால் முற்றுகையிடப்பட்ட போது, அவர்கள், “நாம் சாகும் வரைக்கும் இங்கு ஏன் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்-? அப்படி செய்தால் எப்பொழுதும் இங்கேயே இருப்போம், இங்கேயே மரிப்போம். நாம் நகரத்துக்குப் போனால் அவர்கள் அங்கு பட்டினியால் செத்து கொண்டிருக்கின்றனர். நாம் சத்துருவின் பாளயத்துக்கு செல்வோம்,” என்றனர். ஓ. என்னே. என்ன ஒரு எளிய... அவர்களுக்கிருந்த சிறு விசுவாசம். என்ன ஒரு சிறிய காரியம்.... அவர்களைக் கொல்ல முயலும் சத்துருவின் பாளயத்துக்கு சென்றனர். அவர்கள், "நாம் செத்தால், எப்படியும் நாம் சாகப்போகிறோம். நம்மைக் காத்துக் கொண்டால்... நம்முடைய உயிரை நாம் காத்துக்கொள்வோம், நாம் நன்றாய் இருப்போம்,” என்றனர். அவர்கள் அங்கு சென்றனர். தேவன் அவர்களுடைய மிகச் சிறிய மங்கலான விசுவாசத்தை கனப்படுத்தி, அவர்களை மாத்திரமல்ல, இஸ்ரவேல் தேசத்தையே விடுவித்தார். 74. இன்றைய நமது தேவை, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, அதில் தளராமல் உறுதியாய் நிற்கும் மனிதரும் ஸ்திரீகளுமே. தேவன் பூமி அதிர்ச்சிகளையும் அசைவுகளையும் முதலில் பாளயத்துக்குப் போகச் செய்வார். மேலே மழை இருந்தாலும் இல்லாமல் போனாலும், தேவன் அதை பார்த்துக் கொள்வார். 75. நீங்கள். "நல்லது, சகோ. பிரான்ஹாமே, எனக்கு புற்று நோய் உள்ளதென்றும் நான் மரித்துக் கொண்ருக்கிறேன் என்றும் மருத்துவர் கூறினார்,” எனலாம். அது ஒருக்கால் அப்படி இருக்கலாம். அந்த மருத்துவர் தனக்குத் தெரிந்ததை கூறுகிறார். அவர் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று, அவருக்கு வேலை செய்ய ஐம்புலன்கள் உள்ளன. அவைகளில் இரண்டு புலன்களை அவர் உபயோகிக் கிறார். அவை என்ன-? ஒரு புலன் உணர்ச்சி, மற்றது பார்த்தல் - பார்த்தலும் உணருதலும். அவரால் ஏதோ ஒன்றை உணர முடிகிறது. அல்லது எக்ஸ்ரே படத்தில் ஏதோ ஒன்றைக் காண முடிகிறது. அந்த மனிதனுக்கு வேலை செய்ய அவை மாத்திரமே உள்ளன. அவ்வளவு தான் அவருக்குத் தெரியும், ஆனால் அவர் தன்னால் இயன்றதை செய்கிறார். ஆனால் அதை பார்க்காதீர்கள். அவருடைய முடிவுக்கு அவர் வந்து விட்டார். ஆனால் இது என்ன வாக்களித்து உள்ளது என்பதை இங்கு பாருங்கள்-! "அது எப்படி முடியும்-? என்று யாராகிலும் கேட்டால், தேவன் அவ்விதம் உரைத்துள்ளார் என்று சொல்லுங்கள். தேவன் அதை உரைத்திருந்தால், அதுவே அதன் முடிவு. அது நித்திய காலமாய் பரலோ கத்தில் முடிவு பெற்று விட்டது - அவருடைய வார்த்தை. அவருடைய வார்த்தைகள் மாம்சமாகி, அவருடைய மாம்சம் உங்களுக்குள் இருந்தால் அதாவது அது உங்களில் மாம்சமாவதற்கு நீங்கள் இடங்கொடுத்தால்-! "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். பரி.யோவான்.15. பாருங்கள். அந்த வார்த்தைகள் இங்கு தங்குவதற்கு நாம் விரும்புகிறோம். அது உண்மையென்று விசுவாசியுங்கள். அது ஒரு விதை. அவர் வாக்களித்த அனைத்தையும் அது நிறைவேற்றும். 76. இப்பொழுது கவனியுங்கள், ஒரு கூட்டம் விஞ்ஞானிகள் அங்கு வந்து நோவாவிடம், "திரு.நோவாவே, நீர் ஒரு அருமையான போதகர். உம்மை நாங்கள் பாராட்டுகிறோம். உமக்கு இங்கு ஒரு அருமையான சபை உள்ளது. உம்முடைய குடும்பத்தினர். இருப்பினும் நீர்... உம்முடன் நாங்கள் இணங்குவது இல்லை, நீர் வித்தியாசமானவர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் ஜனங்களின் மத்தியில் மூடமதாபிமானம் விதைக்கப்பட காரணமாய் இருக்கிறீர். உலகம் முடிவுக்கு வரப்போகிறதென்று சொல்லி, ஜனங்களை பயமுறுத்தவும் செய்கிறீர். உமக்கு விஞ்ஞானப் பிரகாரமாக காண்பித்து நிரூபிக்க விரும்புகிறோம்,” என்று கூறியிருப்பார்கள். 77. ஓ. அந்த பிசாசு மரித்துப் போகவில்லை. அவன் இப்பொழுதும் அதைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறான். அதே பிசாசு தான், "நீர் தேவனுடைய குமாரனேயானால், ஒரு அற்புதத்தை நீர் செய்வதை நான் காணட்டும். ஒரு அற்புதம் செய்து இதை அப்பமாக மாற்றும். நீர் பசியாயிருக்கிறீர். இந்த கற்களை அப்பங்களாக மாற்றும். அப்பொழுது நான் விசுவாசிப்பேன்” என்றான். கல்வி கற்ற ஆசாரியர்களுக்குள் இருந்த அதே பிசாசு தான், "நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையில் இருந்து இறங்கி வந்து எங்களுக்கு நிரூபித்துக் காண்பியும்" என்றான். பாருங்கள்-? அந்தப் பிசாசு மரிப்பதில்லை. பாருங்கள். பிசாசு எப்பொழுதுமே தன்னுடைய மனிதனை எடுத்துக் கொள்கிறான், ஆனால் அவனுடைய ஆவி வேறொருவனுக்காக இங்கு தங்கி இருக்கிறது. சிறிது உற்சாகப்படுத்த இதைக் கூற விரும்புகிறேன். தேவன் தம்முடைய மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவருடைய ஆவியும் வேறொருவனுக்காக இங்கு தங்கியுள்ளது. ஆம், யாராகிலும் ஒருவன் அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளப் போகிறான். யாராகிலும் ஒருவன் இந்த விதமாகவோ அந்த விதமாகவோ அபிஷேகம் பெறப்போகிறான். இந்த தானியத்துக்குள் என்ன ஆவி உள்ளது என்பதை அது பொறுத்தது. நீங்கள் நம்பினாலும் நம்பாமல் போனாலும், அது தான். அது நல்லது. நீங்கள்.... 78. அண்மையில் ஒருவர் ஒரு போதகர் என்னிடம் இதை கூறினார். உங்களுக்கு அது ஆச்சரியமாயிருக்கும். அவர் அதைக்கூறின போது, நான் ஒரு மருத்துவர் அலுவலகத்தில் இருந்தேன். இந்த உண்மையை உங்களிடம் கூற விரும்பு கிறேன். தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டுள்ள போதகர்களைக் காட்டிலும் மருத்துவர் அதிகம் பேர் உள்ளனர் என்பதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மை. ஆம், ஐயா. நான் அந்த... 'லுக்' என்னும் பத்திரிகைக்காக என்னைப் பேட்டி கண்டனர் என்று உங்களுக்குத் தெரியும். அது 'லுக்' பத்திரிகை அல்ல. டானியின் அறிபுதத்தைக் குறித்து எழுதினார்களே, அந்த பத்திரிகையின் பெயர் என்ன-? ரீடர்ஸ் டைஜஸ்ட். ஆம். அவர்கள் மேயோ சகோதரரின் அலுவலகத்தில் என்னைப் பேட்டி கண்ட போது, அந்த மேயோ சகோதரர் என்ன சொன்னார்கள் தெரியுமா-? "நாங்கள் சுகமளிப்பவர்கள் என்று உரிமை கோருவது இல்லை, நாங்கள் இயற்கைக்கு உதவி செய்கிறோம் என்று மட்டுமே உரிமை கோருகிறோம். சுகமளிப்பவர் ஒருவர் மாத்திரமே, அவர் தேவன்," என்றனர். ஓ, என்னே-! பார்த்தீர்களா-? சிந்திக்கக் கூடியவன் மனிதன். யாராகிலும் ஒருவர் அப்பால் நோக்கி முழு காரியத்தையும் காண முடிகிறது. நாம் மானிடர். நாம் மரணத்துக்கு உட்பட்டவர்கள், தவறு செய்யக் கூடியவர்கள். எல்லாமே. அவரோ... தேவன், முடிவற்றவர். 79. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். என்னால் அதை விளக்க முடிந்தால், அது விசுவாசம் ஆகாது. ஒரு கறுப்பு பசு பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பாலை எப்படி கொடுக்கிறதென்று என்னால் விளக்க முடியாது. ஆனால் பசு அதைத் தான் செய்கிறது. அது உண்மை. உங்களாலும் அதை விளக்க முடியாது. இல்லை, ஐயா . இவைகளைத் தேவன் எப்படி செய்கிறார் என்று என்னால் விளக்க முடியாது. ஆனால் அவர் அதைச் செய்வதாக உரைத்து உள்ளார். அது எப்படியென்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியாது. ஆனால் நாம் அதை விசுவாசிக்கிறோம். நீங்கள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறீர்கள், நீங்கள் விசுவாசத்தினால் சுகமடைகிறீர்கள். தேவன் இடத்தில் இருந்து வரும் எதுவுமே விசுவாசத்தினால் வரவேண்டியதாயுள்ளது. 80. சில நாட்களுக்கு முன்பு ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன், கூட்டத்தை கேலி செய்து கொண்டிருந்தான். நான் யாரென்று அவனுக்குத் தெரியாது. அவன் என்னிடம் வந்து. "அதை என்னால் நம்ப முடியாது. அதை செய்ய முடியாது. அது அப்படி என்று என்னால் நம்ப முடியாது. நான் அதை ... அது விஞ்ஞானப் பூர்வமாய் எனக்கு நிரூபித்துக் காண்பிக்கப்பட வேண்டும்” என்றான். 81. நான், "அப்படியானால் நீ ஒருபோதும் கிறிஸ்தவனாயிருக்க முடியாது. இருக்கவே முடியாது,” என்றேன். அவன், "ஓ . நான் கிறிஸ்தவன்” என்றான். 82. நான், "நீ கிறிஸ்தவனாக இருக்க முடியாது. இருக்கவே முடியாது. கிறிஸ்து எங்கே இருக்கிறார் என்று எனக்கு விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபித்துக் காண்பி” என்று சொல்லி விட்டு, "உனக்கு மணமாகி விட்டதா-?” என்று கேட்டேன். அவன், "ஆம்" என்றான். நான், "உன் மனைவியை நீ நேசிக்கிறாயா-?” என்று கேட்டேன். அவன், "ஆம்" என்றான். "அப்படியானால் அன்பு என்னவென்று எனக்கு விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபித்துக் காண்பி” என்றேன். அவன், “என்னால் முடியாது” என்றான். 83. அப்பொழுது நான், “அப்படியானால் நான் அன்பு என்று அழைக்கும் எதுவும் உன்னிடம் கிடையாது. பார், அது வெறும்... அது உன் மனதில் எழுந்துள்ள கற்பனை. பார்-? உன்னால் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாது என்றால்... கடைக்குச் சென்று 25 சென்ட் பெறுமானம் உள்ள அன்பு எனக்கு வாங்கிக் கொண்டு வா. அப்படியே ஒரு டாலர் பெறுமானம் உள்ள விசுவாசம் வாங்கிக் கொண்டு வா. உன்னால் முடியாது" என்றேன். 84. தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கமே விசுவாசம், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை. விசுவாசியின் முழு சர்வாயுதவர்க்கம் விசுவாசம். நாம் விசுவாசத்தினால் தேவனை விசுவாசிக்கிறோம். ஏனெனில் தேவன் அவ்விதம் உரைத்திருக்கிறார். அப்படியானால் அது என்ன-? ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட் டான் என்று பவுல் கூறுகிறான். ஆனால் யாக்கோபோ, கிரியைகளினால். தேவன் கண்டதைக் குறித்து ஆபிரகாம் பேசுகிறான், ஆனால் யாக்கோபோ மனிதன் கண்டதைக் குறித்துப் பேசுகிறான். “உன் விசுவாசத்தை உன் கிரியைகளினால் காண்பி”, “உன் கிரியைகள் இலலாமல்,” போன்றவை. பாருங்கள்-? உங்கள் விசுவாசத்துடன் கிரியைகள் உங்களுக்கு இல்லாமல் போனால், உங்களுக்கு விசுவாசம் இல்லை என்பதை அது காண்பிக்கிறது, நீங்கள் சும்மா அதைக் குறித்து பேசுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உண்மையில் விசுவாசம் இருக்குமானால், நீங்கள் அதை விசுவாசித்து அதன்படி நடப்பீர்கள். அது உண்மை, அதை செயல்படுத்துங்கள்-! 85. நோவா, அவ்விதம் செய்தான், அவன் அதை செயல்படுத்தினான். அவன் நேராக சென்று பேழையை உண்டாக்கத் தொடங்கினான். விஞ்ஞானிகள் எவ்வளவு தான், "மேலே மழை இல்லையென்று எங்களால் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்துக் காண்பிக்க முடியும்," என்று கூறின போதிலும் அவன் கவலை கொள்ளவில்லை. 86. "நீங்கள் எவ்வளவு தான் எனக்கு நிரூபிக்க முடிந்தாலும், உங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியினால் அதை சொல்ல முடிந்தாலும், தேவன் என்னிடம் ''மழை பெய்யப் போகிறது என்றார். நான் தேவனை விசுவாசிக்கிறேன். அவ்வளவு தான் மழை பெய்யப் போகிறது," என்றான். 87. "திரு.நோவாவே, அது எங்கிருந்து வரப்போகிறது ஐயா, சங்கை போதகரே, உம்மை நான் கேட்க விரும்புகிறேன் அந்த மழை எங்கிருந்து வரப்போகிறது-? அது எங்குள்ளது-?" 88. "நல்லது. மழை பெய்யப் போகிறது என்று தேவன் என்னிடம் கூறியிருப்ப தனால், அவர் மழையை அங்கு வைக்க வல்லவராயிருக்கிறார்” உண்மை -! 89. இதை செய்ய முடியாது என்று அவர்கள் இன்று கூறுகின்றனர். கூட்டத்தில் சிந்தனைகள் பகுத்தறிதல் கிரியை செய்வதை அவர்கள் காண்கின்றனர். அவர்கள், "அது 'டெலிபதி (telepathy) அதாவது மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிந்து கொள்ளுதலாக இருக்க வேண்டும்," என்கின்றனர். 'டெலிபதி' 'டெலிபதி'-? கர்த்தரிடத்திலிருந்து தரிசனங்களைப் பெற்று ஆவியைப் பகுத்தறிதல். தீர்க்கதரிசிகளுக்கு எந்த விதமான 'டெலிபதி இருந்தது-? அன்று இயேசு அங்கு நின்ற போது அவருக்கு என்ன இருந்தது-? 90. இதோ பிலிப்பு வந்து இரட்சிக்கப்பட்டு. திரும்பிச் சென்று நாத்தான் வேலை இயேசுவுக்கு முன்னால் கொண்டு வந்தான். நாத்தான்வேல், "ஆ. நாசரேத்தில் இருந்து யாதொரு நன்மையும் உண்டாக முடியாது" என்றான். 91. அவன் இயேசு இருந்த இடத்துக்கு வந்த போது. ஒரு இஸ்ரவேலன், உனக்கு கபடம் இல்லை,” என்றார். 92. அவன், "ரபி, என்னை எப்பொழுது உமக்கு தெரியும்-? என்னை எப்படி தெரியும்-?” என்று கேட்டான். 93. அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்" என்றார் 94. இப்பொழுது. சரீரப்பிரகாரமாக அது... நீங்கள் எப்பொழுதாகிலும் அங்கு சென்று இருப்பீர்களானால், அது மலையைச் சுற்றிலும் 15 மைல்கள். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே, மலையைச் சுற்றிலும் ஒரு நாள் பிரயாணம். அப்படியிருக்க, அவர் எப்படி அவனைக் கண்டிருப்பார். அப்படியானால் என்ன-? அவன் விசுவாசம் கொண்ட ஒரு மனிதனாக இருந்ததால், "தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார். மேசியா வரும் போது மோசேயைப் போல் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்,” என்னும் தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதை அவன் காண விரும்பினான். அவன் அதைக் கண்டான். அதை அறிந்து கொண்டான். அவன், ரபீ, "நீர் தேவனுடைய குமாரன்,” என்றான். அது உண்மை. அவனுடைய பெயர் அழியாமல் நிலைத்திருக்கிறது. 95. ஆனால் அங்கே அந்த மகத்தான வணங்காத் தன்மையுள்ள (starchy) ஆசாரியர்கள் போதிய டி-டி பி-எச்.டி, எல்.எல்.டி பட்டங்களைத் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் கொண்டவர்களாய் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வார்த்தையை அறிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அறிந்து இருந்தது உண்மை தான், ஆனால் அவர்களில் அநேகர்... அது வார்த்தையை அறிந்திருப்பது அல்ல, வார்த்தையிலுள்ள அவரை அறிந்திருக்க வேண்டும். அது உண்மை. அவரை, அந்த வார்த்தையிலுள்ள ஜீவனை, அறிந்திருத்தல் அவசியம். அவர்கள் அங்கு நின்று கொண்டு, “இந்த மனிதன் பெயல்செபூல். இவன் குறி சொல்லுகிறவன். இவைகளை அவன் காண்கிறான், இவன் குறிசொல்லுகிறவன். அது...” என்றனர். 96. அதை அறிந்து கொண்ட இயேசு திரும்பிப் பார்த்து இவ்விதம் கூறினார். இப்பொழுது பொறுங்கள், அவர்கள் அதை உரக்கக் கூறவில்லை, அதை அவர்கள் மனதில் சிந்தித்தனர். அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார். வேதம் அவ்விதம் கூறவில்லையா-? பரி. லூக்காவில். ஆம். அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார். பாருங்கள், அவர் அவர்களுடைய சிந்தையிலிருந்ததை படித்ததாக (mind reading) கருதினர். ஆனால் அவர், அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார். அவர், "நீங்கள் எனக்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினால், உங்களை நான் மன்னித்து விடுவேன். ஆனால் என்றாவது ஒரு நாள் பரிசுத்த ஆவி வந்து இதே கிரியைகளைச் செய்வார். அதற்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தை பேசினாலும், அது இவ்வுலகிலும் மறு உலகிலும் மன்னிக்கப்படாது,” என்றார். 97. பாருங்கள், பாருங்கள், பரிசுத்த ஆவி, அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் சபையோருக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சபையோர் அங்கு நின்று கொண்டு இருந்தனர். அவர்கள், "நல்லது. அவர் அவர்கள் மனதில் உள்ளவைகளை மனோதத்துவத்தினால் அறிந்து கொள்கிறார். அவருக்கு 'டெலிபதி உள்ளது. அவர் பெயல்செபூல், குறி சொல்பவர்” என்றனர். குறி சொல்பவன் பிசாசைச் சேர்ந்தவன் என்று எவருக்குமே தெரியும். அவர்கள் தேவனுடைய கிரியையை "பிசாசு," என்றழைத்தனர். 98. பிசாசு பெற்றுள்ள எதுவுமே உண்மையான ஒன்று தாறுமாறாக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா-? பொய் என்பது என்ன-? தாறுமாறாக்கப் பட்ட உண்மை. விபச்சாரம் என்பது என்ன-? தாறுமாறாக்கப்பட்ட நீதியான ஒரு செயல். பாவம் அனைத்துமே உண்மையும் நீதியும் தாறுமாறாக்கப்பட்டவையே. மரணம் என்பது என்ன-? தாறுமாறாக்கப்பட்ட ஜீவன். நிச்சயமாக, அப்படித் தான் அது அவருடைய வார்த்தையிலும் காணப்படுகிறது. அப்படித் தான் அது, ஜனங்கள், அதற்கு மேற்பூச்சு பூசி இவைகளைக் கூறுகின்றனர். ஏனெனில் அவர்களுக்குத் தெரியாது, அவர்களுக்குத் தெரியாது. வார்த்தையை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு விசுவாசம் கிடையாது. ஆனால் நாத்தான்வேல் அதை ஏற்றுக் கொண்டான். 99. சீமோன் அங்கு வந்த போது என்ன நடந்தது-? பரிசேயனாகிய அவனுடைய வயோதிப தகப்பனார் அவனிடம், "சீமோனே, என் மகனே, முடிவு காலம் வருவதற்கு முன்பு ஒருக்கால் அந்த... என் நாட்களில் அவர் வருவாரென்று எதிர் நோக்கி இருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. உன் காலத்தில் ஒரு வேளை அவர் வரக்கூடும். அவர் வருவாரானால், சீமோனே, இது தான் நடக்கும். மகனே, எல்லாமே வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கும், எல்லா விதமான பொய்யான காரியங்களும் எல்லா இடங்களிலும் எழும்பும். ஆனால் இதை நீ ஞாபகம் கொள். வார்த்தையில் நிலைத்திருப்பார்-? இந்த மேசியா வரும் போது, அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார். இந்த மேசியா மோசேயைப் போல் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார். ஏனெனில் அவர் அவனைப் போல் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பாரென்று நம தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. அவர் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவர் என்பதை நீ அறிந்து கொள்வாய். அவர் அந்த தேவன் - தீர்க்கதரிசியாய் இருப்பார். அவருடைய கிரியைகளும் வார்த்தைகளும் ஒரு தீர்க்கதரிசியைப் போலவே இருக்கும், ஏனெனில் தேவனிடம் செல்லும் வரைக்கும் அதை விட உயர போக முடியாது. பார்,” என்று கூறுவதை அவன் கேட்டிருக்கிறான். எனவே, அவர் தேவன் தீர்க்கதரிசியாய் இருப்பார். பூமியில் அவருடைய கிரியைகள் அவர் தீர்க்கதரிசி என்பதைக் காண்பிக்கும். அதிலிருந்து அவர் தேவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம், அதை ஞாபகம் கொள்,” என்று அவனுடைய தகப்பன் கூறி இருந்தான். 100. அந்திரேயா அன்றிரவு சீமோனிடம் சென்று, “ஓ, நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று கூறின போது, அவன், "போய் விடு, போய் விடு. போய் விடு. ஆ, சும்மாயிரு, என்னைத் தொந்தரவுபடுத்தாதே,” என்று சொல்லி இருப்பான் என்று நினைக்கிறேன். 101. ஆனால் அடுத்த நாள் அவன் கூட்டத்துக்கு வந்திருந்த போது, கர்த்தராகிய இயேசுவின் சமுகத்துக்கு நடந்து சென்றான் அவர், “உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்” என்றார். அது அவனில் காணப்பட்ட விறைப்பை எடுத்துப் போட்டது. அவர் என்ன செய்தார்-? அவர், இயேசு .... தன் பெயரைக் கையொப்பம் இடவும் கூட அறியாத அந்த படிப்பறியாத மீன் பிடிப்பவன்; அவன் படிப்பு அறியாதவனும் பேதமை உள்ளவனுமாய் இருந்தான் என்று வேதம் உரைக்கிறது. அந்த விசுவாசத்தைக் கொண்டிருந்த அந்த சிறு கல்லாகிய பேதுருவுக்கு ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொடுப்பது தேவனுக்குப் பிரியமாய் இருந்தது. "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்”. கத்தோலிக்கர் கூறுவதுபோல் ஒரு கல்லின் மேலேயா-? இல்லை, எதன் மேல்-? அது என்ன-? ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல். பாருங்கள், "மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்தில் இருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல்- அதாவது எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல்- என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வது இல்லை”. ஏன்-? அது கடுகு விதையைக் காட்டிலும் மேலானது. அது தேவனுடைய வல்லமை, அழிந்து போகக் கூடிய மானிடரின் (mortals) நடுவில் அசைவாடுதல், வார்த்தை உயிர் பெறுதல். 102. அது தான் நோவாவுக்குள் இருந்தது. அவன் சொன்னான்... வார்த்தை அவனுக்குள் உயிர் பெற்றது. அதற்காக நான் ஆயத்தம் பண்ணுவேன்". 103. “நல்லது, நேற்று மழை பெய்யவில்லை. மழை பெய்யும் என்று சொன்னாயே, எப்பொழுது மழை பெய்யப் போகிறது-?" “எனக்குத் தெரியாது, ஆனால் மழை பெய்யும்”. "மழை பெய்யுமென்று உனக்கு எப்படித் தெரியும்-?" "தேவன் அவ்விதம் உரைத்தார்.” 104. அவர்கள் ஆபிரகாமிடம் கூறினது போல, அவனுக்கு 80 வயது; அவனுடைய மனைவிக்கு 90 வயது. ஏழை வயோதிப மனைவி இங்குமங்கும் ஓடி, குழந்தைக்கு காலுறைகளையும் ஊசிகளையும் மற்றவைகளையும் 25 ஆண்டு காலமாக ஆயத்தம் செய்து வந்தாள். அவளுக்கு இப்பொழுது 90 வயது. அவள் தடி ஊன்றி இப்படி நடந்து சென்றாள். ஆபிரகாமுக்கு கூன் விழுந்து, தாடி தொங்கிக் கொண்டிருந்தது. "ஆபிரகாமே, குழந்தையைக் குறித்து என்ன-? ஏய், நீண்ட காலம் முன்பே நீ ஊர் என்னும் பட்டினத்தை விட்டு வெளி வந்தாய். உனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று சொன்னாயே, இப்பொழுது. என்ன சொல்லுகிறாய்-?" "தேவனுக்கு மகிமை, எங்களுக்கு எப்படியும் குழந்தை பிறக்கும்”. “ஏன்-?” "தேவன் அவ்விதம் உரைத்தார். "ஏன், அது 25 ஆண்டுகளுக்கு முன்பு." 105. "தேவன் அவ்விதம் உரைத்தார். அது 100 ஆண்டுகளானாலும் 25 ஆண்டுகள் ஆனாலும், அதனால் ஒரு வித்தியாசமுமில்லை. அவர் எப்படியும் அதை செய்வார்”. பாருங்கள்-? தளராமல் விடாப்பிடியாய் உறுதியாய் இருத்தல், விடாமுயற்சி. அதை தொடர்ந்து செல்லுதல், அதை நீங்கள் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். காற்றாடி பறக்க விட்டுக் கொண்டிருந்த சிறுவனைப் போல. யாரோ ஒருவர் அவனிடம், "காற்றாடி எங்கே-?” என்று கேட்டாராம். 106. அவன், "எனக்குத் தெரியாது. அங்கு எங்கோ மேலே பறந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதை இந்த கயிற்றின் முனையில் என்னால் உணர முடிகிறது,” என்றானாம். 107. எனவே தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டுள்ள மனிதனோ அல்லது ஸ்திரீயோ; நீங்கள் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நங்கூரம் கெட்டியாகப் போடப்பட்டிருக்கிறது. புயல்கள் எவ்வளவாக அதைத் தாக்கி எல்லா பக்கங்களிலும் அசைத்தாலும், நீங்கள் நங்கூரம் இடப்பட்டு இருக்கிறீர்கள். கப்பல் அந்த இடத்துக்கு வந்து விட்டது. நீங்கள் விடாமுயற்சி உடன் இருக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கப் போகிறீர்கள். 108. நோவா அதை விசுவாசித்தான், நிச்சயமாக, அதன் மூலம் தேவன் அவனுடைய வாழ்க்கைக்கு வைத்திருந்த நோக்கத்தை அவன் நிறைவேற்றி னான். உங்கள் வாழ்க்கைக்கு தேவன் வைத்துள்ள நோக்கத்தை நீங்கள் நிறைவேற்ற விரும்புகிறீர்களா-? அப்படியானால் நீங்கள் வார்த்தையைப் பெறும் போது அதில் விடாமுயற்சியுடன் நிலைத்திருங்கள். அந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், அது உங்களுடையது. 109. மோசே. எத்தனையோ பேர்களைக் குறித்து இப்பொழுது நான் பேசிக் கொண்டே போகலாம்-! இங்கு யாத்திராகமத்தில் கூறப்பட்டுள்ள மோசேயைக் குறிப்பிட விரும்புகிறேன். மோசே ஒரு கல்விமான். ராஜதந்திரி, இராணுவ வீரன். அவன், இராணுவ வீரன் மாத்திரமல்ல, தளபதியும் கூட. அவன் தளபதி மாத்திரமல்ல, அடுத்தபடியாக வரப்போகும் பார்வோன். ஆமென். இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன், என்னை மன்னியுங்கள். ஆம், வரப் போகும் பார்வோன். அவன் தன் ஜனங்களை மீட்க விரும்பியிருந்தால், எகிப்தே அவன் கையில் இருந்தது. அவன் வரப்போகும் பார்வோன். அவன் பார்வோனான பிறகு என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் தேவன் ஒரு நாள் எரிகிற முட்செடியில், உ-ஊ, அவனோடு பேசினார். 110. ஓ, அவன் கல்வியறிவு பெற்றிருந்த போதிலும், ஒரு கோழையைப் போல ஓடினான். அவனுடைய வேதசாஸ்திரம் அனத்திலும் அவன் தோல்வி அடைந்தான். அவனுடைய பெரிய காரியங்கள் அனைத்திலும் அவன் தோல்வி அடைந்தான். ஆனால் ஒரு நாள் எரிகிற முட்செடியில் தேவன் அவனைச் சந்தித்தார். எரிகிற முட்செடியில் தேவன் அவனிடம் வந்த போது. அவன் கையில் ஒரு கோலைப் பிடித்துக் கொண்டு, மனைவியைக் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு சிறு கொசோமை அவள் இடுப்பில் வைத்துக் கொண்டு. எகிப்துக்குச் செல்லும் பாதையில் பிரயாணப்பட்டு செல்வதைக் கவனியுங்கள். அவன் என்ன செய்கிறான்-? கைப்பற்றச் செல்கிறான். அவனுக்கு விடாமுயற்சி இருந்தது, அவன் தளராமல் மிகவும் உறுதியாய் இருந்தான். 111. "மோசே, 80 வயதான நீ, மிகவும் உலர்ந்த ஒரு கோணலான கோலைக் கையில் எடுத்துக் கொண்டு போய், அதை கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறாயா-?" கோணலான ஒரு கோல், ஒரு மனிதன் படையெடுப்பு, ஒரு மனிதன் எகிப்துக்குப் புறப்பட்டுச் செல்லுகிறான். ஒரு மனிதன் ருஷியாவைக் கைப்பற்றச் செல்வது போல். நமக்கு தேவை... தேவனுக்கு ஒரு மனிதன் தான் தேவை, அந்த ஒருவன் மாத்திரமே. அவருடைய கரங்களில் முழுவதுமாக ஒப்படைத்த ஒரு மனிதன் மாத்திரமே அவருக்குத் தேவை. ஒரே மனிதன், அது மாத்திரமே அவருக்கு அவசியம். அந்த ஒரு மனிதனைக் கொண்டு அவர் ருஷியாவை சுக்குநூறாக அசைக்க முடியும். 112. அவர் நோவாவை, மன்னிக்கவும், மோசேயை தெரிந்து கொண்டார். அவன் இந்தப் பக்கமாக ஓடி, ஒரு இனிய வாழ்க்கையைப் பெற்று, அழகான பெண்ணை மணந்து, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை அவனுடைய மாமனாரும், மீதியான் தேசத்து ஆசாரியனுமாகிய யெத்ரோவின் ஆடுகளுக்கு சுதந்தரவாளியானது. அவனுக்கு அங்கு ஒரு அருமையான குடும்பம், இடம், சௌகரியமான வாழ்க்கை , எப்பொழுதாகிலும் ஒரு முறை தன் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு வேட்டையாடச் சென்று, ஒரு மானைக் கொன்று அதைக் கொண்டு வருவது வழக்கம். நிறைய 'பொரி' பழங்கள் (berries), நிறைய ஆடுகள், ஆட்டு ரோமம், வியாபாரம், வியாபாரிகளின் கூட்டம் அவ்வழியே வரும். அவனுக்கு எல்லாமே நன்றாக அமைந்திருந்தது. அவனுக்கு எதைக் குறித்தும் கவலை இருக்கவில்லை. அவன் தன் ஜனங்களின் மேல் கொண்டு இருந்த பாரம் அவனுடைய மனதை விட்டு அகன்றது. அவர்கள் எகிப்தில் இருந்தனர். அவன் தோல்வி அடைந்ததனால், அவர்களை விடுவிக்க தேவன் வேறெதாவது ஓன்றைச் செய்வார் என்று அவன் எண்ணினான். ஆனால் ஒரு நாள் தேவன் அவனை சந்தித்த போது, நீங்கள் விடாமுயற்சியைக் குறித்து பேசுகிறீர்களே, இதோ அவன் செல்கிறான்-! “உன் சேனை எங்கே -?” 113. "எனக்கு எதுவும் அவசியமில்லை. என் சேனை காணக்கூடாத சேனை”. தோத்தானில் ஒரு நாள் காலை இருந்தது போல், அந்த தீர்க்கதரிசி.... "என் சேனை காணக் கூடாத சேனை". இதோ அவன் செல்கிறான், நீங்கள் காணக் கூடிய ஒன்றே ஒன்று ஒரு பழைய கோணலான கோல். அவன் பின்னால் உள்ள கழுதையை நடத்திச் செல்கிறான். அவனுடைய தாடி காற்றில் பறக்கிறது. "தேவனுக்கு ஸ்தோத்திரம்”. அவனுடைய கண்கள் வானத்தை நோக்கினதாய், அவன் கைப்பற்ற சென்று கொண்டிருக்கிறான். 114. சில நேரங்களில் விசுவாசம் நீங்கள் பரிகசிக்கத்தக்க விதத்தில் நடந்து கொள்ளும்படி செய்கிறது. மாமிச சிந்தைக்கு அது பரிகாசமாக தோன்றும். ஆனால் அது தேவனுடைய வார்த்தையாய் இருக்குமானால், அது நிறை வேறியே ஆக வேண்டும். நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்து, தேவன் அதை நிறைவேற்றுவதைக் காணுங்கள். 115. அவன் அங்கு சென்றான், அவன் மிகவும் உறுதியாய் இருந்தான். அவன் நடந்து பார்வோனின் சமுகத்தை அடைந்தான். அவன் தோல்வி அடைவான் போல் தோன்றினது. அவன், "நான் தேவனால் அனுப்பப்பட்டேனா இல்லையா என்பதை உனக்கு காண்பிக்கிறேன்,” என்று சொல்லி கோலை இப்படி தரையில் போட்டான். அது சர்ப்பமாக மாறினது - அவனும், ஆரோனும். அப்பொழுது பார்வோன் இரண்டு ஜோசியர்களை அல்லது பிசாசு பிடித்த இரண்டு மனிதர்களை வரவழைத்தான் - இக்கடைசி நாட்களில் நமக்குள்ளது போல். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பாவனை காட்டி, கூடுமானால் அவர்களை வஞ்சிக்கப் பார்க்கிறார்கள். அது உண்மை. அவர்கள் இருவரும் வந்து, தங்கள் கோல்களைத் தரையில் போட்டனர். அவைகளும் அதே விதமாக சர்ப்பங்களாக மாறின. மோசே, இந்த ஒரு காரியத்தை நன்றாக அறிந்திருந்தான், அதாவது அவனை அனுப்பின தேவன் அவனைக் காத்துக் கொள்வாரென்று. அடுத்தபடியாக என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. 116. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அறியாத ஒரு நிலையை அடைந்து ஜனங்கள், "அவர் சுகம் பெறவில்லை. அது இன்னும் அங்குள்ளது,” என்று சொல்லி, ஆனால் தேவன் அந்த வாக்குத்தத்தத்தை உங்கள் இருதயத்தில் வைத்து இருப்பாரானால், நீங்கள் அமர்ந்திருங்கள். தேவனுடைய மகிமையை சாட்சியாக உரைத்துக் கொண்டே இருங்கள். உரைத்துக் கொண்டே இருங்கள்-! 117. மோசே, “தேவன் என்னை அனுப்பினார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றான். என்ன நடந்தது-? அந்த சர்ப்பம் மூன்று அல்லது நான்கு மடங்கு இவ்வளவு பெரிதாக ஆனது. ஒருக்கால் அது மலைப் பாம்பாக இருந்திருக்கும். அது அங்கு தோன்றி மற்ற சர்ப்பங்களை விழுங்கினது. மற்ற கோல்களுக்கு என்ன நோந்ததென்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா-? அவர்கள் ஒரு கோலை மாத்திரம் தரையிலிருந்து எடுத்தனர். அது மற்றவைகளை விழுங்கினது. வேறு எதுவுமே இருக்கவில்லை. அப்படித்தான் தேவன் இந்நாட்களில் ஒன்றில் தமது வல்லமையைக் கொண்டு செய்வார். ஆம். 118. மோசே விடாமுயற்சியுடன் இருந்தான். முதலாவதாக என்ன தெரியுமா, அவர் அவனை அனுப்பி, "பார்வோனே, இதைச்செய்” என்று அவனைக் கொண்டு உரைத்தார். அவன், "நீ செய்யாவிட்டால், நாங்கள் இன்னின்னதை செய்வோம்,” என்றான். அவன், தேவனை நோக்கிக் கூப்பிட்ட போது அவர் வண்டுகளையும், பேன்களையும், மற்றெல்லாவற்றையும் பூமிக்கு அனுப்பினார். அவன் என்ன-? அவன் தீர்மானம் கொண்டிருந்தான். தேவன் அவனிடம், "இஸ்ரவேல் புத்திரரை இந்த மலைக்குக் கொண்டு வா,” என்று சொல்லியிருந்தார். தேவனுடைய சித்தத்தை அவன் பெற்று இருந்ததை அவன் அறிந்திருந்தான். அவனுக்கு முன்னால் அந்த தரிசனம் இருந்ததை அவன் அறிந்திருந்தான். வானமும் பூமியும் ஒழிந்துபோம். ஆனால் அந்த தரிசனமோ தவற முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் அங்கு விடாப்பிடியாய் சென்றான். 119. கவனி, சகோதரனே. இன்று காலை நீ தேவனுடைய சித்தத்தின் தரிசனத்துடன் வந்திருப்பாயானால், நீ தேவனுடைய வார்த்தையுடன் வந்து இருப்பாயானால், என்ன நடக்கிறதென்று எனக்குக் கவலையில்லை. “நான் விடாப்பிடியாய் இருக்கப் போகிறேன். நான்... என் இருதயத்தில், இங்கு நான் உட்கார்ந்து கொண்டிருந்த முதற்கு, தேவனுடைய தரிசனம் எனக்குக் கிடைக்கப் பெற்றது. நான் விடாப்பிடியாய் இருக்கப் போகிறேன். நான் விடாமுயற்சியுடன் இருக்கப் போகிறேன். நான் சென்று கைப்பற்றப் போகிறேன். இது என்னை விட்டுப் போக வேண்டும்”. அது உன்னை விட்டுப் போகும். சகோதரனே. கவலைப்படாதே. அது உன்னை விட்டுப் போகும். 120. தாவீது கோலியாத்துக்கு முன்னால் நின்ற போது, அவன் விடாப்பிடியாய் இருந்தான். அவன், "நீங்கள் அங்கு நின்று கொண்டு, நவீன விஞ்ஞானத்தை விஞ்ஞானிகளை அனுமதிக்கப் போகிறீர்கள் என்றா சொல்லுகிறீர்கள் என்றான். அது தேவ தூஷணமாக ஒலிக்கக்கூடும், ஆனால் நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நவீன விஞ்ஞானம் அங்கு நின்று கொண்டு, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று கூற அனுமதிக்கப் போகிறீர்கள் என்றா சொல்லுகிறீர்கள்-? தேவனுடைய வார்த்தை அந்த கருத்தை எதிர்க்கிறதே வேதத்தில் இயேசுவின் ஊழியத்தின் 60 சொச்சம் சதவிகிதம்... ஆம், 86 சதவிகிதம் என்று நினைக்கிறேன் தெய்வீக சுகமளித்தலாக இருக்கும் போது, தெய்வீக சுகமளித்தல் என்றே ஒன்று கிடையாது என்று நவீன விஞ்ஞானம் கூறுவதற்கு நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்கள் என்றா சொல்லுகிறீர்கள்-? அந்த வாக்குத்தத்தம், அந்த கடைசி வாக்குத்தத்தம். 121. என் போதகர் சகோதரரே, நவீன ஸ்தாபன கோட்பாடுகள் அனைத்தும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் சேர நீங்கள் அனுமதித்து, இந்த ஸ்தாபனம் உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தையை ஒடுக்கி, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று உங்களிடம் கூற நீங்கள் அனுமதிப்பீர்கள் என்றா சொல்லுகிறீர்கள்-? அதைக் கூற நீ யார்-? உனக்கு அனுபவம் ஏதாகிலும் இருந்ததுண்டா-? நீ எப்பொழுதாகிலும் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தது உண்டா-? நீ அவ்விதம் பிறந்திருந்தால், சகோதரனே, நிச்சயமாக அதைக் குறித்து தேவனுடைய வார்த்தை உரைப்பதை ஏற்றுக் கொள்வாய். மற்றது அனைத்தும் பொய்யாயிருப்பதாக. நிச்சயமாக. 122. கவனியுங்கள், தாவீதுக்கு அனுபவம் இருந்தது. அவன் ஒரு சிறு கவணைக் கூட கொண்டு சென்றான். அவனிடம் வேறொன்றும் அதிகம் இருக்கவில்லை, அது ஒரு கவண். ஆனால் பரலோகத்தின் தேவன் அவனுடன் இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அங்கு சென்று ஒரு கரடியையும் ஒரு சிங்கத்தையும் கொன்று போட்டான், அது என்ன செய்யும் என்பதை அவன் அறிந்து இருந்தான். அவன், "தேவன் ஒரு கரடியையும் ஒரு புலியையும் என் கையில் ஒப்புக் கொடுத்திருக்க, அவர் எவ்வளவு அதிகமாக அந்த பெருமை பேசும், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனை ஒப்புக் கொடுப்பார்-?” என்றான். 123. இன்றைய பெருமை பேசும் உலகம், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று கூறிக் கொண்டு இருக்கிறது. ஒரு ருஷியா அங்கு எழும்பி, சபைகளில் கிளர்ச்சி செய்து அவைகளை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வேலை செய்ய அவர்களில் ஒன்றுமில்லை. ஏன் அந்த காஸ்ட்ரோ, அந்த பிசாசு பிடித்தவன்... அவனை எனக்குத் தெரியும். அங்கு நான் சென்றிருந்த போது அவனைச் சந்தித்திருக்கிறேன். அவன் என்னிடம் நன்றாக பேசி, கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி வரப் போகிறது என்று அவன் விசுவாசிப்பதாக கூறினான். ஆனால் அவன் பிசாசுக்கு தன்னை விற்றுப் போட்டான். அவன் என்ன செய்தான்-? அவன் சில நல்ல காரியங்களைச் செய்து இருக்கிறான் ஆனால் அவன் ஒரு காரியத்தை செய்தான், அதாவது அவன் எல்லா பணமும் செல்லாது என்று அறிக்கையிட்டு புது நாணயம் ஒன்றரை ஆரம்பித்தான். அது தான் இந்நாட்களில் ஒன்றில், தங்கள் வருமானவரியை எடுத்து தொலைகாட்சி விளம்பரத்தில் செலவிடும், இந்த பெரிய விஸ்கி தயாரிப்பாளர்களுக்கும் புகையிலை கம்பெனிகளுக்கும் நடக்கப் போகிறது. நான் பேசுகிறது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் உங்களிடம் இதைக் கூற விரும்புகிறேன், அது உண்மை . அந்த பணம் அரசாங்கத்துக்கு சேர வேண்டும். ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். நீங்கள் ஒருமுறை வருமானவரி செலுத்தாமல் இருந்து பாருங்கள், அதற்காக உங்களுக்கு தண்டனை விதிக்கப்படும். 124. ஒரு கூட்டம் விருத்தேசதனமில்லாத பெலிஸ்தியர் அங்கு நின்று கொண்டு ஜீவனுள்ள தேவனுடைய சேனையை நிந்திக்க முடியும் என்றா கூறுகிறீர்கள்-? நாங்கள் அற்புதங்களை ஆதரிக்கிறோம். இன்று சபைக்குத் தேவை, தேவனிடம், தேவனுடைய வார்த்தைக்கு, அவருடைய வல்லமைக்கு, பெந்தெகொஸ்தேவுக்கு திரும்புவதே. பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்துக்கு அல்ல, பெந்தெகொஸ்தே அனுபவத்துக்கு. அவர்கள் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைக் குறித்து பேசும் போது, வழி விட்டு விலகிப் போகின்றனர். பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவம். அது மெதோடிஸ்டுக்கு, பாப்டிஸ்டுக்கு, பிரஸ்பிடேரியன்களுக்கு. யார் விரும்பினாலும் அவர்களுக்கு கிடைக்கும். அது உண்மை. தேவன் ஒரு தேசத்துடன், ஒரு கூட்டம் ஜனங்களுடன், ஒரு ஸ்தாபனத்துடன் ஈடுபடுவது இல்லை. அவர் தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். எப்பொழுதுமே, புறஜாதிகள் இடம், தமது நாமத்திற்கென்று புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்டம் ஜனத்தை தெரிந்து கொள்கிறார். பாருங்கள்-? அந்த விதத்தில் தான் அவர் அவர்களுடன் ஈடுபடுகிறார். இப்பொழுது, வேகமாக, நான் துரிதமாக முடிக்க வேண்டும். 125. தாவீது, “இது நடக்க நீங்கள் அனுமதிப்பீர்கள் என்றா கூறுகிறீர்கள்-? இந்த சிறு கவண்," என்றான். அவன் சிங்கத்தை துரத்திக் கொண்டு போனான். என்ன-? அதைக் கொன்றான். அவன் கரடியைத் துரத்திக் கொண்டு போய் அதைக் கொன்றான். அவன், "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று அங்கு பெருமையடித்துக் கொண்டிருக்கும் அந்த பெலிஸ்தியனை இன்னும் எவ்வளவு அதிகமாக என் கைகளில் ஒப்புக் கொடுப்பார்-?” என்றான். 126. கோலியாத் அவனைப் பார்த்து நகைத்து, “உன்னை இந்த ஈட்டியின் முனையில் தொங்க விட்டு, உன் மாம்சத்தை பறவைகள் தின்னும்படி செய்வேன்” என்றான். அவனால் அதை செய்ய முடியும். 127. சவுல் தாவீதிடம், "அந்த மனிதன்... அவனுடைய விரல்கள் ஒவ்வொன்றும் 14 அங்குலம் நீளம். அவன் தன் சிறு வயது முதற் கொண்டே போர்வீரனாக இருந்து வந்திருக்கிறான். நீயோ சிவந்த மேனியுடைய சிறுவன்,” என்றான். 128. தாவீதோ. "ஓ, உங்களிடம் கூற என்னிடம் ஒன்றுள்ளது. நீங்கள் அறியாத ஒன்றை நான் பெற்று இருக்கிறேன்” என்றான். 129. தாவீதின் சகோதரன், "நீ ஒன்றும் அற்றவன். நீ வீடு போய் சேர். நீ ஒரு அடங்காப்பிடாரி. நீ வீடு போனதும் அப்பாவிடம் சொல்லி உதை வாங்கித் தருகிறேன்," என்றான். 130. அவன் என்ன சொன்னான்-? “நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் பணிவிடைக்காரனாகிய என் தகப்பனின் ஆடுகளை ஒரு நாள் நான் வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தேன். நான் தேவனாகிய கர்த்தரில் நம்பிக்கை கொண்டவன். ஒரு சிங்கம் வந்து ஆட்டுக்குட்டிகளில் ஒன்றைக் கவ்விச் சென்றது. அதை நான் துரத்திச் சென்றேன்,” என்றான். ஏன்-? அவனுடைய தகப்பனால் அவனுக்கு ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது. "அந்த சிங்கத்தை நான் அடித்து வீழ்த்தினேன். அது எழுந்த போது அதைக் கொன்று போட்டேன். ஏனெனில் எனக்கு ஒரு பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது" என்றான். 131. ஓ, ஊழியக்கார சகோதரனே, நமக்கு ஒரு பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஒரு சிங்கம் வந்து, அவருடைய ஊழியக்காரரில் ஒருவரை பிடித்து அவரை வெளியே கொண்டு சென்று இருக்குமானால், இன்று காலை நான் கவண் கல்லுடன் வருகிறேன். விசுவாசமுள்ள ஜெபம் என்னும் கவண்கல் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார். அப்படித் தான் அவர் கூறி உள்ளார். அந்த ஆட்டுக்குட்டியை மறுபடியும் மந்தைக்கு கொண்டு வர, நாங்கள் சிங்கத்தின் பின்னால் செல்கிறோம். கிறிஸ்தவர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குத் தேவை. நீங்கள் எங்களுக்குத் தேவை. உங்களை நாங்கள் பெற்றிருக்க வேண்டும். பிதா நம்மிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து உள்ளார். நாம் போய் அதை பெற்றுக் கொள்வோம். அந்த பொறுப்பை நாம் காத்துக் கொள்வோம். 132. தாவீது, "அதை அவர் அந்த சிங்கத்துக்கு செய்தால், இன்னும் எவ்வளவு அதிகமாக அவர், இங்கு நின்று கொண்டு ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறவனுக்கு செய்வார்-! நான் என் சகோதரரைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் வெட்கப்படுகிறேன். அதாவது, அவர்களுடைய பலவீனத்தைக் கண்டு வெட்கப்படுகிறேன்" என்றான். 133. என் ஊழியக்காரர் கூட்டம் நின்று கொண்டு அவிசுவாசிகளுடன் சேர்ந்து கொண்டு, "ஓ, அப்படி ஒன்றும் கிடையாது. அப்படி ஒன்றுமேயில்லை. இவை நடக்குமென்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை” என்று கூறுவதை நான் கேட்கும் போது, அவர்களைக் குறித்து வெட்கப்படுகிறேன். 134. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு. "வாக்குத்தத்தமானது உங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். அவர் இன்னும் அழைத்துக் கொண்டிருப்பாரானால், அவர் இன்னும் பரிசுத்த ஆவியை ஊற்றிக் கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவி இன்னும் உங்களுக்குள் வாசமாய் இருக்குமானால், அது கிறிஸ்து இயேசுவில் வாழ்ந்த அதே வாழ்க்கையை இப்பொழுதும் வாழும். 135. ஒரு கிளை தோன்றி, அது ஆப்பிள் பழங்களைத் தருவதை நீங்கள் கண்டால், அதற்கு அடுத்த கிளை பேரிக்காயையும் அதற்கும் அடுத்த கிளை 'ப்ளம்' பழங்களையும் தராது. அவை ஒட்டுப் போடப்பட்டிருந்தால் மாத்திரமே அவ்விதம் தரும். அது உண்மை. ஆனால் மரத்தின் மூல வேர் மற்றொரு கிளையைத் தோன்றச் செய்யுமானால், அது ஆப்பிள் பழங்களையே தரும். எனவே இன்று நாம் ஒட்டு போடப்பட்ட நிறைய ஸ்தாபனங்களைப் பெற்று உள்ளோம். 136. அன்றொரு நாள் ஒன்பது வெவ்வேறு எலுமிச்சை வகை பழங்களுடன் ஒரு மரத்தைக் கண்டேன். அதில் மாதுளம் பழம் இருந்தது. மற்றும் கிரேப் ப்ரூட் (grapefruit), எலுமிச்சம் பழம் இருந்ததென்று நினைக்கிறேன், வேறு சில பழங்களும். ஆனால் உண்மையில் அது ஆரஞ்சு மரம். நான் அந்த மனிதன் திரு. ஷரீட். என் நண்பரிடம், "அது ஆரஞ்சு மரமாயிருக்க, இவை எப்படி உண்டாயின்-?” என்று கேட்டேன். 137. அவர், “மரத்தை சிறிது பிளந்து இதை அதில் ஒட்டுப் போட்டேன்” என்றார். 138. "அது பழங்களைத் தரும்போது, ஆரஞ்சு பழங்களைத் தருமா-?” என்று கேட்டேன். அவர், “இல்லை, அது அதன் இனப் பழங்களையே தரும்” என்றார். 139. பார்த்தீர்களா-! சகோதரனே, சபைகள் கிறிஸ்துவுக்குள் ஒட்டு போடப்பட்டு உள்ளன. இங்கு அந்த நாமத்தை சிறிது பிளந்து, தங்களைக் கிறிஸ்து சபைகள் என்று அழைத்துக் கொள்கின்றன. அவைகள் அவ்விதம் செய்யும் போது, எவைகளைத் தோன்றச் செய்கின்றன-? ஸ்தாபனப் பழங்களை. ஆனால் அந்த மரம் மற்றொரு கிளையைத் தோன்றச் செய்யும் போது, அது முதலாம் கிளையைப் போலவே இருக்கும். ஆனால் சகோதரனே, இதை உன்னிடம் கூற விரும்புகிறேன், அப்போஸ்தலருடைய நடபடிகளை ஜீவனுள்ள தேவனின் முதலாம் சபையில் எழுதக்காரணமாயிருந்த பரிசுத்தாவி இன்றைய சபையில் உண்மையாக இருக்குமானால், பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அதே பரிசுத்த ஆவியின் மூலம் இயேசு கிறிஸ்துவின் சபை மறுபடியும் உயிர் பெற்று, அது மறுபடியும் அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதும். உண்மை. அது நிறைவேறும் வரைக்கும். அது விடாப்பிடியாய், விடாமுயற்சியுடன் இருக்கும். ஓ தேவனே, எங்கள் மேல் இரங்கும். ஆம், ஐயா. ஆம், ஐயா. 140. சிம்சோன் தனக்கு அந்த ஏழு சுருள்கள் இருந்ததை உணர்ந்த வரைக்கும், மிகுந்த விடாமுயற்சியுடன் இருந்தான். அது தேவன் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குத்தத்தம் என்பதை அவன் அறிந்திருந்தான். தேவனுடைய வாக்குத் தத்தத்தின் வல்லமை உங்களைச் சூழ்ந்துள்ளது என்பதை நீங்கள் உணரும் வரைக்கும் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் விடாமுயற்சியுடன் இருக்க முடியும். இதோ வார்த்தை, வார்த்தை அவ்விதம் உரைக்கின்றது. அந்த வாக்குத் தத்தம் உங்கள் இருதயத்தில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்து, இங்கு நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அந்த விசுவாசம், “நான் சுகமடைந்து விட்டேன், நான் சுகமடைந்து விட்டேன்" என்று கூறும் வரைக்கும் நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கலாம். பாருங்கள்; சகோதரனே, அதை நீ உணருவாய் ஆனால், நடந்து கொண்டேயிரு. தேவன் பெலிஸ்தியரைக் கவனித்துக் கொள்வார், கவலைப்படாதே. 141. நீங்கள் எப்பொழுதாகிலும் நினைத்துப் பார்த்ததுண்டா, எவ்விதம் சிம்சோன் அந்த கழுதையின் பழைய தாடை எலும்பைக் கொண்டு... அந்த தலைச் சீராக்களின் கனம் எவ்வளவென்று உங்களுக்குத் தெரியுமா-? அவைகளில் சில, ஒன்று அல்லது ஒன்றரை அங்குலம் கனமுள்ள திடமான பித்தளையினால் செய்யப்பட்டவை. இரண்டு கைப்பிடி கொண்ட பட்டயத்தை எடுத்து அவன் தலையின் மேல் அடித்தாலும், அது அவனை ஒன்றும் செய்யாது. சிம்சோன் ஒரு பழைய அழுகிப் போன, மன்னிக்கவும், உலர்ந்த கழுதையின் தாடை எலும்பைக் கையிலெடுத்து அவர்கள் ஆயிரம் பேரை மடங்கடித்தான். அந்த தாடையெலும்பு அந்த தலைகளில் ஒன்றைத் தொட்ட மாத்திரத்தில் சுக்குநூறாக உடைந்திருக்கும். ஆனால், பாருங்கள், அந்த அற்புதம் சிம்சோனில் இருந்தது போலவே அந்த தாடையெலும்பிலும் இருந்தது. அவன், "அந்த வாக்குத் தத்தத்தை அங்கு நான் உணரமுடியுமானால், அவர்களைக் கொண்டு வாருங்கள்” என்றான். சகோதரனே, அவன் பெலிஸ்தியரை, வலது புறத்திலும் இடது புறத்திலும் அடித்து வீழ்த்தினான். ஏன்-? கடைசி பெலிஸ்தியன் தரையில் விழும் வரைக்கும் அவன் விடாப்பிடியாய் இருந்தான். ஆமென்-! அவன் என்ன வைத்து இருந்தான்-? ஒன்றும் அதிகமில்லை. பட்டயங்களையும் ஈட்டிகளையும் பயிற்சி பெற்ற மனிதரையும் சண்டையிட அவனிடம் வெறும் கழுதையின் தாடையெலும்பு மட்டுமே இருந்தது. ஆனால் அவன் மேல் தேவனுடைய வல்லமை தங்கி இருந்தது. நீங்கள் கவனித்தீர்களா, தேவனுடைய வல்லமை முதலில் அவன் மேல் வந்தது. 142. ஓ, சகோதரனே, ஒவ்வொரு அறிகுறியும் (symptom) போகும் வரைக்கும் போராடு. அல்லேலூயா-! ஒவ்வொரு சந்தேகமும் தீரும் வரைக்கும் போராடு. 143. நீங்கள், "என் விஷயம் வித்தியாசமானது,” எனலாம். அந்த தாடை எலும்பைக் கையிலெடுத்து அதை மடங்கடி. 144. இந்த ஒருவர், “ஆனால், உனக்குத் தெரியுமா, நான் சிறிது வித்தியாச மானவன், எனக்கு வயது அதிகமாகி விட்டது,” எனலாம். அதை அடித்து வீழ்த்து. ஆபிரகாமுக்கு 100 வயது. சென்று கொண்டேயிரு. 145. "நல்லது, என் விஷயமோ மிகவும் மோசமானது” யோனா கைகள் பின்னால் கட்டப்பட்டவனாய், அந்த மீனின் வயிற்றில், அந்த மீனின் வாந்தியில் சிக்கிக் கொண்டிருந்தான். அவன் எங்கு பார்த்தாலும் அது மீனின் வயிறாகவே இருந்தது. அவனுக்கு நிறைய அறிகுறிகள் இருந்தன. ஆனால் அவனோ திரும்பிப் பார்த்து, "இன்னும் ஒருமுறை உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன், கர்த்தாவே," என்றான். அவரை மறைக்க முடியாது. அது தான், விடாப்பிடி-! விடாமுயற்சி, தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நில்லுங்கள். யோனா ஏன் அவ்விதம் உறுதியாய் நின்றான்-? ஏனெனில் சாலொமோன் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்த போது அவன், "கர்த்தாவே, உம்முடைய ஜனங்கள் எங்காவது தொல்லையில் அகப்பட்டுக் கொண்டு, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணினால், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, அந்த விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளுவீராக” என்று ஜெபம் பண்ணினான் என்பதை அவன் அறிந்திருந்தான். இந்த ஒன்றை அவன் அறிந்திருந்தான், அதாவது தேவன் அந்த ஜெபத்தைக் கேட்பாரென்று. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சிக்கியிருந்த யோனாவுக்கு தேவன் பேரில் அவ்வளவு விசுவாசம் இருக்குமானால், உங்களைக் குறித்தென்ன-? இங்குள்ள யாருக்குமே அவ்வளவு மோசமான சூழ்நிலை இல்லை. அப்படியானால் இன்னும் எவ்வளவு அதிகமாக-! முடிவில் பின்வாங்கிப் போன ஒரு மனிதனின் ஜெபத்தை ஆதாரமாகக் கொண்டு அவன் தேவாலயத்தை நோக்கினான். தேவன் அதை பிரதிஷ்டை செய்தார் என்பதை பரிசுத்தாவியானவர் அக்கினி ஸ்தம்பத்தைக் கொண்டு சாட்சி பகர்ந்தார். அது தேவாலயத்துக்குள் நுழைந்து திரைக்கு பின்னால் சென்றது. அதே அக்கினி ஸ்தம்பம் - அதன் புகைப்படம் இன்று உங்களிடம் உள்ளது - நமது மத்தியில் அசைவாடி அதே அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்கின்றது. என்ன விஷயம்-? அமைதியாக கேளுங்கள். கவனியுங்கள். நாம் பூமியிலுள்ள ஒரு தேவாலயத்தையோ அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தையோ நோக்கிப் பார்ப்பதில்லை. நாம் தேவனுடைய வலது பாரிசத்தை நோக்கிப் பார்க்கிறோம். அங்கு இயேசு இரத்தம் தோய்ந்த தமது வஸ்திரத்துடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆமென். அவருடைய சொந்த இரத்தம் பிதாவுக்கு முன்னால் நம்முடைய அறிக்கையின் பேரில் வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் பிதாவுக்கு முன்பாக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார் என்று எபிரேயர் 3 உரைக்கிறது (எபி.7:25-தமிழாக்கியோன்). ஓ, என்னே-! பிரதான ஆசாரியர்-! யோனா வெளியே எட்டிப் பார்த்து மீனின் வயிற்றைக் காண மறுத்தால், நாம் எவ்வளவு அதிகமாக நமது சிறு வலிகளையும் நமக்கு என்ன உள்ளதோ அதை அனைத்தையும் காண மறுக்க வேண்டும்-! கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தை நான் நோக்குகிறேன். ஒரு பரிசுத்தவானை அவனுடைய ஜெபத்தில் இருந்து நீங்கள் மறைக்க முடியாது. அவ்வளவு தான் அதில் உள்ளது. நிச்சயமாக, ஓ, அவன். 147. நான் துரிதமாக முடிக்க வேண்டும், என் நண்பர்களே. நான் மறுபடியுமாக அதிகம் தாமதிக்கப் போகிறேன். இன்னும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம். 148. யோவான் மிகவும் நிச்சயம் உடையவனாயிருந்தான், ஏனெனில் தேவன் அவனிடம் கூறியிருந்தார். உங்களுக்குத் தெரியுமா, அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியன், ஆனால் விசித்திரமான காரியம் என்னவெனில், அவன் ஆசாரியன் ஆவதற்குப் படிக்கச் செல்லாமல் வனாந்தரத்துக்குச் சென்றான். அவன் மனிதத் தத்துவங்களினால் குழப்பமடைய விரும்பவில்லை. அவன் தன்னுடைய ஒன்பதாம் வயதில் சத்தியத்தைக் கண்டு கொள்ள வனாந்தரத்துக்குச் சென்றான். அவனுடைய பெற்றோர் வயோதிபராய் இருந்தனர், எனவே அவர்களுடைய தீர்க்கதரிசி குமாரன் அந்த நாளில் வல்லமை பொருந்தினவனாய் வருவதை அவர்கள் காண மாட்டனர் என்பதை அறிந்திருந்தனர். 149. ஞாபகம் கொள்ளுங்கள், அதே ஆவி - எலியாவின் ஆவி - இந்தக் கடைசி நாளில் நமக்கு வாக்களிக்கப்பட்டு உள்ளது. 150. ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு இவ்விதம் கூறின போது இதைக் குறிப்பிடவில்லை... அவர் யோவான் ஸ்நானனைக் குறிப்பிட்டார். நீங்கள் கவனிப்பீர்களானால், “என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்” மத்தேயு 3. இதை நீங்கள் கவனிக்காமல் போனால், வேதத்தில் முரண்பாடு காணப்படும். 151. அவர், “இந்த நாள் வருகிறதற்கு முன்னே, அதாவது, பூமியை அக்கினியால் சுட்டெரிக்கும் கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே,” என்றார். யோவானின் நாட்களில் பூமியானது அக்கினியால் சுட்டெரிக்கப்படவில்லை. இந்த வருகைக்குப் பின்பு உலகம் அக்கினியால் சுட்டெரிக்கப்படும். காரியங்களை நேராக்கவும் ஜனங்களை தேவனுடன் ஒப்புரவாக்கவும் அவர் எலியாவை அனுப்புவார். முதலாம் எலியா வரும் போது என்ன செய்வான் என்றால், அவன் பிதாக்களுடைய விசுவாசத்தை பிள்ளைகள் இடத்திற்குக் கொண்டு வருவான். ஆனால் கடைசி நாட்களில் தோன்றும் எலியா, அவர்களை பிதாக்களின் விசுவாசத்திற்கு கொண்டு செல்வான். பாருங்கள்-? பாருங்கள், மூல பெந்தெகொஸ்தே பிதாக்களுக்கு. தொடக்கத்தில் இருந்த சரியான செய்திக்கு. எலியா-! "தேவனே. அவனை அனுப்பும்” என்பதே என் ஜெபம். "ஓ. கர்த்தாவே, அவனை அனுப்பும், அவனைத் துரிதமாக அனுப்பும்”. அவன் காட்சியில் தோன்ற வேண்டுமென்று நாம் ஜெபிப்போம். தேவன் தமது பிரதிநிதியை எப்பொழுதும் பூமியில் எங்காவது வைத்திருப்பார். அவருக்கு எங்காவது ஒரு சாட்சி இல்லாமல் இருந்ததில்லை, எப்பொழுதுமே உண்மையாய் நிற்கும் சாட்சி ஒருவன் இருந்து வந்திருக்கிறான். நாம் நம்புகிறேன் அவன்... இப்பொழுது நாம் கர்த்தருடைய வருகையின் நிழலில் இருக்கிறோம் என்று நம்புகிறேன். தேவனுடைய வல்லமை மறுபடியும் எலியா தீர்க்கதரிசியின் ரூபத்தில் எழும்பி, அவன் இங்கு அனுப்பப்பட்டு ஜனங்களை நேராக்கி, அந்த சிறு கூட்டத்தை கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது. நோவாவின் நாட்களில் இருந்தது போல, லோத்தின் நாட்களில் இருந்தது போல, இப்பொழுதும் சபையானது சிறுபான்மையோரைக் கொண்டதாய் இருக்கும். 152. சரி, யோவான் மதசம்பந்தமான பயிற்சி பெறச் செல்லவில்லை, அவன் அனுபவம் பெற வனாந்தரத்துக்குச் சென்றான் என்று நாம் காண்கிறோம். அவன் வெளியே வந்த போது, வனாந்தரத்தில் கண்டவைகளைக் குறித்தே பேசினான். "விரியன் பாம்பு சந்ததியே", அவன் வனாந்தரத்தில் பாம்புகளைக் கண்டான். "கோடாலியானது மரத்தின் வேரருகே வைத்திருக்கிறது”. அவன் உடைய பிரசங்கங்கள் இவைகளை ஆதாரமாகக் கொண்டு இருந்தன. ஆனால், கவனியுங்கள், அவர்கள் அவனிடம் வருகின்றனர். அப்பொழுது அவன், "நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவிலே நின்று கொண்டிருக்கிறார்," என்றான். அவன் என்ன பேசுகிறான் என்பதை அறிந்திருந்தான். "நீ தான் மேசியாவாக அவன், “இல்லை” என்றான். 153. "மேசியா-தீர்க்கதரிசி எழும்ப வேண்டும் என்று எழுதியிருக்கிறதே, அந்த தீர்க்கதரிசி நீ தானா,” அவன், "நான் அல்ல. ஆனால் அவர் இப்பொழுது உங்கள் நடுவில் நின்று கொண்டு இருக்கிறார்”. 154. ஒரு வேளை பிரதான ஆசாரியனாகிய காய்பா அப்பொழுது அங்கு இருந்திருக்கக் கூடும். அவன் இருந்திருக்க மாட்டான் என்று நினைக்கிறேன். அது போன்ற ஒரு இடத்துக்கு வருவதற்கு அவன் மிகவும் மேன்மையுள்ளவன். அங்கு இருந்த யாராவது ஒரு ஆசாரியன். "ஐயா, இதோ சகோ.ஜோன்ஸ் இருக்கிறார். அவர் மிகவும் அருமையானவர். சகோ. இன்னார் இன்னார் இங்கு இருக்கிறார். சகோ.ஜான்-டோ இருக்கிறார். கர்த்தர் அவரை மேசியாவாக நியமித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி இருப்பான். 155. அதற்கு யோவான், "அவரை நான் அறிந்து கொள்வேன், அவரை ஒரு அடையாளம் தொடரும்," என்று சொல்லி இருப்பான். அவன் என்ன என்று அறிந்து இருந்தான். விளங்கிக் கொள்ளும் ஆவிக்குரியவர்கள் பாக்கியவான்கள். தங்கள் கண்கள் காண்கிறவர்களும், காதுகள் கேட்கின்றவர்களும் பாக்கிய வான்கள். யோவான், "அவரை நான் அறிந்து கொள்வேன். தேவன் அவரை அடையாளம் காண்பிப்பார்” என்றான். தேவன் தமது ஊழியக்காரரை உறுதிப் படுத்துகிறார். ஆம், ஐயா. சிறிது நேரம் கழிந்து, இயேசு அங்கு வந்தார். யோவான் மேலே நோக்கி அதைக் கண்டான். அவன், "இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். பி.எச்.டி எல்எல், இரட்டை எல் பட்டம் பெற்றவர்கள், அது எதுவானாலும், ஏதோ ஒரு ஆசாரியன், அந்நேரத்தில் ஆடம்பரத்தைக் கொண்ட மிகவும் விரும்பத்தக்க ஒருவர் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று அவன் விடாப்பிடியாய் இருந்தான். அவன்... அந்த மனிதன் அங்கு வந்தார், அவர் யாரென்பதை அவன் அறிந்து கொண்டான். ஏனெனில் அவரை ஒரு அடையாளம் தொடர்ந்தது. அவர் யார் என்பதை அவன் அறிந்து கொண்டான். 156. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்". தேவனுடைய சபை எழுப்பப்பட்டு, அதற்கு வல்லமை அளிக்கப்பட்டுள்ளது. ஆம். இப்பொழுது, இந்த பொருளை நான் முடிக்கும் வரைக்கும் பொறுமையாய் இருங்கள். யோவான் விடாப்பிடியாய் இருந்தான். அவனுக்கு விடாமுயற்சி இருந்தது. ஏனெனில் அந்த மேசியாவை அவன் அறிந்து கொள்வான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனெனில் மேசியா ஒரு அடையாளத்தைப் பெற்று இருப்பார். இன்று நாம் அடையாளங்களைக் காண்கிறோம், வரப் போகும் மேசியாவின் அடையாளங்கள் நெருக்குகின்றன. இப்பொழுது அமைதியாய் கேளுங்கள் . 157. அந்த கிரேக்க ஸ்திரீ இயேசுவைக் குறித்து கேள்விப்பட்ட போது; “விசுவாசம் கேள்வியினால் வரும்”. அவள் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவள், ஒரு அஞ்ஞானி. அவள் கேள்விப்பட்டு வருகிறாள். என்ன தெரியுமா-? விசுவாசம் மற்றவர்கள் காணக்கூடாத ஒரு உற்பத்தி ஸ்தானத்தை (source) கண்டு பிடிக்கிறது. விசுவாசம் மற்றவர்கள் காணக்கூடாத ஒரு உற்பத்தி ஸ்தானத்தைக் கண்டு பிடிக்கிறது. 158. நீங்கள், “ஓ, அங்கே என்ன இருக்கிறது-? இங்கே என்ன இருக்கிறது-? அந்த இடத்தில் என்ன இருக்கிறது-? அந்த சிறு.... ஓ, அது ஒரு சிறு கூட்டம். அது இன்னின்னது. தேவன் ஏதாகிலும் ஒன்றைச் செய்வாரானால், அவர் ரோமன் கத்தோலிக்க சபைக்கு வருவார். அவர் மெதோடிஸ்டு சபையின் தலைமை பேராயரிடம் வருவார். அவர் ஆங்கலிகன் குருவானவர்களிடம் வருவார், அவர்கள் யாரிடத்திலாவது. அவர் வருவார்...” என்கிறீர்கள். ஆம், அவர்கள் அப்படித் தான் தொடக்கத்தில் எண்ணினார்கள். ஆனால் அவர் எங்கே பிறந்தார்-? ஒரு களஞ்சியத்தில். அவருடைய சீஷர்களை அவர் எங்கிருந்து பெற்றார்-? நதிக் கரையில், மீன் பிடிப்பவர்கள், தாழ்ந்தவர்கள், படிப்பில்லாதவர்கள். பாருங்கள், தேவன் தமக்கு விருப்பமானதைச் செய்கிறார், அவரை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். 159. இஸ்ரவேல் ஜனங்கள், மோவாப் தேசத்தின் வழியாக கடந்து சென்ற போது. அது எவ்விதம் வித்தியாசமாயிருந்தது-? மோவாபியர் இஸ்ரவேலர் செய்த விதமாகவே ஏழு காளைகளை பலி செலுத்தினர். மோவாபியர் ஏழு பலிகளை, ஏழு ஆட்டுக்கடாக்களை இஸ்ரவேலர் செலுத்தின விதமாகவே செலுத்தினர். அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரே விதமாக இருந்தனர். உண்மையில் அவர்கள் சகோதரர்கள். மோவாப், லோத்தின் குமாரத்தியிடம் பிறந்தான். அங்கு பாலாக் அதே பலியைச் செலுத்தி, அதே அடிப்படையில் இருந்தான். ஆனால் வித்தியாசத்தை உண்டாக்கினது எது-? அந்த இருவரில் ஒருவரிடம் பாளயத்தில் அடிக்கப்பட்ட கன்மலையும், அக்கினி ஸ்தம்பமும், ராஜாவின் ஜெய கம்பீரமும் இருந்தது. ஸ்தாபனத்தைச் சேர்ந்திராத ஒரு கூட்டம். அவர்களுக்கு வீடு இல்லை, தங்கள் சொந்தம் என்று அழைக்க ஒரு இடமும் இருக்கவில்லை. அவர்கள் அந்நியரும் சஞ்சாரிகளுமாய் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு அலைந்து திரிந்து தங்களை அந்நியரும் சஞ்சாரிகளுமென்று அழைத்துக் கொண்டனர். அவர்கள் ஒரு நகரத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். 160. இன்றும் அவ்வாறேயுள்ளது. ஏதோ ஒரு பெரிய ஸ்தாபனத்துடன் தொடர்பு அல்ல. அதனால் பரவாயில்லை. நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் களாய் இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, நீங்கள் எதை வேண்டும் ஆனாலும் சேர்ந்து இருங்கள். ஆனால் முதலாவதாக உங்கள் பெயரை பரலோகத்திலுள்ள புத்தகத்தில் பதிவு செய்யுங்கள், தேவன் அதை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு எழுதட்டும். பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர் எழுதின ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று விசுவாசிக்கத்தக்க விசுவாசத்தைப் பெறுங்கள். பார்த்தீர்களா-? ஆம். 161. இப்பொழுது, இந்த ஸ்திரீ கிரேக்க தேசத்தாள். ஆனால் விசுவாசமோ மற்றவர்கள் ஒன்றுமே அறியாத உற்பத்தி ஸ்தானத்தைக் கண்டு பிடிக்கிறது. 162. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தை ஒரு பட்டயம். வேதம் அவ்விதம் உரைக்கிறது. அது ஒரு பட்டயம். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது எபி.4:12. "தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானது” என்று எபி.4:12 உரைக்கிறது. இங்கு ஒரு நிமிடம் நிறுத்த விரும்புகிறேன். கவனியுங்கள். "தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கான தாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிற தாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிற தாயும் இருக்கிறது”. அது சரியா-? இங்கு ஒரு நிமிடம் நிறுத்துவோம். “இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாய் இருக்கிறது” என்பதை இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வேதம் பொய் சொல்லுகிறதா-? அது பொய் சொல்ல முடியாது. அது தனக்குத் தானே முரணாய் இருக்குமானால், அது எழுதப்பட்டு உள்ள காகிதத்தின் மதிப்பும் கூட அதற்கு கிடையாது, அது ஏமாற்றும் ஒன்று. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாய் இருக்குமானால், நீங்கள் எதை விசுவாசிப்பீர்கள்-? 163. அண்மையில் ஒரு இந்திய பையன் சூடான் மிஷன் தலைவரான டாக்டர் மாரிஸ்-ரீட்ஹெட் என்பவரிடமும் அங்கிருந்த மற்றவர்களிடமும் வந்தான். டாக்டர்.ரீட்ஹெட் அவனிடம், “இதை நினைவில் கொள். இயேசு ஜீவிக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் அவர் என் இருதயத்தில் வாழ்கிறார். அது உண்மை,” என்றார். 164. அதற்கு அந்த பையன், "ஆம், முகம்மதும் கூட என் இருதயத்தில் வாழ்கிறார். கிறிஸ்தவ மார்க்கம் போலவே நாங்களும் முகம்மதிய மார்க்கத்தில் அவ்வளவு மனோதத்துவத்தை தோன்றச் செய்ய முடியும். ஆனால் மாற்கு.16-ல் கூறப்பட்டுள்ள அடையாளங்கள் நிறைவேறுவதை நான் காண விரும்புகிறேன்,” என்றான். 165. அவர், "ஓ, அதுவா, நீ சும்மா... பார், 9-ம் அதிகாரத்தில் இருந்து... மாற்கு 16-ம் அதிகாரம் 9-ம் வசனம் முதற்கொண்டு உள்ள வசனங்கள் மற்றவைகளைப் போல் தேவனுடைய ஆவியால் ஏவப்படவில்லை. அதை வாடிகன் அங்கு நுழைத்தது,” என்றார். 166. அவன், "ஒருக்கால் மற்ற வசனங்களும் கூட தேவ ஆவியால் ஏவப்படாமல் எழுதப்பட்டிருக்கக் கூடும். அப்படியானால் நீங்கள் எந்தவிதமான புத்தகத்தைப் படிக்கிறீர்கள்-? ஆனால் கொரான் முழுவதுமே தேவனால் ஏவப்பட்டு எழுதப் பட்டது," என்றான். என்ன ஒரு அவமானம்-! கிறிஸ்தவ சபைக்கு என்ன ஒரு அவமானம்-! ஒன்று அது தேவனுடைய வார்த்தையாய் இருக்க வேண்டும். அல்லது அது தேவனுடைய வார்த்தையாய் இல்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அதில் விசுவாசம் வைப்பீர்களானால், அது கிரியை செய்வதைக் காண்பீர்கள். அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளுங்கள். ஆம், ஐயா, அதை நாம் விசுவாசிப்போமானால். 167.. என்ன-? இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாய் இருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது” பரி.யோவான்.1, அந்த வார்த்தை மாம்சமாகி கிறிஸ்து ஆனது”. அவர் இவ்வுலகில் வந்த போது. ஜனங்களை நோக்கிப் பார்த்தார். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்து, "என்னைத் தொட்டது யார்-?” என்று கேட்டார். பேதுரு அவரைக் கடிந்து கொண்டான். அவர் சுற்றிலும் பார்த்து, "என்னைத் தொட்டது யார்-?” என்றார். பேதுரு. “எல்லாருமே உம்மைத் தொடுகிறார்கள்,” என்றான். 168. அவர் சுற்றிலும் பார்த்து, "ஆனால் நான் பலவீனமடைந்ததை அறிகிறேன்” என்றார். அவர் பார்த்த போது, பெரும்பாடு நின்று போயிருந்தது. என்ன-? தேவனுடைய வார்த்தை சிந்தனையை அறிந்து கொள்ளுதல். 169. அந்த பரிசேயர்கள் தங்கள் இருதயத்தில், “அவன் பெயல்செபூல். அவன், அது தான் அவன். அது தான் முற்றிலுமாக,” என்றனர். 170. அவர் திரும்பிப் பார்த்து, "அதற்காக உங்களை மன்னிக்கிறேன்” என்றார். இயேசு கூட்டத்தில் உள்ளவர்களைப் பார்த்து, அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொள்ளுதல். அது என்ன-? வார்த்தை, வார்த்தை மாம்சமாகி, இருதயத்தில் உள்ள நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுத்தல். இப்பொழுது தேவனுடைய வார்த்தை அவ்விதமாகவே உள்ளது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பாருங்கள்-? 171. ஜீவனுள்ள தேவனை உங்களில் பெற, நீங்கள் ஜீவனுள்ள வார்த்தையை உங்களில் பெற்றவர்களாய் இருக்க வேண்டும். ஏனெனில் இங்குள்ள வார்த்தை உங்களில் மாம்சமும், ஆவியும், ஜீவனுமாகும்போது. அது தேவனாகி விடுகிறது. அது உங்கள் மாம்சத்துக்குள்ளும் உங்கள் விசுவாசத்திலும் சென்று, ஜீவனாகும் போது நீங்கள் ஜீவிக்கிற திருஷ்டாந்தமாய் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லா மனிதராலும் வாசிக்கப்படுகிற தேவனுடைய நிரூபங்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் கிறிஸ்துவைப் போல் பரிபூரணத்தைப் பெற்றிருக்கமாட்டீர்கள், ஏனெனில் அது பெந்தெகொஸ்தே நாளில் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 172. பரிசுத்தாவியைப்பெற அந்நிய பாஷை பேச வேண்டும் என்று விசுவாசிக்கும் ஜனங்களே, இதற்கு நீங்கள் ஒரு நிமிடம் செவி கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி இறங்கி வந்த போது, அது அக்கினி மயமான நாவுகளாக இருந்தது. அதுதான் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின அக்கினி ஸ்தம்பம். அது தன்னை நாவுகளாக பிரித்துக் கொண்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது - தேவன் தமது சபையில் வாசம் செய்தல். ஆம், ஐயா, பரிசுத்தாவி. அது உண்மை. அங்கு தான் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் பாஷைகளைப் பேசினர். அது யாருக்கும் தெரியாத பாஷை அல்ல. அவர்கள் வெளியே இருந்த ஜனங்களிடம் பேசினர். அவர்கள் அதைப் புரிந்து கொண்டனர். அந்த சமயத்தில் சுவிசேஷம் வெளியே செல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள் கூடி இருந்தவர் களிடம் சென்று அதன் பிறகு வெளிப்பிரகாரத்துக்குச் சென்று பாஷைகள் பேசத் தொடங்கினர், மற்றவர்களுக்குத் தெரியாத பாஷைகள் அல்ல. நீங்கள் மற்றவர்களுக்குப் புரியாத பாஷைகயில் பேச வேண்டும் என்று நினைக்கும் போது, அதைத்தவறாகக் கருதுகிறீர்கள். இல்லை, ஐயா. அவர்கள் பாஷைகளைப் பேசினர். அங்கிருந்த ஒவ்வொருவரும் அதை புரிந்து கொண்டனர். "நம்முடைய பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே” (அப்.2:11). பரிசுத்தாவியை அனுப்பின தேவனுடைய செயல். இதைக் குறித்து இவ்வளவு: 173. இந்த தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது. என்ன-? அதை ஒரு கையினால் மட்டுமே உபயோகிக்க முடியும். பட்டயம் சக்தி நிறைந்தது. ஆனால் அதை ஒரு கையினால் உபயோகிக்காவிட்டால் அதில் ஒன்றுமில்லை. விசுவாசம் என்னும் கை தேவனுடைய வார்த்தையைக் கையில் எடுக்கும் போது, அது இயேசு செய்தவைகளையயே செய்யும். "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்”. 174. நீங்கள் ஒருக்கால் அதை கொண்டு சிறிது வெட்டலாம். ஒருக்கால் உங்களுக்கு பலவீனமான விசுவாசக் கரம் இருந்து நீங்கள் போதிய அளவுக்கு வெட்டி, “நல்லது, நான் இரட்சிக்கப்பட்டேன் என்பது வரைக்கும் என்னால் போதிய வெளிச்சத்தைக் காணமுடிகிறது,” எனலாம். ஆனால் மற்ற வாக்குத் தத்தங்களைக் குறித்தென்ன-? உங்களுக்கு பலமுள்ள விசுவாசக் கரம் இருக்கு மானால், தேவனுடைய வார்த்தையை நீங்கள் முழுவதுமாக கையிலெடுத்து, தேவனுடைய வெளிச்சம் பிரகாசிக்கும் வரைக்கும் ஒவ்வொரு இருளையும் வெட்டி அகற்றி, ஆமென், தமது வார்த்தையின் மேல் நின்று கொண்டிருக்கும் தேவனை முகமுகமாய் காணுங்கள். ஆமென். 175. இந்த ஏழை ஸ்திரீக்கு பல தடைகள் இருந்தன. அவளுக்குப் பல தடைகள் இருந்தன, ஆனால் அவளுடைய விசுவாசத்துக்கோ தடை எதுவுமில்லை. இல்லை, இல்லை. அவள் கேள்விப்பட்டாள். விசுவாசம் அதைப் பற்றிக் கொண்டது. ஒருக்கால் அவர்கள் அவளிடம் இவ்விதம் கூறியிருக்கக் கூடும்: "நீ ஒரு கிரேக்க ஸ்திரீ என்று உனக்குத் தெரியும். உனக்கு ஒன்றும் கிடைக்காது என்று உனக்குத் தெரியும். ஏனென்றால், இனவிலக்கு உள்ளது. பார். உனக்கு ஒன்றுமே கிடைக்காது”. ஆனால் அவள் அதற்கு கவனம் செலுத்தினாளா-? இல்லை, ஐயா. அவளுக்கு விசுவாசம் இருந்தது. அவளுக்குத் தேவையானது எல்லாம் அந்த விசுவாசமே. ஏனெனில் அது அங்கு நின்று கொண்டிருந்த தேவனுடைய வார்த்தை என்பதை அவள் அறிந்திருந்தாள். அவளுக்கு விசுவாசம் இருந்தது. அவர்களில் சிலர் அவளிடம் இவ்விதம் கூறியிருப்பார்கள்: "ஒரு நிமிடம் பொறு”. அவளுடைய சொந்த தேசம், அவளுடைய சொந்த சபை, "ஒரு நிமிடம் பொறு. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. அங்கு போகாதே. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன,” என்று கூறியிருக்கக் கூடும். ஆனால் விசுவாசத்தைக் குறித்த வேறொரு காரியம், அதற்கு ஒரு உற்பத்தி ஸ்தானம் உண்டு, அது இதற்கு கவனம் செலுத்துவதில்லை, அது இதைக் கண்டு கொள்வதே இல்லை. அவள் அந்த வார்த்தையை கையிலெடுத்துக் கொண்டாள். அவரே வார்த்தை. அதைப் பற்றிக் கொள்ள அவளுக்கு விசுவாசம் இருந்தது. அவள் நடந்து சென்றாள். அவர்கள் அவளைப் பார்த்து நகைத்து, "நல்லது, மற்றவர் எல்லோருமே உன்னைப் பார்த்து கேலி செய்யப் போகிறார்கள். ஏனெனில் உன் மகள் இந்த ஆண்டில் உள்ளது போல அடுத்த ஆண்டில் வியாதியாய் இருக்கப் போகிறாள். அவளுக்கு அப்பொழுதும் அந்த பிசாசு இருக்கும். அவள் அப்பொழுதும் அவ்வளவு வியாதிப்பட்டிருப்பாள்,” என்று சொல்லி இருப்பாரர்கள். ஆனால் அதற்கு அவள் எவ்வித கவனமும் செலுத்தவில்லை, விசுவாசத்தக்கு ஒரு பிடி உண்டு, பாருங்கள். "நீ அந்த கூட்டங்கள் ஒன்றுக்குச் செல்வாயானால், சபையை விட்டுப் புறம்பாக்கப் படுவாய். அதை ஞாபகம் கொள், அவர்கள் உன்னை புறம்பாக்குவார்கள். அவர்கள் உன்னை சபை பிரஷ்டம் செய்வார்கள்”. அதெல்லாம் அவளுக்கு முக்கியமாய் காணப்படவில்லை. விசுவாசம் அதை கடந்து உயரே சென்றது. அவள் இயேசுவிடம் செல்ல உறுதி கொண்டாள். அவ்வளவு தான்.. 176. இப்பொழுது நேரத்தை மிச்சப்படுத்த இவை ஒவ்வொன்றையும் ஒரு பொருளாகத் தெரிந்து கொண்டு அதில் நிலைத்திருக்க முடியும், ஆனால் இப்பொழுது நேரத்தை மிச்சப்படுத்த அவள் இயேசுவை அடைந்த போது, அவளுக்கே ஒரு ஏமாற்றம் உண்டானது. ஆனால் அவளுடைய விசுவாசத்துக்கு அல்ல. அவள் இயேசுவை அடைந்த போது அவர், "நான் உன் ஜாதிக்கு அனுப்பப்படவில்லை" என்றார். என்ன ஒரு உறுதியான புறக்கணித்தல்-! “நான் உன் ஜனத்தண்டைக்கு அனுப்பப்படவில்லை, நான் இஸ்ரவேலர் இடத்திற்கே அனுப்பப்பட்டேன். நீ ஒரு புறஜாதி. நான் உன்னிடம் அனுப்பப்படவே இல்லை. அது மட்டுமின்றி, நீங்கள் நாய்கள் அல்லாமல் வேறல்ல.” வ்யூ-! அது அந்த விசுவாசத்தை தொல்லைப்படுத்தவே இல்லை, அது முன்னேறிக் கொண்டே சென்றது. ஆம், அவர், "நான் இஸ்ரவேலில் காணாமற் போன ஆடுகளிடத்திற்கு அனுப்பப்பட்டேன்” என்றார். 177. அது நம்மில் ஒருவராக இருந்திருந்தால், ஓ, என்னே, அவ்வளவு தான். உன் ஸ்தாபனத்துக்கு ஒன்றுமே இல்லை. "ஓ, அவர் என் ஸ்தாபனத்தைக் குறை கூறி விட்டார். நான் மறுபடியும் அவர் பேசுவதைக் கேட்க மாட்டேன்”. உ,ஊ, பார்த்தாயா, உன் இஷ்டப்படி செய் , பார், உனக்கு ஒன்றுமே கிடைக்காது. அந்த வார்த்தையில் நிலைத்திரு. அந்த வார்த்தை எங்குள்ளதோ, அதனுடன் செல். விசுவாசம் நங்கூரம் இடப்பட்டு விட்டது-! 178. அவர்களில் சிலர், “நல்லது, இப்பொழுது, நான் என்னவென்று கூறுகிறேன். அவர்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள், அவர்கள் உன்னை சபையை விட்டு புறம்பாக்கப் போகிறார்கள்” என்று சொல்லி இருப்பார்கள். "அவர்கள் என்னைப் புறம்பாக்கட்டும், பாருங்கள், அதனால் பரவாயில்லை”. 179. இயேசு, “நான் உன் ஜாதிக்கு அனுப்பப்படவில்லை, நான் உங்களுக்காக வரவேயில்லை. நீங்கள் நாய்களன்றி வேறல்ல. பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களாகிய உங்களுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார் . வ்யூ-! 180. அது மெதோடிஸ்டுகளாகிய உங்களில் ஒருவராக, பாப்டிஸ்டுகளாகிய உங்களில் ஒருவராக, பிரஸ்பிடேரியன்கள் அல்லது பெந்தெகொஸ்தேயினராகிய உங்களில் ஒருவராக இருந்திருந்தால், என்னவாயிருக்கும்-? ஓ. என்னே-! நீங்கள், அந்த வஞ்சகன்-! நான் டாக்டர் இன்னார் இன்னாரிடமும், இன்னார் இன்னார் இடமும் கூறுவேன். அவர் சொன்னது சரியே,” என்று சொல்லியிருப்பீர்கள். பாருங்கள்-? பாருங்கள், உங்களுக்கு விசுவாசம் இல்லை . 181. அங்கு உதவி கிடைக்கிறது என்பதை அவள் அறிந்திருந்தாள், அவள் கேள்விப்பட்டு இருந்தாள். விசுவாசம் கேள்வியினால் (கேட்பதனால்) வரும். எதைக் கேட்பதனால்-? வார்த்தையை. அங்கு உண்மையான ஒன்று இருப்பதை அவள் அறிந்திருந்தாள். ஆம், அவள் இன்னும் பற்றிக் கொண்டிருந்தாள். அவள் எவ்வளவுதான்.... அவர். "இப்பொழுது, ஞாபகம் கொள் நான் உன்னிடம் அனுப்பப் படவில்லை. பிதா, என்னை புறஜாதியாகிய உங்களிடம் அனுப்பவில்லை, நீங்கள் ஒரு நாய்க்கூட்டம், நான் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து தகுதியற்ற நாய்க் கூட்டமாகிய உங்களுக்குப் போடுவேன் என்றா நினைக்கிறாய்-? நான் உன்னிடம் அனுப்பப்படவில்லை,” என்றார். இருப்பினும் அவளுடைய விசுவாசம் இறுகப் பற்றி இருந்தது. 182. சகோதரனே, அவள் உஷ்ண வீட்டில் வளர்ந்த செடி (hothouseplant) அல்ல, இன்றைய சில பயிர்களைப் போல் மிகக் கவனமாக பேணிப் பாதுகாப்பதற்கு. “ஓ, என்னே , நல்லது, நான் மறுபடியும் போகமாட்டேன், இவ்வளவு தான் அதில் உள்ளது”. ஓ, என்னே, உங்களால் விசுவாசம் என்னும் பட்டயத்தைக் கையில் பிடிக்க முடியாததைக் குறித்து வியப்பு ஓன்றும் இல்லை. தேவனுடைய வார்த்தைகளின் பேரில் நீங்கள் ஒப்புரவாவதைக் குறித்து வியப்பொன்றும் இல்லை. ஏதோ ஒரு விதமான பெண்மைத்தனமான சில காரியங்கள் ஒன்று சேர்க்கப்பட்டள்ள ஏதோ ஒரு இடத்துக்கு நீங்கள் செல்லுகின்றீர்கள் - உஷ்ண வீடுச் செடியே, முதலாம் சிறு பூச்சி உன்னைத் தாக்கும்போது, அது உன்னைக் கொன்று போடுகிறது, எல்லா நேரமும் உனக்கு பூச்சி மருந்து தெளிக்கப்பட வேண்டியதாய் உள்ளது. "ஓ, அதை நம்பாதே. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன”. அது பிசாசின் தெளிப்பு. மிருதுவான பாதமே-! 183. அவள் அப்படியல்ல. சகோதரனே, அவள் வலிமை உள்ளவள். அவள் உண்மையில் ஏதோ ஒன்றைக் கொண்டிருந்தாள். அவள் பற்றிக் கொண்டு இருந்தாள். அவள் என்ன செய்தாள்-? அவர் சொன்னது சரியென்பதை அவள் ஒப்புக் கொண்டாள். அவள் எப்பொழுதும்... உண்மையான விசுவாசம், கவனியுங்கள், அது உங்கள் ஸ்தாபனத்தை தாக்கினாலும் தாக்காவிட்டாலும், அது சத்தியத்தை ஒப்புக் கொள்ளும். ஆம், "ஐயா, சத்தியம், விசுவாசம். உங்களுக்கு விசுவாசம் இருந்து, அது தேவனுடைய வார்த்தை, தேவனுடைய வாக்குத்தத்தமாய் இருக்குமானால், மற்றவர்கள் என்ன சொன்னாலும், அதை நீங்கள் விசுவாசிப்பீர்கள். அதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். அவள் "அது உண்மை தான், ஆண்டவரே. நான் கிரேக்க ஸ்திரீ, நான் தகுதியற்றவள், நான் ஒரு நாய். நான்... நான் எதற்கும் தகுதியல்ல. ஆனால் நான் துணிக்கைகளை மாத்திரமே நாடுகிறேன்,” என்றாள். 184. நானும் துணிக்கை நாடுபவன் தான், நீங்களும் அல்லவா-? எனக்கு துணிக்கைகள் வேண்டும், கர்த்தாவே, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்று இருந்தது போன்ற ஒரு சபையை என்னால் பெற இயலாது. என்னால் முடியாவிட்டால், கர்த்தாவே, கீழே விழும் துணிக்கைகளை நான் பெற்றுக் கொள்வேனாக. பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, "இது தான் அது” என்றான். அது அதுவாய் இராவிட்டால், அது வரும் வரைக்கும் இதை கைக்கொள்வேன் என்று நான் எப்பொழுதும் கூறியதுண்டு, பாருங்கள். ஆம், ஆம். அது தோன்றும் வரைக்கும், இதை நான் கைக்கொள்வேன். பாருங்கள்-? இது வார்த்தை. யாராவது... எனக்குத் தெரியாது.... ஏனோக்கு, ஒரு பிற்பகல் நடந்து தேவனுடன் வீட்டுக்கு நடந்து சென்றதைப் போல் செல்ல எனக்குப் போதிய விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவ்வளவு விசுவாசம் எவருக்காகிலும் இருக்குமானால், அவருடைய வழியில் குறுக்கே நான் நிற்க மாட்டேன். ஆம், ஐயா. அவருக்கு இருக்குமானால், தேவனுக்கு ஸ்தோத்திரம். அதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருப்பேன். அந்த வார்த்தை அங்கு நங்கூரமிடப்படட்டும். மரணம் வரும் போது, ஒரு பாதை திறப்பதை நான் கண்டு, அதில் நடந்து செல்வதற்கென அந்த வார்த்தை என்னில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். அது உண்மை. ஆம். ஐயா. ஓ, எனவே, நான் துணிக்கைகளையே தேடுகிறேன். 185. இன்றைய நவீன மக்கள் சிலரிடம், “நீங்கள் துணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று சொல்லிப் பாருங்கள். "ஓ, முடியாது”. அவர்கள் முதன்மை ஸ்தானம் பெறாமல் போனால், அவர்களுக்கு ஒன்றுமே வேண்டாம். "நீங்கள் என்னிடத்தில் வந்து ... குஷ்டரோகம் பிடித்திருந்த நாகமானைப் போல. "நீங்கள் என்னிடத்தில் வந்து என் மேல் உங்கள் கைகளை வைத்து. இந்த வெவ்வேறு காரியங்களை எனக்குச் சொல்ல வேண்டும். இல்லை என்றால் நான் விசுவாசிக்கவே மாட்டேன். அது தான் முறை. நான் ஒரு போதும் அங்கு செல்லவே மாட்டேன்". அகையால் தான் உனக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. பாருங்கள்-? 186. நீங்கள் துணிக்கைகளைப் பெற்றுக் கொள்ள சித்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். உங்களுக்குக் கேட்கிறதா-? என் சகோதரனே, துணிக்கைகளைப் பெற்றுக் கொள். என் சகோதரியே, துணிக்கைகளைப் பெற்றுக் கொள். அவர் எதைக் கொடுத்தாலும், அதைப் பெற்றுக் கொள். "தேவனே,” என்று சொல்லி அவருக்கு நன்றி செலுத்து. "எனக்கு சிறிது விசுவாசம் உள்ளது. ஆனால் அதை நான் நிச்சயம் பற்றிக் கொண்டு அதற்காக உமக்கு நன்றி செலுத்தப் போகிறேன். நான் குணமடைய முடியும் என்று விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. தேவனுடைய வார்த்தை சரியென்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் இறுகப் பற்றிக் கொள்ளப் போகிறேன். நான் குணமாகப் போகிறேன்”. என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். துணிக்கையை பெற்றுக் கொள்ளுங்கள், மிகவும் சிறிய துணிக்கையை நிச்சயமாக. 187. ஞாபகம் கொள்ளுங்கள், அவள் ஒரு அற்புதத்தையும் கண்டதில்லை. அவள் ஒரு அஞ்ஞானி. அவர் தேவன் என்று அவள் அறிந்திருக்கவே இல்லை. அவள் அறிந்திருக்கவில்லை, அவள் கேள்விப்பட்டதன் மூலமே. ஆனால் அவள் அங்கு சென்ற போது, அவர் செய்த ஏதாவதொன்றை அவள் ஒருவேளை கண்டு இருக்கலாம், அது வித்தியாசமாய் இருந்திருக்கக் கூடும். பாருங்கள், அவர்கள், "உனக்குத் தெரியுமா, அவர்களுடைய வேதத்தில், கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார். அவர் அற்புதங்களைச் செய்து இருதயத்தின் இரகசியங்களை அறிந்து, ஜனங்களிடம் அவைகளைக் கூறுவார். பெரிய காரியங்கள் நிகழும் என்று உரைக்கப்பட்டுள்ளது,” என்று கூறுவதை அவள் கேட்டிருப்பாள். “அப்படியா-?” அற்புதம் செய்யப்படுவதை அவள் கண்டதில்லை, ஆனால் அவள் எப்படியும் அதை விசுவாசித்தாள். பார்த்தீர்களா, பார்த்தீர்களா-? 188. ராகாப் வேசியை இப்பொழுது நினைக்கிறேன். அவள் இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டதில்லை, ஆனால் அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவள் வேவு பார்க்க வந்தவர்களை ஒளித்து வைத்தாள். அவள் தன்னை வெறுத்து, தன் சபையை வெறுத்து. தன் சொந்த ஜனங்களையும் மற்றவைகளையும் வெறுத்து, வேவுகாரரை ஒளித்து வைத்தாள், ஏனெனில் அவள் கேள்விப்பட்டாள். அவள், "யோசுவா எப்பொழுதாவது பிரசங்கம் பண்ணி அதை நான் கேட்கும் வரைக்கும் காத்திருப்பேன். அவன் பிரசங்கம் செய்ததை நான் கேட்ட பிறகு என் கருத்தை நான் உருவாக்கிக் கொள்வேன். தேவன் எங்காவது சிவந்த சமுத்திரத்தை பிளப்பதை நான் காணட்டும். அல்லது அப்படி ஏதாவதொன்றை செய்வதை நான் காணட்டும். அப்படி ஏதாவதொன்றை நான் கண்டிருந்தால், உங்கள் எல்லோரையும் நான் ஒளித்து வைத்திருப்பேன்,” என்று கூறவில்லை. அவள் அதற்காக காத்திருக்கவில்லை. அவள், நான் விசுவாசிக்கிறேன். நாங்கள் கேள்விப்பட்டோம். நாங்கள் கேள்விப்பட்டோம்” என்றாள். 189. ஓ தேவனே, நான் கேள்விப்பட்டேன், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறான். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று நான் அறிந்திருக்கிறேன். அவர் இன்று தம்முடைய சபையில் ஜீவிக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அவர் இப்பொழுது இங்கிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். எனக்குத் தெரியும். அவர் என்னுடைய புகைப்படத்தை எடுக்கவில்லை என்று எனக்குத் தெரியும், அது அவருடையது என்று எனக்குத் தெரியும். இன்று நம்மோடுள்ளது அதே அக்கினி ஸ்தம்பம் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் அது அவர் செய்த அதே கிரியைகளை, அதே அடையாளங்களை, அதே அற்புதங்களை, அதே காரியங்களைச் செய்து கொண்டு வருகிறது. அது இஸ்ரவேலரை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம். இயேசுவே வனாந்தரத்தில் அவர்களுக்கு முன்பாக சென்ற உடன்படிக்கையின் தூதன் என்று தங்கள் வேதாகமத்தை நன்கு அறிந்து உள்ள எவருமே அறிவர். கிறிஸ்து தானே... மோசே, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி (எபி.11:26), வனாந்தரத்தில் அக்கினி ஸ்தம்பத்தைப் பின்பற்றினான். 190. இயேசு இங்கிருந்தபோது... அந்த அக்கினி ஸ்தம்பம் வெளிப்பட்டது. அவர், "நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்தி ற்குப் போகிறேன்,” என்றார். அவர் பிதாவினிடத்திற்கு மறுபடியும் சென்றார் . 191. அதன் பிறகு, அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பின்பு, பவுல் - அப்பொழுது தர்சு பட்டினத்தானாகிய சவுல் என்று அழைக்கப்பட்டவன் - தமஸ்குவுக்குப் போய்க் கொண்டிருந்த வழியில், அதே அக்கினி ஸ்தம்பத்தினால் தாக்கப்பட்டான். வேறு யாருமே அதைக் காணவில்லை. அவர்கள் எல்லோரும் அவனைச் சூழ இருந்த போதிலும், அவர்கள் அதைக் காணவில்லை. ஆனால் சவுல் அதைக் கண்டான். அப்பொழுது ஒரு சத்தம், "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்-?" என்று உரைத்தது. அவன், "ஆண்டவரே, நீர் யார்-?" என்றான். அவர், “நான் இயேசு. பார், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்குச் சென்று விட்டேன்,” என்றார். 192. ஜான் டில்லிங்கரின் ஜீவன் எனக்குள் உள்ளது என்று நான் உங்களிடம் கூறுவேனானால், நான் பெரிய துப்பாக்கிகளைக் கையில் பிடித்து உங்களைச் சுட்டு விடுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஒரு ஓவியனின் ஜீவன் எனக்குள் உள்ளது என்று நான் உங்களிடம் கூறுவேனானால், ஒரு ஓவியனைப் போல் ஒரு படத்தை நான் தீட்டுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். சபையே, கேள்-! நான் உங்களைக் கடிந்து கொள்ளவில்லை. பாருங்கள், கிறிஸ்துவின் ஜீவன் சபையில் இருக்குமானால், அது பரிசுத்தாவி சபையில் இருக்கு மானால், விஞ்ஞானம் புகைப்படம் பிடித்து, இந்த சபையில் நாம் எல்லா நேரங்களிலும் கண்டு கொண்டு இருக்கும் இந்த அக்கினி ஸ்தம்பம் கிறிஸ்துவின் ஆவியாய் இருக்குமானால், அது கிறிஸ்து செய்த கிரியை களைச் செய்யும். இயேசு, “என்னை விசுவாசிக்காவிட்டால், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசியுங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிற வைகள் அவைகளே,” என்றார். பரிசுத்தாவி இன்னும் உண்மையாயிருந்தால், அவர் தம்மைக்குறித்து சாட்சிக்கொடுப்பார். பரிசுத்த ஆவியின் கிரியைகளை விசுவாசியுங்கள். 193. நிறைய பாவனை விசுவாசமும் ஜோடிப்பும் நிலவி வருகின்றன. அதை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். அது வருமென்று தேவன் கூறியுள்ளார். ஆனால் அது என்ன செய்ய முயல்கிறது-? ஒரு கள்ள டாலர் இருந்தால், அது உண்மையான டாலரைப் பார்த்து செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜனங்கள் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொண்டதாக உரிமை கோரிக் கொண்டு அதே சமயத்தில் விபச்சாரத்திலும், குடியிலும், மற்றெல்லாவற்றிலும் நிலைத்து இருப்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதைப் பாவனை செய்ய முயல்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட உண்மையான சிலர் உள்ளனர். தேவன் அவர்களால் நடக்கிற அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்துகிறார். வேசி கேட்டாள், அவள் அதை விசுவாசித்தாள். 194. இப்பொழுது. இந்த ஸ்திரீ, இந்த சீரோபேனிக்கியா தேசத்தாள், இவளும் விசுவாசித்தாள், இந்த கிரேக்க ஸ்திர, அவள், "ஆண்டவரே” என்றாள். முதலில் அவள். "தாவீதின் குமாரனே,” என்றாள். ஒரு புறஜாதிக்கு தாவீதின் குமாரன் என்ற பெயரில் கிறிஸ்துவின் மேல் உரிமையில்லை. அது யூத வம்சத்தின் வழியாய் வந்த தாவீது ராஜா மூலம். அவர் எவ்வித கவனமும் செலுத்த வில்லை. ஆனால் அவள், "ஆண்டவரே, எனக்கு இரங்கும்,” என்று சொன்ன போது, ஆமென். அது அவரைக் கவர்ந்தது. அவர், அவளுக்கு ஆண்டவர், தாவீதின் குமாரன் அல்ல. அவர், அவளுக்கு ஆண்டவர். "ஆண்டவரே, எனக்கு இரங்கும்-!" அது அவரைப் பிடித்தது. அவள்... அவர் திரும்பிப் பார்த்தார். அவர், "மெய் தான், நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் ருந்து விழும் துணிக்கைகளைத் தின்னும் என்று நீ சொன்னது மெய் தான்,” என்றார். என்ன என்று பாருங்கள், அந்த ஸ்திரீ தேவனுடைய வரத்தை சரியான முறையில் அணுகினாள். அவள் என்ன சொன்னாள்-? அவள் சரியான முறையில் அணுகினாள் என்று அவர் கூறினார். 195. அவர் அவளை அவமானப்படுத்தினார். அவர், “நீங்கள்... நான் உங்களிடத்தில் அனுப்பப்படவில்லை. நீங்கள் உங்கள் சந்ததியில் நாய்கள். உங்களுடைய ஜாதி நாய்களேயன்றி வேறல்ல. நான் உங்களிடத்தில் அனுப்பப்படவில்லை” என்றார். 196. அவள், "மெய் தான், ஆண்டவரே” என்றாள். அதோ, வார்த்தை உள்ளது. ஆமென். வார்த்தையில் நிலைத்து இருங்கள். விசுவாசம் எப்பொழுதுமே வார்த்தையை அடையாளம் கண்டு கொள்ளும். ஆகிலும் நாய்கள் தங்கள் எஜமானின் மேசையில் இருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே”. அது அவரைக் கவர்ந்தது. "ஆண்டவரே, எனக்கு இரங்கும்”. 197. அவர் திரும்பி அவளை நோக்கி, "நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம்; ஓ ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது. நீ சொன்ன அந்த வார்தையினிமித்தம், பிசாசு, உன் மகளை விட்டு நீங்கிப் போயிற்று,” என்றார். என்ன, அவளுக்கு என்ன கிடைத்தது-? அவள் தேவனுடைய வரத்தை சரியான முறையில் அணுகினாள். நீங்களும் சரியான விதத்தில் அணுக வேண்டும்... அதுவே தாவீதின் குமாரனால் முதன் முறையாக ஒரு புறஜாதிக்கு செய்யப்பட்ட அற்புதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுவே புறஜாதிக்கு செய்யப்பட்ட முதலாம் அற்புதம், சீரோபேனிக்கியா தேசத்தாளின் மகளைக் குணப்படுத்துதல், அது உண்மை. அவள், தேவனுடைய வரத்துக்கு சரியான அணுகுமுறையைப் பெற்றிருந்தாள். வார்த்தையின் மத்தியில் விசுவாசம் என்பது சரியான பயபக்தி, தாழ்மை, பாருங்கள்-? 198. நீங்கள், "ஹு, அதை நான் விசுவாசிக்க மாட்டேன். எங்கள் சபை பிரமாணம் அதை கூறுவதில்லை, உ... ஊ, அதை நான் விசுவாசிக்க மாட்டேன்,” என்று சொல்லிக் கொண்டு திரியக்கூடாது. உங்கள் சபை பிரமாணம் என்ன கூறினாலும், நீங்கள் சபை பிரமாணத்தை அல்லது வேறெதாவதை தேவனுடைய வார்த்தைக்கு மேலாகவா உயர்த்தப் பார்க்கிறீர்கள்-? தேவனுடைய வார்த்தையே சத்தியம். மற்றதெல்லாம் பொய். பாருங்கள்-? 199. அவள் பயபகதியோடு, சமாதானத்தோடு, தாழ்மையோடு வந்தாள். நீங்கள் தாழ்மை உள்ளவர்களாய் இருக்கவேண்டும். மேலே போகும் வழி கீழே உள்ளது. எப்பொழுதுமே. "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (மத்.23:12). 200. அந்த நாளில் மார்த்தாளைப் பாருங்கள். ஓ, உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று அறிகிறேன். இதை வேறொரு நாள் உங்களுக்கு ஈடுபடுத்திக் கொடுத்து மிகவும் சிறிய பிரசங்கத்தைச் செய்கிறேன். கவனியுங்கள், நான் இன்னும் சில காரியங்களை இப்பொழுது கூறவேண்டும், அதன் பிறகு போய் விடுகிறேன். நீங்கள் பொறுமையை இழந்து போகவில்லை என்று நம்புகிறேன். மார்த்தாள், இயேசுவின் சமுகத்தில் மிகவும் விடாமுயற்சி உடன் இருந்தாள். பாருங்கள், அவள் அங்கு வந்து, "ஆண்டவரே" என்றாள். அவள் தன் சகோதரனுக்காக ஜெபிக்கும்படி அவருக்கு ஆளனுப்பினாள். அவர் அதை செய்யவில்லை. 201. இப்பொழுது, யோவான்.5:18ல் இயேசு கூறினார், அது யோவான் 5:19 என்று நினைக்கிறேன், அவர் பெதஸ்தா குளத்தின் வழியாக கடந்து செல்கையில் அவர் பார்த்தார். முப்பத்தெட்டு வருடம் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் அங்கு இருந்தான் என்று அவர் அறிந்திருந்தார். பாருங்கள், சுமார் இரண்டாயிரம் பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர் - மாங்காய் தலை பிள்ளைகள், முடவர்கள், குருடர்கள், சூம்பின கையுடையவர்கள் போன்றவர்கள். இயேசு அந்த குளத்தின் வழியாக கடந்து செல்கையில் சுற்றிலும் பார்த்து அன்பினாலும் மனது உருக்கத்தினாலும் நிறைந்தார். பாருங்கள், அன்பு என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது. நாம் மனித ரீதியில் அதை எடுத்துக் கொள்கிறோம் மனது உருக்கம் நிறைந்தவர், நிச்சயமாக, நாம் மனித மனதுருக்கத்தை குறித்து பேசுகிறோம். உண்மையான மனதுருக்கம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதே பாருங்கள்-? அது தான் அது. 202. "ஓ, அவனிடம், நான் ஒன்றும் கூற மாட்டேன். அவன் ஒரு நல்ல பையன். அவன் குடிக்கிறான், அவன் இதை செய்கிறான்”. அவனுக்கு கிறிஸ்து தேவை. அதை நான் அவனிடம் கூற மாட்டேன், ஏனெனில் அவன் நீண்ட காலமாக இந்த சபையை சேர்ந்தவன். அவனிடம் நான் தெய்வீக சுகமளித்தலைக் கூற மாட்டேன்”. ஓ, சகோதரனே, உனக்கு மனதுருக்கம் என்றால் என்னவென்று தெரியாது. 203. இயேசு அந்த வழியாய் கடந்து செல்கையில் அவர் தேவனுடைய சித்தத்தை அறிந்திருந்தார். ஞாபகம் கொள்ளுங்கள், அவர் மரித்துப் போன ஒரு மனிதனை உயிரோடெழுப்பினார். இங்கு என்ன நடந்ததென்று பாருங்கள். அவர் அந்த குளத்தின் வழியாய் வந்து, குளத்தின் பக்கத்தை அடைந்தார். அங்கு தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்தனர். கர்த்தருடைய தூதன் குளத்தைக் கலக்குவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர் நடந்து கொண்டிருந்தார், அதன் பிறகு அவர் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதனிடம் சென்றார். அவனுக்கு 'பிராஸ்ட்ரேட்' கோளாறு இருந்ததென்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு 38 ஆண்டுகளாக அது இருந்தது. அவர் அவனிடம், "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா-?" என்று கேட்டார். அப்படி ஆனால் அங்கிருந்த குருடர், சப்பாணிகள், சூம்பின கையுடையவர்கள் போன்றவர்களைக் குறித்தென்ன-? அவர், "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்பு கிறாயா-?” என்று கேட்டார். பாருங்கள், எங்கு செல்ல வேண்டுமென்று அவர் அறிந்திருந்தார். வார்த்தையாகிய தேவன் அவரை நடத்திச் சென்றார். அவர், "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா-?" என்று கேட்டார். 204. அவன், "ஐயா, என்னைக் குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவரும் இல்லை” என்றான். அவனால் நடக்க முடியும். "நான் போகிறதற்கு முன்னே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான்” என்றான். 205. அவர், "உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து போ” என்றார். அதற்காக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் கேள்வி கேட்க இயேசுவை நியாய ஸ்தலத்திற்கு கொண்டு வந்தனர். 206. அவர் இன்றைக்கு அதையே செய்திருப்பாரானால், அவரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அது உண்மை. "அவர் 2000 பேரை விட்டு விட்டாரே, அவர்களைக் குறித்தென்ன-? எனக்கு அங்குள்ள வயோதிப் சகோதரன் இன்னார் இன்னாரைத் தெரியும். சகோதரி இன்னார் இன்னார் மிகவும் நல்ல ஸ்திரீ. 20 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கிறார்கள். அவருக்குள் தேவன் இருந்து இருப்பாரானால், அவர் சென்று அவர்களை சொஸ்தப்படுத்தி இருப்பார்”. அதே பழைய பிசாசு இன்றைக்கும் அதையே கூறுகிறான். "நீர் அதுவாயிருந்தால், இது இப்படியிருந்தால், அது அப்படியிருந்தால்". அதே பழைய பிசாசு, பாருங்கள், அதே பழைய காரியம். 207. எனவே இந்த பரிசேயர்கள் இவைகளைக் குறித்து அவரை கேள்வி கேட்டனர். அவரைக் கவனியுங்கள், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறது எதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்”. (யோவான் 5:19). பாருங்கள், அவருக்குத் தரிசனம் உண்டானது. அந்த தரிசனம் அவருக்குக் காண்பித்தது. "பிதாவானவர் செய்ய நான் காண்கிறதெதுவோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்”. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பாருங்கள், அதே தேவன். 208. மார்த்தாள் அவருடைய சமுகத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால்” என்றாள். 209. அவர் ஏன் போகவில்லை-? ஏனெனில் லாசரு மரித்துப் போவான் என்று பிதா அவருக்கு ஒரு தரிசனம் காண்பித்திருந்தார். இப்பொழுது, பாருங்கள், அவர்கள் ஆட்களை அனுப்பினர். அவரோ வேறொரு ஊருக்குப் போனார். முடிவில் அவர். "லாசரு நித்திரை அடைந்து இருக்கிறான்” என்றார். அவர் உபயோகித்த சொல் அதுவே. ஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் கிடையாது. அது நமக்குத் தெரியும். ஓ. அவர்கள், "அவன் நித்திரையடைந்திருக்கிறான் என்றால், அவன் நன்றாய் இருக்கிறான். அவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்,” என்றனர். 210. அப்பொழுது அவர் வெளிப்படையாய், "லாசரு மரித்துப் போனான்” என்று அவர்களுடைய மொழியில் சொல்லி விட்டு, “நான் அவனை எழுப்பப் போகிறேன்,” என்றார். ஓ-! 211. அவள் இருந்த இடத்திற்கு அவர் நடந்து சென்றார். ஓ, என்னால் இதைக் காண முடிகிறது. அவர் ஊருக்குள் பிரவேசித்த போது அங்கிருந்த யூதர்கள் ஏளனமாக, உ- ஊ, அதோ அந்த தெய்வீக சுகமளிப்பவன்-! உ- ஊ. இவர்கள் இவனைப் பின்பற்றுவதற்காக தங்கள் சபையை விட்டுவிலகினர். உண்மையான விவகாரம் வந்தபோது, அவனுடைய நண்பனும் கூட ஊரை விட்டு மெல்ல நழுவி விட்டான். அப்பொழுது ஆட்களை அனுப்பினதற்கு, இப்பொழுது வருகிறான்,” என்று கூறினதை என்னால் கேட்க முடிகிறது. இயேசு நடந்து சென்றார். 212. ஆனால் மார்த்தாளின் இருதயத்திலோ ஏதோ ஒன்று இருந்தது. அவள் எப்பொழுதுமே ஒருவிதமான ஒழுங்குள்ளவள். அவள் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மற்றவைகளைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணங் கொண்டவள்; மரியாள் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்தாள். இங்கு தான் அவள் தன் உண்மையான இயல்பைக் காண்பித்தாள். அவள் மெல்ல நழுவி அங்கு சென்றாள். நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா, அவள் வேதத்திலுள்ள சூனேமியாளைக் குறித்து படித்திருப்பாள். அவள் என்ன சொன்னாள்-? அவள் வெளியே சென்று, "ஆண்டவரே” என்றாள். அது தான் அவர். "நீர் ஏன் வரவில்லை-? நாங்கள் இனி மேல்... நீர் உண்மையில் ஒரு உருளும் பரிசுத்தர் என்று இப்பொழுது நாங்கள் நம்புகிறோம்,” என்று அவரைக் கடிந்து கொள்ள அவளுக்கு உரிமை இருந்தது போல் தோன்றினது. பாருங்கள், அவள் அவ்விதம் செய்திருந்தால், அந்த அற்புதம் நடந்திருக்காது. 213. ஆகையால் தான் இன்று அற்புதங்கள் நிகழ முடிவதில்லை. ஓ. அவர் இங்கு ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். அவரை நீங்கள் காண்பதில்லை, அவர் தமது வார்த்தையுடன் ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். பாருங்கள்-? ஓ, நிச்சயமாக. நீங்கள் எழுப்புதலுக்காக ஜெபித்தால். சபையில் எழுப்புதல் உண்டாகிறது, ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்களோ, யாராகிலும் ஒருவர் “தேவனுக்கு மகிமை, அல்லேலூயா” என்று சத்தமிட்டால், சபையை மூடி விடுகிறீர்கள். எழுப்புதல் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை. கிறிஸ்து உங்கள் சபைக்கு வருகிறார், நீங்களோ அவரை வரவேற்பதும் கூட கிடையாது. அவர் ஒரு அற்புதத்தை செய்து யாரையாகிலும் சுகப்படுத்தினால், உடனே, "அது டெலிபதியாய் இருக்கலாம்,” என்று சொல்லி விடுகிறீர்கள். அவர் உங்கள் மத்தியில் ஈடுபட முடியாததில் வியப்பு ஓன்றுமில்லை. லவோதிக்கேயா சபையின் காலத்தில்... அவர் வெளியே நின்று கொண்டு, கதவைத் தட்டிக் கொண்டு, தமது சொந்த சபையில் உள்ளே நுழைய முயன்று கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது உண்மை, வெளியே தள்ளப்பட்டார்-! 214. இப்பொழுது, மார்த்தாள் அவரிடம் நடந்து சென்று. "ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால், என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும், நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என்று கூறினதாக நாம் காண்கிறோம் (யோவான்.11: 21-22). 215. அவரைக் கவனியுங்கள். அவர், அவளைப் பரீட்சித்தார். அவர், "உன் சகோதரன் உயிர்தெழுந்திருப்பான்,” என்றார். 216. அவள், "ஆம், ஆண்டவரே. அவன் ஒரு நல்ல பையன். அவன் பொதுவான உயிர்த்தெழுதலில் உயிர்த்தெழுந்திருப்பான். அவன் கடைசி நாளில் உயிர்த்து எழுந்திருப்பான்,” என்றாள். 217. அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,” என்றார். அங்கு ஒரு பரீட்சையை வைத்தார். அங்கு ஒரு மனிதன் நின்று கொண்டு இதை கூறுகிறார்... இது வரைக்கும் இவ்வுலகில் வாழ்ந்தவர்களிலும் இனி வாழப் போகிறவர்களிலும் இவ்விதம் உரைக்கக்கூடிய ஒரே மனிதன் அவர் மாத்திரமே. அந்த தேவனுடைய குமாரன், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்,” என்றார். 218. வேதம், “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்று உரைக்கிறது (ஏசா. 53:2). ஒருக்கால் அவர் தோள் தொங்கியவராய், தலை நரைக்கத் தொடங்கின வராய் இருந்திருப்பார். அவருக்கு 30 வயதான போது, 50 வயது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டார். 219. அவர்கள், "உனக்கு 50 வயது தான் ஆகின்றது. நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாயே. உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதென்று இப்பொழுது நாங்கள் அறிந்து கொண்டோம்” என்றனர். பாருங்கள்-? ஒருக்கால் அவர் செய்த பணி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கும். 220. அவர், "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார் (யோவான்.8:58). ஆமென். அவர்கள் அதை அறியவில்லை. அவர் அங்கு மாம்சத்தில் திரையிடப்பட்டிருந்தார். 221. அவர், "நானே' உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா-?” என்றார். 222. அதற்கு அவள், "ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்.” என்றாள். "அவனை எங்கே வைத்தீர்கள்-?” 223. உங்களிடம் ஒரு சிறு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். இதை நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். இதைக் கூறும் போது நான் யாருடைய மனதையாவது புண்படுத்தினால், அதை நான் வேண்டுமென்று செய்யவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு முறை கிறிஸ்தவ விஞ்ஞானத்தை சேர்ந்த ஒரு ஸ்திரீ என்னிடம், “சகோ.பிரான்ஹாமே, நீங்கள் இயேசுவைக் குறித்து மிகவும் பெருமையடித்துக் கொள்கிறீர்கள்,” என்றாள். 224. நான், "ஓ, இல்லை, இல்லை. நான் பெருமையடிக்க வேண்டிய அளவுக்கு பாதி அளவு கூட பெருமை அடிப்பதில்லை. எனக்கு இன்னும் அதிக மொழிகள் தெரிந்திருந்தால் நலமாயிருக்கும், அவைகளைக் கொண்டு நான் பெருமை அடித்திருப்பேன்” என்றேன். பாருங்கள்-? அவள், “நீங்கள் அவரை தேவனாக்கி விடுகிறீர்கள்” என்றாள். நான், "அவர் தேவனாயிருந்தார்-! அவர் இன்னும் தேவனாயிருக்கிறார். அவர் என்றென்றைக்கும் தேவனாயிருப்பார்” என்றேன். அவள், "அவர், இறக்கக் கூடிய ஒரு மனிதன்,” என்றாள். நான், “அவர் மனிதன், தேவன் இரண்டுமாக இருந்தார்,” என்றேன். 225. அவள், “பரி.யோவான்.11-ம் அதிகாரத்தில் இயேசு லாசருவின் கல்லறைக்குச் சென்று கண்ணீர் விட்டார்” என்றாள். நான், "அது தான் உன் வேத வாக்கியமா-?” என்றேன். அவள், "ஆம்” என்றாள். 227. நான், "சகோதரியே” என்றேன். இதை அவபக்தியாய் கூறவில்லை. இங்கு நகைச்சுவைக்கு இடமில்லை. ஆனால் இதை அவளுக்காக கூறினேன். நான், "உன் விவாதம் பட்டினி கிடந்து சாகும் தருவாயிலுள்ள கோழிக் குஞ்சைக் கொண்டு உண்டாக்கின 'சூப்பைக் காட்டிலும் தண்ணீரா உள்ளது. அப்படி இருக்க முடியாது என்று உனக்கு நன்றாகத் தெரியும். உனக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன்,” என்றேன். 228. இதோ அவர் தோள் தொங்கினவராய் அழுது கொண்டே செல்கிறார். நீ அழும் போது அவர் கூட அழுகிறார். அவர் உன் வேதனைகளை உணருகிறார். அவர் நமது பலவீனங்களால் தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியர். அவர் அழுது கொண்டே, பிதாவானவர் அவரிடம் என்ன கூறினார் என்பதை அறிந்தவராய் லாசருவின் கல்லறைக்குச் செல்கிறார். ஏனெனில் பிதாவானவர் அவருக்கு ஒன்றையும் காண்பிக்காமல் அவர் தாமாகவே ஒன்றும் செய்ய மாட்டார். அதோ, அவர், பாருங்கள், போகிறார். அவர் அவனை உயிரோடு எழுப்பப் போகிறார், ஆனால் அவர், மானிடர்களுடன் சேர்ந்து அழ முடியும். அவர் அழுது கொண்டு கல்லறைக்குச் செல்கிறார். ஆனால் அவர் அங்கு நின்ற போது, ஓ என்னே, "கல்லை எடுத்துப் போடுங்கள்,” என்றார். 229. அவர்கள், "அவன் நாறுகிறான்-!” என்றனர். அவனுடைய மூக்கு உள்ளே விழுந்து போயிருந்தது. 72 மணி நேரம், பாருங்கள், இல்லை, நான்கு நாட்கள் இரவும் பகலும். பாருங்கள், அவனுடைய முகம் உள்ளே விழுந்திருந்தது, அவனுடைய சரீரம் அழுகிப் போயிருந்தது. அவர், "கல்லை எடுத்துப் போடுங்கள்” என்றார். அவர் அங்கு நின்று கொண்டு, "பிதாவே, நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், இங்குள்ள ஜனங்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்,” என்றார். பாருங்கள், பிதா, ஏற்கனவே அவரிடம் கூறிவிட்டார். அவர், "இங்கு சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்,” என்றார். அவர் "லாசருவே, வெளியே வா-!” என்றார். ஆமென். மரித்து நான்கு நாட்களான மனிதன் காலூன்றி நின்று மறுபடியும் உயிர்பெற்றான். அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று. நிச்சயமாக. 231. ஒரு இரவு அவர் பசி கொண்டவராய் மலையை விட்டு இறங்கி வந்து. புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா என்று நோக்கினார். அவர் ஒரு மனிதன். அவருடைய பசியைப் போக்க அவர் எதையாகிலும் புசிக்க வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவர் ஐந்து மீன்களையும், இல்லை, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5000 பேரைப் போஷித்த போது. அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று. அது உண்மை. ஆம், ஐயா. 232. அன்றிரவு அவர் மிகுந்த களைப்புற்றவராய், பிரசங்கம் செய்ததனாலும், சுகமளித்தல் ஆராதனை நடத்தினதாலும் வல்லமை அவரை விட்டுப் போய் கப்பலின் அடித்தளத்தில் படுத்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு மனிதனாய் இருந்தார். ஒரு பிசாசு வந்து - ஒருக்கால் கடலிலிருந்த பத்தாயிரம் பிசாசுகள் வந்து. "அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரைத் தண்ணீரில் மூழ்கடித்து விடலாம்” என்றன. அவை பவுலை புயலில் செய்ய முயன்றது போல. "அவரை நாம் பிடித்து விட்டோம், அவர் மாட்டிக் கொண்டார். அவர் உறங்கிக் கொண்டு இருக்கிறார், நாம் படகை மூழ்கடித்து விடுவோம்”. பிசாசு தன் காற்றை பலமாக கடலில் வீசினான். அப்பொழுது படகு மேலும் கீழும் இப்படி குதிக்கத் தொடங்கினது. அந்த அலைகளும் கூட அவரை உறக்கத்தினின்று எழுப்பவில்லை. அவர் ஒரு மனிதனாக அங்கு படுத்துக் கொண்டு, மிகவும் களைப்புற்று, அயர்ந்த நித்திரையில் இருந்தார். 233. ஆனால் அவர் உறக்கத்தினின்று எழுந்தவுடனே, ஓ, என்னே -! "ஓ, சென்று இயேசுவை எழுப்புங்கள்”. அவர் தமது கால்களை... ஓ, சபையே, அதை தான் நீ செய்ய வேண்டும். அதைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்ய எனக்கு சிறிது நேரம் கிடைத்தால் நலமாயிருக்கும். பாருங்கள்-? அவர் படகின் மேல் தட்டின் மேல் தன் கால்களை வைத்து, கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு” என்று கட்டளையிட்டார். அலைகளும் காற்றுகளும் அவருக்குக் கீழ்ப்படிந்தன. அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று. அதை செய்ய தேவனால் மாத்திரமே முடியும். 234. ஆம், அவர் சிலுவையில் இரக்கத்துக்காக அழுதார். அது உண்மை. அவர் சிலுவையில் தாகமாயிருந்தார். அவர் ஒரு மனிதனைப் போல் மரித்தார். ஆனால் ஈஸ்டர் காலையன்று தேவதூதன் கல்லைப் புரட்டின போது, மரித்துப் போன ஒரு மனிதன் மரணம், நரகம், பாதாளம் என்பவைகளை வென்று வெளியே வந்து, மரணம், நகரம், பாதாளத்தின் மேல் வெற்றி சிறந்தார். அவர், "மரித்தேன், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்றார். அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று. அது அந்த மனிதனுக்குள் தேவன். ஆம், ஐயா. 235. விசுவாசம் அவருடைய சத்தியத்தை ஒரு போதும் மறுதலிப்பதில்லை. ஓ, ஜனங்கள், "அக்கினி ஸ்தம்பம் உண்மையல்ல. மோசேயின் அற்புதங்கள் உண்மையல்ல,” என்று எப்பொழுதும் கூறிக் கொண்டிருக்கின்றனர். அது எவ்வளவு பரிகாசத்தனமாக இருந்த போதிலும், அது வார்த்தையுடன் சரியாக நிலைத்திருக்கிறது. முற்றிலுமாக. ஓ, நீங்கள் எப்பொழுதாகிலும் வார்த்தையை உண்மையில் பற்றிக் கொள்ளும்போது நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கலாம், நீங்கள் விடாப்பிடியாய் இருக்கலாம். 236. மிகாயா, இருந்தது போல. 400 தீர்க்கதரிசிகள் அங்கு நின்று கொண்டு "ஆகாபே, யுத்தத்துக்குப் புறப்படுங்கள்” என்று உரைத்த போது, அதே இடத்தில் மிகாயா நின்று கொண்டு தன்னுடைய தீர்க்கதரிசனத்தை உரைத்தான். மிகாயா, தன்னுடைய தரிசனம் தேவனுடைய வார்த்தைக்கு ஒத்திருந்தது என்பதை அறிந்திருந்தான். அவன் எப்படியும் வார்த்தையை உரைத்தான். அவர்கள், “உன்னைச் சிறைச்சாலையில் வைத்து, இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுப்போம்” என்றனர். 237. அவன், வேண்டுமானால் என்னைச் சிறைச்சாலையில் அடையுங்கள்” என்றான். அவன் என்ன செய்தான்-? அவன் விடாப்பிடியாய் இருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தான். அவன் தேவனுடைய சித்தத்தை அறிந்திருந்தான். அவன் ஒரு தரிசனம் கண்டான். அது என்னவென்று அவன் அறிந்து கொண்டான். அந்த தரிசனம் தேவனிடத்திலிருந்து வந்தது. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போனது. இன்று ஒவ்வொரு விசுவாசியும் போராட வேண்டியவனாய் இருக்கிறான். நீங்களும் போராட வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். 238. சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதன் என்னிடம், "உங்களுக்குத் தெரியுமா, இவ்வளவு பெரிய ஒரு குட்டி பிசாசு ஒரு நாள் என் சொப்பனத்தில் என் முன்னால் நின்றான். அந்த பிசாசு 'பூ' (Boo) என்று சொல்லி என்னை பயமுறுத்தின போது, நாம் 'உம்ப்' என்று சொல்லி பின்னால் குதித்தேன். ஒவ்வொரு முறையும் நான் பின்னால் குதித்த போது, அவனுடைய உருவம் பெரிதாகிக் கொண்டே வந்து, என் உருவம் சிறிதாகிக் கொண்டே வந்தது. ஒவ்வொரு முறையும் அவன் 'பூ. பூ' என்று சொல்லி என்னை நோக்கிக் குதித்த போது, நான் பின்னால் சென்றேன், பின்னால் சென்றேன். முடிவில் அவனுடைய உருவம் என்னைக் காட்டிலும் மிகவும் பெரிதாகி விட்டது. அவனை எப்படியும் சண்டையிட வேண்டும் என்று நான் அறிந்து கொண்டேன். அப்பொழுது சண்டையிட ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே ஒரு வேதாகமத்தை நான் கையிலெடுத்துக் கொண்டேன். நான்... அவன், பூ' என்ற போது, நானும், பூ' என்றேன். அவனுடைய உருவம் சிறிதாகத் தொடங்கிவிட்டது” என்றார். அது உண்மை. 239. அதை தான் நீங்கள் செய்ய வேண்டும், நீங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் 'பூ' என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று சொல்லுங்கள். விடாப்பிடியாய் இருங்கள். வார்த்தையில் நில்லுங்கள். அது சத்தியம். இன்று நாம் வார்த்தையை விசுவாசிக்கிறோம். மிகாயா அதை விசுவாசித்தது போல நாம் அதை விசுவாசிக்கிறோம். மற்றவர்கள் விசுவாசிப்பது போல நாமும் அதை விசுவாசிக்கிறோம். எத்தனை பேர் அது தவறென்று சொன்னாலும், அது அப்பொழுதும் சத்தியம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. எந்த மனிதனாகிலும் உங்களை சுகப் படுத்த முடியுமா-? இல்லை. ஐயா. அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்-? "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்”. அது சரியா-? சரி. "அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”. இறந்த காலம். அவர் உங்களுக்குச் செய்யக் கூடிய ஒவ்வொன்றும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. 240. இப்பொழுது அவர் சபையை வார்த்தையுடன் வரிசைப்படுத்த சபையில் யாரை நியமித்தார்-? அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள், மேய்ப்பர்கள், ஆகியோரை. சபையின் உத்தியோகங்கள். சபையை வரிசைப்படுத்த தேவனால் அனுப்பப்பட்ட ஆவியில் நிறைந்த மனிதர்கள்- மனிதனால் அழைக்கப்பட்டவர் அல்ல. அது என்ன-? சபையில் ஆவியின் வரங்கள். மூடபக்தி வைராக்கியம் அல்ல, ஆனால் உண்மையில் சபையில் ஆவியின் வரங்கள். அது உண்மை, சபையை சீர்பொருந்தப் பண்ண. ஒரு உண்மையான சபை தேவனால் நியமிக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் நிறைந்து இருக்குமானால், பாவம் அந்த சபையில் காணப்படும் போது, அது வேறொரு அனனியா சப்பீராளாக இருக்கும். ஒரு உண்மையான சபை... அப்படிப்பட்ட ஒரு சபைக்குள் நான் பிரவேசித்து, எல்லா ஸ்திரீகளும் மனிதரும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் இருப்பதைக் காண விரும்புகிறேன். யாராகிலும் ஒருவர் தவறு செய்திருந்தால், பரிசுத்தாவி எழுந்து நின்று அதை வெளிப் படுத்துவார். அவர்கள் அதை சுத்தப்படுத்தியாக வேண்டும். அது தான் சபையில் உள்ள வரங்கள். ஓ தேவனே, அப்படிப்பட்ட ஒரு சபையை அனுப்புவீராக, அப்படிப்பட்ட ஒன்றை அனுப்புவீராக. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? கிறிஸ்து மரித்திருக்கிறாரா-? அவர் உயிரோடிருக்கிறார். 241. அவர் எப்படியிருந்தார்-? அவர் அந்த ஸ்திரீயிடம்... பரிசேயன் ஒருவன் அவரிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்ட போது, அவர், "இந்த விபச்சார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்” என்றார். அது சரியா-? பொல்லாத விபச்சாரச் சந்ததியார்-! அவர், "அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள், அந்தப் பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அந்த அடையாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள்,” என்றார். இப்பொழுது நமக்குள்ள சந்ததியாரைக் காட்டிலும் அதிக மோசமான பொல்லாத விபச்சார சந்ததியார் எப்பொழுது இருந்துள்ளனர்-? பாவம் எப்பொழுது இதைக் காட்டிலும் அதிகம் பெருகியிருந்தது-? இப்பொழுது பூமியில் மிக அதிகமான ஜனங்கள் உள்ளனர், ஆதாம், காலத்திலிருந்து இதுவரை இருந்த ஜனங்களைக்காட்டிலும் இப்பொழுது அதிகமான ஜனத்தொகை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதுவே அந்த பொல்லாத விபச்சாரச் சந்ததியார். ஆண் புணர்ச்சிக்காரர், சீர்குலைதலும் மற்றவைகளும் இப்பொழுது பல்லாயிரக்கணக்காக பெருகியுள்ளது. சபைகள் விழுந்து போகின்றன. "துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப் பிரியராயிராமல் சுகபோகப்பிரியர், இணங்காதவர்கள், அவதூறு செய்கிற வர்கள். இச்சையடக்கம் இல்லாதவர்கள், நல்லோரைப் பகைக்கிறவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு”. பாருங்கள்-? வேதம், "விட்டு விலகு” என்கிறது. நாம் அந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 242. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், ஜனங்கள் பல இடங்களுக்குச் சென்று, "உங்களைச் சுகப்படுத்த எனக்கு வல்லமை உண்டு” என்று சொல்லித் திரிகின்றனர். அந்த ஆள் உங்களிடம் பொய் சொல்லுகிறார். உங்களைச் சுகப்படுத்த அவருக்கு வல்லமை கிடையாது. கிறிஸ்து அதை ஏற்கனவே செய்து விட்டார்-!... நீங்கள் பாவங்களை அறிக்கையிடும் போது, ஏதோ ஒரு குருவானவர் அல்லது போதகர், உங்கள் பாவங்களை மன்னிப்பார் இல்லை, ஐயா-! உங்கள் பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டன. கிறிஸ்து சிலுவையில் மரித்த போது, அவர் "முடிந்தது" என்றார். என்ன-? முழு திட்டத்தையும் கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார். நீங்கள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள் ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்பட்டு விட்டான். ஆனால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், உங்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை. நீங்கள் பீடத்தண்டை வந்து, உங்கள் தலை மயிர் நரைத்து. தலை மயிர் உதிர்ந்து கீழே விழும் வரைக்கும் நீங்கள் கதறி அழுதாலும், உங்களுக்குப் பதிலாக கிறிஸ்து மரித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கும் வரைக்கும் உங்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை. நீங்கள் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களானால், அவர் உங்கள் பாவத்துக்குப் பரிகாரமாக மரித்தார். அப்பொழுது இரட்சிப்பு உங்களுக்கு கிடைக்கிறது. சுகம் பெறும் விஷயத்திலும் அதுவே தான். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”. 243. கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதைக் காண்பிக்க அவர் இன்று செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்று தான். முதலாவதாக அவருடைய வார்த்தையின் அடிப்படையின் பேரில் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அது முற்றிலும் உண்மை - அவருடைய வார்த்தையின் சத்தியத்தின் பேரில். இயேசு, "நான் செய்கிற கிரியைகளை” என்றார். அவர், "நான் சுகமளிக்கிறேன்” என்று ஒரு போதும் கூறவில்லை. இயேசு, "இந்த கிரியைகளை நான் சுயமாய் செய்யவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்த கிரியைகளைச் செய்து வருகிறார்” என்று சொல்லி அவர் "தெய்வீக சுகமளிப்பவர்” என்னும் பெயரைத் தரித்துக் கொள்ளாமலிருக்கும் போது. என்னைப் போன்ற ஏழை மூடன் அல்லது வேறு யாரோ தெய்வீக சுகமளிப்பவராக இருக்க, எப்படி முயற்சி செய்ய முடியும்-? சுகம் பெறத்தக்கவர் அனைவரும் ஏற்கனவே சுகம் பெற்றுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி தெய்வீக சுகமளிப்பவராக ஆக முடியும்-? நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு, விசுவாசிக்க வேண்டும். அது உண்மையா-? அதை தான் நாம் அறிய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அது உண்மையா-? 244. நீங்கள் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் போனால், நீங்கள் போய்விட வேண்டும், அல்லது உங்கள்.. நீங்கள் சொல்வதையும் நான் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை விட்டுவிட வேண்டும். ஆனால் தேவன் அவ்விதம் அல்ல. அவர் சபைக்கு வரங்களை அனுப்பினார், அப்போஸ்தலர்களை, அப்போஸ்தலன் என்பவன் யார்-? மிஷனரி. மிஷனரி என்றால் "அனுப்பப்பட்ட ஒருவன்” என்று பொருள். தீர்க்கதரிசி என்றால் "ஞான திருஷ்டிக்காரன்”. மேய்ப்பன், போதகன், சுவிசேஷகன் இவர்கள் அனைவருமே தேவனுடைய வார்த்தையை நிதானமாய் பகுத்து அதை மற்றவர்களிடம் கொண்டு வருகின்றனர். பிறகு ஆவியின் வரங்கள் சபையில் கிரியை செய்து, வார்த்தையை உறுதிப்படுத்தி, இயேசு கிறிஸ்து சபையில் ஜீவிக்கிறார் என்பதைக் காண்பிக்கின்றன. 245. இப்பொழுது, இது நமது சபை குழு. நாம் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கிறோம். இங்கு யாராகிலும்.... இவர்கள் விஜயம் செய்பவர்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் அதிக நாட்கள் இங்கு தங்கி இருப்பது இல்லை, ஆனால், நண்பர்களே, இன்றைக்கு, இப்பொழுது வியாதியாயுள்ள உங்களுக்கு என்னால் ஏதாகிலும் உதவி செய்யக் கூடுமானால், நான் செய்வேன். இங்குள்ள யாராகிலும் ஒருவர் வியாதிப்பட்டிருக்கிறார் என்று நான் அறிந்திருந்தால், உதாரணமாக, இந்தக் கட்டிலின் மேல் படுத்திருப்பதை நான் காணும் இந்த சகோதரி, அவளுக்கு ஏதாகிலும் என்னால் செய்ய முடியும் என்று நான் அறிந்திருந்தால், உதாரணமாக, ஒரு வண்டியை என் மூக்கினால் நகர பிளாக்-குகளின் வழியாக தள்ளிக் கொண்டு போக வேண்டுமென்றால், அதை நான் செய்வேன். அங்கு நான் தள்ளிக் கொண்டே சென்று, "மழை பெய்தால் எனக்கு குடை பிடிக்காதீர்கள், மழையிலேயே தள்ளிக் கொண்டு போவேன்” என்று சொல்லுவேன். நான் உத்தமமாயிருக்கிறேன் என்பதை தேவனுக்குக் காண்பிக்க விரும்புவேன். ஆனால் அதனால் எவ்வித உபயோகமும் இல்லை. நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருக்கிறேன், இந்தியாவில் அவர்கள், இரும்பு முட்களின் மேல் படுத்துக் கிடக்கிறார்கள், எல்லாவிதமான காரியங்களையும் அவர்கள் செய்கின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கு பலி செலுத்தி, தங்கள் பிள்ளைகளை முதலைகளுக்கு இரையாக கொடுக்கின்றனர். அதுவல்ல. அது உத்தமத்தை எடுத்துக்காட்டலாம். ஆனால் ஒரு மனிதன் உத்தமமாக- கார்பாலிக் அமிலத்தை மருந்து என்று நினைத்து குடித்து விடலாம். பாருங்கள்-? பாருங்கள், நீங்கள்.... 'எது சத்தியம் என்பதை நாம் அறிய விரும்புகிறோம். தேவன் தமது சத்தியத்தைக் குறித்து சாட்சி பகருகின்றார். "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்". எபி. 13:8, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." 246. இன்று நீங்கள் அவரைக் காண விரும்பினால், அவர் எப்படியிருப்பார்-? கிறிஸ்து எனக்குள் இருக்கிறார், உங்களுக்குள் இருக்கிறார் என்று நான் சொன்னால், நாம் எதை எதிர்நோக்க வேண்டும்-? கழுத்து பட்டையைத் திருப்பி உடுத்த ஒரு மனிதனை எதிர்நோக்குவீர்களா-? இல்லை, இல்லை, அவர் அவ்விதம் உடுத்திக் கொள்ளவில்லை, அவர் மற்றவர்களைப் போலவே உடை உடுத்தினார். அவருடைய கையில் வடுக்கள் இருந்தால்-? யாருமே கையில் வடுக்களையும், முட்களின் பதிப்பையும் உண்டாக்கிக் கொள்ள முடியும். இப்பொழுது நாட்டில் போலியாட்கள் டஜன் கணக்கில் உள்ளனர் - இரத்தம், நெருப்பு, புகை எல்லாமே. அது வார்த்தையைப் போல் காணப்படவில்லை. இயேசு, "நான் செய்கிற கிரியைகளை” என்றார். அவர், “நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசி யுங்கள். அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. நான் யாரென்று அவைகள் அறிவிக்கின்றன,” என்றார். 247. இப்பொழுது சற்று நேரம் ஜெபிப்போம். உங்கள் விண்ணப்பங்களை உங்கள் இருதயத்தில் வைத்திருங்கள். பரலோகப் பிதாவே, இது மிகவும் கொடூரமாயும் கடினமாயும் இருந்ததென்று அறிவேன். நீர் இரக்கமாயிரும் என்று ஜெபிக்கிறேன். நான் அப்படியிருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை... கர்த்தாவே, என் இருதயத்தை நீர் அறிவீர். எனக்கு இப்பொழுது உதவி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்த சொற்கள் துண்டு துண்டாகவும், தொடர்ச்சி இல்லாமலும் ஒரு போதகர் பேச வேண்டிய விதத்தில் பேசப்படவில்லை, கர்த்தாவே . இங்குள்ள நான் படிப்பில்லாதவன், ஜனங்களிடம் எப்படி பேச வேண்டுமென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அறிந்துள்ளது எல்லாம், என் வாயை நான் திறந்தால், அதை நீர் நிரப்புவீர் என்னும் உம்முடைய வாக்குத்தத்தமே. அந்த விஷயத்தில் நான் 31 ஆண்டுகளாக உம் பேரில் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறேன். எனவே, பிதாவே, எங்காவது சில ஜனங்கள் ஒரு சில சொற்களை ஒன்று சேர்த்து அதை விளங்கிக் கொண்டிருப்பார்கள் - வியாதியாயுள்ளவரும், கிறிஸ்து தேவைப்படு கிறவரும். அவர்கள் எங்கோ இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு நீர் தேவையாய் இருக்கிறீர், கர்த்தாவே. உம்முடைய வாக்குத் தத்தங்களில் அவர்களுடைய விசுவாசத்தை உயர்த்துவதற்கான ஏதோ ஒன்று இப்பொழுது பேசப்பட்டதென்று நம்புகிறேன். அந்த ஆசீர்வாதத்தை நீர் அருள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். 248. இப்பொழுது நாம் தலைவணங்கியிருக்கையில் இங்கு கிறிஸ்துவை இரட்சகராக அறிந்திராதவர்கள், "சகோ.பிரான்ஹாமே, இந்நிலையில் நான் மரிக்க விரும்பவில்லை, நான் மரிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை. நான் மரித்தால் இழக்கப் படுவேன். நான் மறுபடியும் பிறக்கவில்லை. நான் நிச்சயம் உங்கள் ஜெபத்தை இப்பொழுது கோருகிறேன். எனக்காக ஜெபியுங்கள், நான் ஒரு பாவி" என்று சொல்வீர்களா-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். "என்னை நினைவு கூருங்கள்...” என்று சொல்வீர்களா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னை, உன்னை , உன்னை. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்கள் இருதயத்தில் அதை மெய்யாகவே உணர்ந்து கையையுயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த சிறு கூட்டம் ஜனங்களின் மத்தியில் ஒன்று அல்லது இரண்டு டஜன் கைகள் உயர்த்தப்பட்டன. இங்குள்ள 100 அல்லது 200 பேர் கொண்ட சிறு கூட்டத்திலிருந்து. இதோ ஒரு டஜன் கைகள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே. பீடத்தை சுற்றிலும் பிள்ளைகள் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். உங்களை பீடத்தினருகில் கொண்டு வருவதற்கு ஒரு வழியும் காணவில்லை. ஆகவே, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே என்னுடன் சேர்ந்து ஜெபியுங்கள். 249. பரலோகப் பிதாவே, கைகளை உயர்த்தின இவர்களை உம்மிடம் கொண்டு வருகிறேன். இவர்கள் ஆழ்ந்த உத்தமத்துடன் இதை செய்தனர் என்று நான் நம்புகிறேன். இவர்கள் விஞ்ஞானத்தின் விதி ஒவ்வொன்றையும் முறித்து விட்டனர் என்பதை அறிவார்களாக. நம்முடைய கரங்கள் பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக கீழே தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் அவர்களுடைய கரத்தை இயக்கும் ஒரு ஆவி அவர்களுக்குள் உள்ளதை அது காண்பிக்கிறது. ஆகையால் தான் அவர்கள் தங்கள் கரத்தை அதை உண்டாக்கின சிருஷ்டிகரை நோக்கி உயர்த்தினர். இது விஞ்ஞானத் தினால் நிரூபிக்கப்பட முடியாது என்பதை அங்கேயே அது காண்பித்து விட்டது. ஏனெனில் ஆவி அறிந்து கொள்ளப்படுவது... அது விசுவாசம். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். இங்கு ஒரு ஆவி அவர்களிடம் வந்து, அவர்கள் இரட்சிக்கப்பட விரும்புவதால் அவர்களுடைய கரங்களை உயர்த்த வேண்டும் என்று உரைத்தது. 250. இப்பொழுது, பிதாவாகிய தேவனே, உம்முடைய வாக்குத்தத்தங்களை நான் எடுத்துரைக்கிறேன். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இருந்த போது, "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதா வானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்று உரைத்தார். இவை வாக்குத்தத்தங்கள். அங்கு ஒரு ஆவி அவர்கள் தவறாயுள்ளனர் என்று கூறாமல் இவர்கள் கைகளை உயர்த்தியிருக்க முடியாது. நீர் இவர்களை முன்குறிக்காமல் போயிருந்தால், இவர்கள் இதை செய்திருக்க முடியாது. "பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவும் என் இடத்தில் வரும்" - இறந்த காலம் (ஆங்கில வேதாகமத்தில் "All that the Father hath given me" என்பது "பிதாவானவர் எனக்குக்கொடுக்கிற யாவும்” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யோவான் 6:37 - தமிழாக்கியோன்). நாங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை ஏற்கனவே தேவனுடைய பார்வையில் மகிமைப்படுத்தியும் இருக்கிறார். அது சென்று கொண்டே இருக்கும் தேவனுடைய மகத்தான தரிசனம் நிறைவேறிக் கொண்டிருப்பதாகும். இவர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே; முடிவற்றவராகிய நீர் இன்று காலை இக்கூட்டம் நடக்குமென்றும், இவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று அறிந்திருந்தீர். இப்பொழுது இவர்கள் கைகளை உயர்த்தி விட்டார்கள். 251. எனக்கு இவ்வளவு தான் செய்யத் தெரியும், கர்த்தாவே. இது உம்முடைய வார்த்தை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கைகளை உயர்த்தின இவர்களை உமது வார்த்தையின் விருதுகளாக உமக்களிக்கிறேன். ஓ தேவனாகிய கர்த்தாவே, இவர்களைக் காத்தருளும், யாருமே உம்முடைய கரங்களிலிருந்து இவர்களைப் பறித்துக் கொள்ள முடியாது. இவர்களுக்கு நித்திய ஜீவனைத் தந்தருளுவீராக. அவர்கள் ஒரு சபையைக் கண்டு பிடிக்க, அல்லது இன்று காலை இங்கு தங்கியிருந்து தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வார்களாக. இவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வரும் போது, ஆதியில் ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடினது போல, பரிசுத்த ஆவியானவர் இவர்கள் இருதயங்க ளையும் ஆத்துமாக்களையும் நிரப்புவாராக. கர்த்தாவே, இதை அருளும். இவர்கள் தங்கள் வா ழ்நாள் முழுவதும் தேவபக்தி உள்ளவர்களாய் நடந்து கொண்டு, அந்த நாளின் விருதுகளாக, உமது கீரிடத்தில் ஜொலிக்கும் இரத்தினங்களாக ஒப்புவிக்கப்படுவார்களாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இதை கேட்கிறோம். ஆமென். 252. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஒரு மணி நேரத்துக்கு முன்பே முடித்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் ஜெப வரிசையை அழைக்கப் போகிறோம். பொறுங்கள், ஜெப அட்டைகள் கொடுக்கப் பட்டுள்ளதா-? யாரிடமாவது ஜெப அட்டைகள் இருக்கின்றதா-? பில்லி எங்கே, பில்லி எங்காவது இருக்கின்றானா-? ஒன்று முதல் ஐம்பது-? அவன் ஐம்பது ஜெப அட்டைகளை விநியோகித்தள்ளதாக கூறினான். இப்பொழுது, நம்மால் முடியாது. அதிகம் பேர் நின்று கொண்டிருக்கின்றனர். நீங்கள் எல்லோரும் எங்களுக்கு சிறிது நேரம் தருவீர்களா-? நீங்கள்... நான் கூறின அனைத்தும்.... இப்பொழுது ஒரு நிமிடம். பகல் உணவு தீர்ந்து போய்விடாது. ஒரு நிமிடம் பொறுங்கள். இது பகல் உணவைக் காட்டிலும் அதிகமானது. மேலானது. வார்த்தை அப்படித் தான் இருக்க வேண்டும். 253. கவனியுங்கள் நண்பர்களே, இதை கூறுவதற்கு முன்பு உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நாம் எதற்காக சபைக்குச் செல்கிறோம்-? இதெல்லாம் என்ன-? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லை என்றால், உயிர்த்தெழுதல் இல்லை என்றால், நாம் புசித்து குடித்து களிகூருவோம். ஏனெனில் அந்த நிலையில் நாம் வெறும் மரக்கட்டைகளும், நாய்களுமே. ஆனால் அவ்விதமான வாழ்க்கை வாழ்வதில் நமக்கு நம்பிக்கை இல்லை. ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். நிச்சயமாக. நல்லது, அவர் ஜீவனுள்ள தேவனாய் இருப்பாரானால், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் சொன்ன இந்த வார்த்தையின் பேரில் நீங்கள் என்னுடன் இணங்கலாம், அல்லது இணங்காமல் போகலாம். நீங்கள் என்னுடன் இணங்குவீர்களானால், அப்பொழுதும் நீங்கள்... அது வெளிப்படுவதை நீங்கள் காணும் வரைக்கும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அது உண்மை. அது தேவன் உடைய வார்த்தையாய் இருக்குமானால், தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றக் கடமைப்பட்டவராய் இருக்கிறார். அவர் நிறைவேற்றாமல் போனால் அவர் தேவன் அல்ல, நான் தவறு உரைத்து விட்டேன், நான் ஒரு... நான் தவறான வெளிப்பாட்டை உங்களுக்கு அளித்து விட்டேன். ஆனால் தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுவாரானால், அது ஒரு வார்த்தையானாலும் சரி, அப்பொழுது நீங்கள் விடாப்பிடியாய் இருக்கலாம். நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைப் பற்றிக் கொண்டு அதைக் கைக்கொள்ளலாம். அது சரியா-? 254. இப்பொழுது, பாருங்கள், என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியும் என்று நான் உங்களிடம் கூறினேனா-? இல்லை, ஐயா. என்னால் உங்களை இரட்சிக்க முடியும் என்றும் நான் கூறமுடியாது. நீங்கள் முன்பே இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் உங்களிடம் கைகளை உயர்த்தும்படி சொல்லாமல், நீங்கள் உயர்த்தியிருக்க முடியாது. இங்கு தண்ணீர் உள்ளது. நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் சொந்த சபையில் நீங்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினால், அங்கு செல்லுங்கள். எங்களுக்கு இங்கே அங்கத்தினர்கள் என்பது கிடையாது, பாருங்கள், நாங்கள் ஒன்று கூடி இங்கு தொழுது கொள்கிறோம். இங்குள்ள எங்கள் நல்ல போதகர், சகோ.நெவில், முன்பு மெதோடிஸ்டாக இருந்தவர், அவர் இங்கு... நாங்கள் வெவ்வேறு ஸ்தாபனங்களிலிருந்து வந்தவர்கள். நாங்கள்.... எவருமே இங்கு வரலாம். இங்கு ஜனங்கள் கூடி வருகின்றனர். நாங்கள் பிரசங்கம் செய்து, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறோம். நாங்கள் கிறிஸ்துவுக்கு சீஷர்களை உண்டாக்குவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், நாங்கள் எதையும் ஸ்தாபிக்க விரும்புவதில்லை. பாருங்கள்-? அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இல்லை, ஐயா . உங்கள் ஸ்தாபனம் உங்களுக்கு வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் அங்கு செல்லுங்கள். அதனால் பரவாயில்லை. ஆனால் அதன் பேரில் சார்ந்து இராதேயுங்கள். அதன் மேல் நம்பிக்கை வைக்காதீர்கள். ஆம், ஐயா. நீங்கள் ஐக்கியத்திற்காக அங்கு செல்கின்றீர்கள், ஆனால் தேவன் மேல் நம்பிக்கையாய் இருங்கள். பாருங்கள்-? 255. இப்பொழுது, இப்பொழுது, இதோ ஒரு காரியம். கிறிஸ்து இன்னும் ஜீவிப்பாரானால்... ஒரு சிறு வேதவசனத்தை மறுபடியும் எடுத்துக் கொள்வோம். அது தெளிவாயுள்ளது என்று நாங்கள் நிச்சயம் உடையவர்களாய் இருக்க விரும்புகிறோம். சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு சிறு காரியத்தை உங்களிடம் கூறப் போனேன். அவர், "பொல்லாத விபச்சார சந்ததியார் அடை யாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள்” என்றார். அது யோனாவின் அடையாளம், உயிர்த்தெழுதல். அது சரியா-? அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்-? நான் கூற விரும்புவது... அந்த பொல்லாத... இது பொல்லாத விபச்சார சந்ததி என்று நீங்கள் நம்புகிறீர்களா-? நல்லது, யோனாவின் அடையாளம் என்ன-? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல். அது சரியா-? இந்தப் பொல்லாத சந்ததியாருக்கு கிறிஸ்து இன்னும் ஜீவிக்கிறார் என்பதை நிரூபிக்க கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல். அவர் உயிர்த்தெழுந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. எனவே அது உயிர்த்தெழுதலின் அடையாளமாயிருக்க வேண்டும். 256. நல்லது. இந்நாட்டில் உள்ள அநேக பிராடெஸ்டெண்டுகள் சரீர உயிர்த்தெழுதலை விசுவாசிப்பதில்லை. நூற்றுக்கணக்கான சபைகள் இதையும், அவர் சரீரப் பிரகாரமாக திரும்பி வரப்போவதையும் விசுவாசிப்பதில்லை. பாருங்கள்-? நான் கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை எல்லாவற்றையும் விசுவாசிக்கிறேன். அவர் முழுவதும் கிறிஸ்து என்று விசுவாசிக்கிறேன். எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு. அதே இயேசுவாக மறுபடியும் வருவார். நான் பரிசுத்த ஆவி என்னும் நபரை விசுவாசிக்கிறேன். அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். அவருடைய ஆவி, அவருடைய ஜீவன் சபையில் அசைவாடிக் கொண்டிருக்கிறது. 257. இது கிறிஸ்துவினால் உண்டாயிருக்குமானால்... இதை என்னை சம்பந்தப்படுத்திக் கூறப் போகிறேன். அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இதை என்னை சம்பந்தப்படுத்திக் கூறப் போகிறேன். இப்பொழுது, இதனுடன் கூட அளிக்கப்பட்ட வரம்; இந்த ஒளியின் புகைப்படம் வாஷிங்டனில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அக்கினி ஸ்தம்பம் அநேக ஆண்டுகளாக உலகம் பூராவும் உறுதிப்படுத்தப்பட்டு வந்து உள்ளது. அந்த ஆவி இங்கு இருக்குமானால், அது... அது கிறிஸ்துவின் ஆவியாய் இருக்குமானால், அது கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்யும். அது வேதப் பூர்வமானது. அது உண்மை. அந்த வார்த்தை வந்து விட்டதென்றால், இன்று காலை உங்களிடம் நான் சொன்ன வார்த்தை சத்தியம். இல்லை என்றால் கிறிஸ்து எனக்குள் இந்த விதமாக..... 258. கத்தோலிக்கராகிய உங்களை நான் கேலி செய்வதாக எண்ண வேண்டாம். பேதுருவின் ஆவி உங்கள் சபையில் இருந்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஒரு யூதன் விக்கிரகங்களை சபையில் வைத்திருப்பான் என்று நினைக்கிறீர்களா-? ஒரு யூதன் பரிசுத்த ஆவியை மறுதலித்து, அதற்கு பதிலாக ஒரு சிறு பிஸ்கோத்து துண்டை (Wafer) பீடத்தின் மேல் வைத்து, அதை எலிகள் தின்னும்படியாக விட்டு விட்டு, அதை நீங்கள் தேவன் என்று சொல்லிக் கொண்டு திரியும்படி செய்வானா-? என்ன நேர்ந்து விட்டது-? அது தேவன் அல்ல என்று உங்களுக்குத் தெரியும். வானத்திலிருந்து இறங்கிய தேவன், பரிசுத்த ஆவி, அது ஒரு ஆவி. நீங்கள் விக்கிரங்களுக்கு முன்பாக தாழ விழுந்து, அதற்குள் ஒரு ஜீவனை நுழைக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் தான் விக்கிரகம், தேவன் தம்முடைய ஆவியை உங்களுக்குள் கொண்டு வருகிறார். நீங்கள் அவருடைய ஜீவிக்கும் பிரதிநிதியாக ஆகின்றீர்கள். பாருங்கள், தேவன் உங்களுக்குள் வாசம் செய்து, உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொள்கிறார். 259. இப்பொழுது நாம் ஜெபவரிசையை அழைக்கப் போகிறோம். நீ எந்த எண்ணிலிருந்து ஜெப அட்டைகளை விநியோகித்தாய்-? ஒன்று முதல் ஐம்பது. நாம் ஒன்றிலிருந்து தொடங்குவோம். என்ன சொல்லுகிறீர்கள்-? சரி, நாம் ஒரே நேரத்தில் சிலரைக் கூப்பிடலாம். ஏனெனில் அவர்களுடைய... பார்ப்போம், நாம் 8 அல்லது 10 பேர்களை ஒரே நேரத்தில் கூப்பிடுவோம். யாரிடம் ஜெப அட்டை எண் ஒன்று உள்ளது-? இப்பொழுது... உங்கள் எண் அழைக்கப்படும்போது, எழுந்து நில்லுங்கள். ஏனெனில் இது சபை, அரங்கம் அல்ல. சரி, என்ன சொல்லுகிறீர்கள்-? 'ஏ' எண் ஒன்று, யாரிடம் உள்ளது-? ஸ்திரீயே, இங்கு வருவாயா. அல்லது எங்காகிலும் இங்கு-? இந்த இடத்தில், பீடத்தின் முன்னால் நில். 'ஏ', எண் 2. யாரிடம் எண் 2 உள்ளது-? ஜெப அட்டை எண் 2. இப்பொழுது கையை வேகமாக உயர்த்துங்கள். நல்லது... சரி, அந்த ஸ்திரீயின் பின்னால் நில்லுங்கள், உங்களுக்கு விருப்பமானால். எண் 3. எண் 3. நல்லது சகோதரியே. உன்னால் எழுந்திருக்க முடியாது, அங்கேயே படுத்திரு. நான் அங்கு வந்து உனக்கு ஜெபிப்பேன். எண் 4, 'ஏ' எண் 4, உன் கையையுயர்த்து. 'ஏ' எண் 4, எண் 4, மிகவும் பின்னால், மிகவும் பின்னால். சரி, பாருங்கள், அவர்கள் இங்கு வருகின்றனர், அட்டைகளைப் பெற விரும்புவோருக்கு அவர்கள் அட்டைகளை நன்றாக கலந்து, அதைப் பெற விரும்பும் ஜனங்களுக்கு இவ்விதம் விநியோகிக்கின்றனர். அவர்களுக்கு தெரியாது. சரி, எண் 4, இங்கு வா, ஸ்திரீயே. எண் 5, யாரிடம் எண் ஐந்து உள்ளது-? ஜெப அட்டை எண் 5, உன் கையை வேகமாக உயர்த்துவாயா-? நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. உங்கள் தருணத்தை நீங்கள் இழந்து போய் விடுவீர்கள். எண் 5. எண் 6. சரி, எண் 7. 260. இப்பொழுது, பார்ப்போம், மற்றவர்கள் வரட்டும். இவர்களை இந்த வழியாக கொண்டு வரலாம். எண் 6, ஜெப அட்டை எண் 8, யாரிடம் எண் 8 உள்ளது-? ஸ்திரீயே, நீ தான் ஜெப அட்டை எண் எட்டா, உன்னிடம் 8 உள்ளதா-? சரி, உன்னை நான் காணத்தக்கதாக, உன் கையை உயர்த்து, பார், நான்... மற்றும் எண் 9, யாரிடம் எண் 9 உள்ளது-? சரி, அது நல்லது, ஸ்திரீயே. எண் 10, ஜெப அட்டை எண் 10, யாரிடம் எண் 10 உள்ளது-? அது யாராயிருந்தாலும், உன் கையை உயர்த்துவாயா... சரி, நான் வருந்துகிறேன். சரி, இங்குள்ள இந்த மனிதன். சரி, ஐயா, இந்தப் பக்கம் வாருங்கள். எண் 11, எண் 11. உன் கையையுயர்த்து, எண் 11. 261. நீங்கள் ஜெப அட்டைகளை உபயோகிக்காமல் போனால், அதை வாங்கிக் கொள்ளாதீர்கள், நண்பர்களே. ஏனெனில் நீங்கள்... பாருங்கள், நீங்கள் எழுந்து போய் விட்டு உங்கள் ஜெப அட்டையை உபயோகிக்காமல் போனால், அப்பொழுது நீங்கள்... நீங்கள் அப்படி செய்யக் கூடாது. எண் 11, எண் 12. சரி, இங்கே சகோதரியே, பின்னால் போ. எண் 13. இங்கே. எண் 14. எண் 15. மிகவும் நல்லது. இதை இப்படித்தான் செய்ய வேண்டும். எண் 16, நீங்கள் சரியாக செய்கிறீர்கள். எண் 17. பின்னால் சென்று உங்கள் இடத்தில் நில்லுங்கள். 17. இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். என்ன சொல்லுகிறீர்கள்-? அந்த வழியாய் வாருங்கள், சகோதரனே, இங்கு கலந்து விடுகிறது. எண் 17, எண் 18, 19.. 20. சரி. இவ்வளவு பேர் அந்த வரிசைக்கு சரியாயிருக்குமென்று நினைக்கிறேன். இவர்களை எவ்விதம் வரிசையில் அமைப்பதென்று பார்ப்போம். 20, 21, 22, 23. 24 , 25. இப்பொழுது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். எண் 25. இப்பொழுதே ஏறக்குறைய நெருக்கம் ஆகிவிட்டதென்று நினைக்கிறேன், இல்லையா-? 25, நான் நினைக்கிறேன், 25. இது முடிந்தவுடன் இன்னும் 25 பேர் இருக்கின்றனர். சரி, 25. 262. சரி, இங்குள்ள எத்தனை பேர் ஜெப அட்டைகள் வைத்துள்ளனர் என்று பார்ப்போம். எத்தனை பேருக்கு ஜெப அட்டை இல்லாமலிருந்து. தேவன் உங்களை சுகமாக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்-? உங்கள் கையை உயர்த்துங்கள். விசுவாசியுங்கள். உங்களுக்கு.... உங்களுக்கு ஜெப அட்டைகள் இல்லாமலிருந்து தேவன் உங்களை சுகப்படுத்த வேண்டுமென்று விரும்பு கிறவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள். 263. அவர்களை அவர்கள் வரிசைப்படுத்திக் கொண்டு இ ருக்கையில், உங்கள் கவனத்தை எனக்குத் தாருங்கள். ஏனெனில் இதை நீங்கள் இப்பொழுது இழந்து போவீர்களானால், என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. இப்பொழுது நாம் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். அவசரப் படாதீர்கள். நானே அமைதியாய் இருக்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இவ்வகையான காரியங்களில், அவ்விதம் செய்தால் அபிஷேகம் செய்ய மாட்டார். 264. இப்பொழுது, இந்த அறையில், இந்த ஜெப வரிசையில் நின்று கொண்டு இருப்பவர்களில் எத்தனை பேர் இவர்களில் சிலரை எனக்குத் தெரியும் என்று அறிந்து இருக்கிறீர்கள்-? இங்குள்ள இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியும், அவள் நமது சபைக்கு வருகிறாள். அவளுடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. பேக்கர், உ ஊ, இவளை எனக்குத் தெரியும்... இங்கு நின்று கொண்டு இருக்கும் அந்த பெரிய உருவம் படைத்த ஆளை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவருடைய பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவரை நான் இங்கு கண்டிருக்கிறேன். 265. நல்லது, வரிசையில் உள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் கூட்டத்தினர் இடையில் வியாதிப்பட்டுள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரியும். உங்களை எனக்குத் தெரியாது என்று அறிந்துள்ளவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள். உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அன்னியன். இப்பொழுது ஜெப வரிசையில் பார்ப்போம். உங்களுக்குள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரியாது என்று அறிந்துள்ளவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி, சரி, சரி, ஏறக்குறைய நூறு சதவிகிதம் பேர் என்று நினைக்கிறேன். சரி, இப்பொழுது கூட்டத்தினரில் வியாதிப்பட்டு, "என்னையோ அல்லது என்னைக் குறித்தோ இவருக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறுபவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள். பாருங்கள். இங்கு நிறைய பேர் இருக்கின்றனர். நான் வந்து போய்க் கொண்டிருக்கிறேன். சிலரை எனக்குத் தெரியும், சிலரை எனக்குத் தெரியாது. பாருங்கள்-? எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவர்களுக்கு உள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரிந்திருக்க வழியில்லை. 266. இப்பொழுது உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது 'நீங்கள்... இப்பொழுது, பாருங்கள், ஒரு ஸ்திரீ இருந்தாள். இது ஜெப வரிசையில் இல்லாதவர்களுக்கு, ஜெப வரிசையில் இல்லாதவர்களுக்கு. ஒரு காலத்தில் ஒரு ஸ்திரீ இருந்தாள், அவளும் ஜெப வரிசையில் இருக்கவில்லை. அவளுக்கு பெரும்பாடு இருந்தது. ஆனால் அவர், தேவனைப் பெற்றிருந்த ஒருவர் என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்பொழுது. கூர்ந்து கவனியுங்கள், இதை இழந்து போகாதீர்கள். இயேசுவே கிறிஸ்து என்பதை அவள் விசுவாசித்தாள். அவள், "அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை மாத்திரம் நான் தொட முடிந்தால்" என்றாள். இப்பொழுது, அவளுக்கு அவளுடைய செயலை ஆதரிக்க, எலியா கோலைக் கொண்டு போய் பிள்ளையின் மேல் வைப்பது, அல்லது எலிசா மரித்த பிறகு அவனுடைய எலும்புகளைத் தொடுவது போன்ற வேதவசனங்கள் இருக்கவில்லை. ஆனால் அவரைத் தொட்டால் அவள் கேட்டதைப் பெற்றுக் கொள்வாள் என்று விசுவாசித்தாள். அவள் ஜனக்கூட்டத்தின் மத்தியில் மெல்ல நழுவிச் சென்று அவர் இருந்த இடத்தை அடைந்தாள். நீங்கள் யாராகிலும் பாலஸ்தீனாவுக்கு சென்றிருந்தால், அவர்கள் உள்ளே ஒரு அங்கியையும் அதற்கு மேலே ஒரு அங்கியயையும் அணிந்திருக்கக் காண்பீர்கள். மேலே உள்ள அங்கி தொதொளவென்று தொங்கிக் கொண்டிருக்கும். ஆகையால் தான் அவர்கள் பாதங்களைக் கழுவுதலை அனுசரித்தனர். தூசு அவர்கள் பாதங்களில் படிந்து விடும். அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். அவள் அந்த விதமாக, என் 'கோட்டை தொட்டிருந்தால், எனக்கு அது தெரிந்திருக்காது. அது என் அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவள் கீழே தொங்கிக் கொண்டிருக்கிற அங்கியின் ஓரத்தை தொட்டாள். அந்த அங்கி ஒருக்கால் அவருடைய பாதங்களிலிருந்து அல்லது அவருடைய சரீரத்தில் இருந்து இவ்வளவு தூரம் இருந்திருக்கும். அவள் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு விட்டு, திரும்பிப் போய் உட்கார்ந்து கொண்டாள், அல்லது வேறெதையோ செய்தாள். இயேசு நிறுத்தினார். 267. ஞாபகம் கொள்ளுங்கள், ஜனக் கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளை... "ஹல்லோ, ரபீ-! உம்மைக் கண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி-! நீர் தான் தீர்க்கதரிசியா-? உம்மைக் கண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஓ, மாய்மாலக் காரனே-! நீர் ஒரு அருமையான மனிதன்”. இப்படியாக வெவ்வேறு கருத்துக்கள். 268. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டு விட்டு, தேவனைத் தொட்டு விட்டாள் என்று திருப்தி கொண்டவளாய் திரும்பிப் போனாள். இயேசு நிறுத்தி, "என்னைத் தொட்டது யார்-?” என்றார். 269. பேதுரு அவரைக் கடிந்து கொண்டு, “இப்படி ஏன் ஒரு அபத்தமான காரியத்தை கூறுகிறீர்-?” என்றான். 270. அவர், "நான் பலவீனமடைந்ததை அறிகிறேன், வல்லமை என்னை விட்டுப் போனது” என்றார். அவர் சுற்று முற்றும் பார்த்து அந்த ஸ்திரீயைக் கண்டு பிடித்து, அவளிடம் அவளுடைய பெரும்பாட்டைக் குறித்து எடுத்து உரைத்தார். அது நின்று போனது. அது சரியா-? (சபையோர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). இப்பொழுது, இப்பொழுது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்கு "ஆமென்” என்றீர்கள், அதற்கு "அப்படியே ஆகக்கடவது” என்று அர்த்தம். இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராய் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று கிறிஸ்தவ வாசகர்களாகிய உங்களுக்கு வேதம் போதிக்கிறதா-? வேதம் அவ்விதம் உரைக்கிறதென்று எத்தனை பேருக்குத் தெரியும்-? நல்லது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரானால், அவர் முன்பு செய்த விதமாகவே இப்பொழுதும் செய்வார் அல்லவா-? நல்லது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அவரைத் தொடுவீர்களானால், நான் அவருடைய பிரதிநிதியாக, அவருடைய சத்தமாக இப்பொழுது இங்கு இருப்பேன் என்றால், அவர் முன்பு சொன்னதையே இப்பொழுதும் சொல்வார் அல்வா-? அது வேதப் பிரகாரமாக ஒலிக்கிறது அல்லவா-? அது சரியா-? பாருங்கள்-? அவர் முன்பு செய்த விதமாக இப்பொழுது செய்யவில்லை என்றால், அவரை நீங்கள் தொட்டதாக எப்படி அறிந்து கொள்வீர்கள்-? பாருங்கள் "நான் செய்கிற கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள்”. 271. சரி, ஜெப அட்டைகள் இல்லாதவர்கள், "கர்த்தராகிய இயேசுவே, ஜெப அட்டை பெற்றுக் கொள்ள நான் நேரத்தோடு இங்கு வரமுடியவில்லை. ஆனால் நான் உம்மிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மனிதன் கூறினது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே நான்... கர்த்தராகிய இயேசுவே உம்முடைய வஸ்திரத்தைத் தொட என்னை தயவு கூர்ந்து அனுமதிப்பீரா-? நீர் என் பிரதான ஆசாரியர். மேடையின் மேல் நின்று கொண்டிருக்கும் வழுக்கை தலை மனிதனை நான் நோக்கிப் பார்க்கவில்லை. நான் உம்மையே நோக்கிப் பார்த்து, உம்மைத் தொடுகிறேன். நீர் என்னை குணமாக்கப் போகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே நான் உம்மைத் தொடுகிறேன். நீர் சகோ. பிரான்ஹாமிடம் பேசி, இந்த ஸ்தீரிக்கு நீர் செய்ததையே இங்கு செய்வீராக. என் முழு இருதயத்தோடும் உம்மை நான் விசுவாசிக்கப் போகிறேன்,” என்று ஜெபியுங்கள். அப்படி செய்வீர்களா-? எத்தனை பேர் அவ்விதம் செய்வீர்கள்-? உங்கள் கைகளையுயர்த்தி, "நான் அவ்விதம் செய்யப் போகிறேன்,” என்று கூறுங்கள். சரி, நீங்ள் ஜெபித்துக் கொண்டிருங்கள். உங்கள் விசுவாசத்தை செயல்படுத்த இது தான் இடம். விசுவாசியுங்கள் சந்தேகப்படாதீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். ஆமென். 272. பிறகு ஜெபவரிசையிலுள்ள நீங்கள், இப்பொழுது அது, முதலாம் நபர் யார்-? இங்கு ஒரு நிமிடம் வா. இந்த இடத்தில் நில். அது போதும், பார். அங்கேயே நில். சிறிது நேரத்துக்கு முன்பு என்னைத்தெரியாது என்று கைதூக்கினாய் என்று நினைக்கிறேன். அது உண்மை. நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர். சரி. 273. இப்பொழுது இந்த கூட்டத்திலுள்ளோரை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதோ தேவனுக்கு முன்பாக என் உயர்த்தப்பட்ட கைகள். எங்களுக்கு ஒருவரை ஓருவர் தெரியாது என்பதன் அறிகுறியாக அவளும் கைதூக்கினாள். இது பரி. யோவான் 4-ல் இயேசு கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீயை சந்திக்கும் வேதாகமக் காட்சி அல்லவா-? ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் முதன் முறையாக சந்தித்தனர். இயேசு என்ன செய்தார்-? அவளிடம் பேசிக் கொண்டே இருந்தார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்-? அவர், "பிதாவே...” என்றார். 274. அவர் எருசலேமுக்கு, இல்லை, சமாரியாவுக்குப் போக வேண்டியதாய் இருந்தது. இப்பொழுது, பாருங்கள், யூதர்கள் அந்த அடையாளத்தைக் கண்டிருந்தனர். அவர் ஒரு தீர்க்கதரி சியாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் காண்பித்தார். மூன்று ஜாதிகள் மாத்திரமே உள்ளனர். அவர்கள் காம், சேம், யாப்பேத்தின் மக்கள். யூதர்கள் அவர்களுடைய அடையாளத்தைக் கண்டிருந்தனர், ஏனெனில் அவர்கள் மேசியாவை எதிர்நோக்கி இருந்தனர். அவர்கள் அதைக் கண்டனர். சமாரியர்கள் அதைக் காண வேண்டும், ஏனெனில் அவர்களும் மேசியாவை எதிர் நோக்கி இருந்தனர். 275. இப்பொழுது புறஜாதிகள். ஒருமுறையாவது அவர் ஒரு புறஜாதிக்கு அதைக் காண்பித்ததில்லை. ஆனால் அவர் நோவாவின் காலத்திலும் லோத்தின் காலத்திலும் செய்தது போல "கடைசி நாளில்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். லோத்தின் காலத்தில் ஒரு தூதன் ஆபிரகாமிடம் வந்து, அவருக்குப் பின்னால் கூடாரத்தில் சாராள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னார். அது கடைசி நாளில் மறுபடியும் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். எத்தனை வேதாகம வாசகர்களுக்கு அது தெரியும்-? பாருங்கள், சரி. பாருங்கள்-? இப்பொழுது நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், இது புறஜாதியாரியன் காலம். அவர்... பாருங்கள், தேவன் ஏதாவதொன்றை செய்து தம்மை ஒரு முறை வெளிப்படுத்துவாரானால்; அவர் அதே விதமாக தம்மை எப்பொழுதும் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரசங்கத்தின் துவக்கத்திலேயே நான் கூறினேன். 276. இந்த ஸ்திரீ எவ்விதம் அறிந்து கொண்டாள்-? பாருங்கள்-? அவளுடைய உரையாடலை நாம் எடுத்தக் கொண்டு அங்கிருந்த பிரசங்கிமார்களைக் காட்டிலும் அவளுக்கு எவ்வளவு அதிகம் தெரிந்திருந்தது என்பதைக் காண்போம். அவள் அங்கு சென்றாள், அவள் ஒருக்கால் அழகிய ஸ்திரீயாக இருந்து இருக்கலாம். அவள் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வரச் சென்றாள். அவள் தண்ணீர் நிறைந்த வாளியை மேலே இழுத்தாள். அவர், ஒரு யூதன். இவள் ஒரு சமாரியப் பெண். அவள் தண்ணீர் நிறைந்த வாளியை மேலே இழுத்தாள். அந்த கிணறு இருந்த இடம் ஒரு அழகான இயற்கை காட்சியாய் அமைந்திருந்தது. அது இப்பொழுதும் சீகார் ஊரில் உள்ளது. எனவே அவர் இப்படி அங்கு உட்கார்ந்து கொண்டு, "ஸ்திரீயே, தாகத்துக்குத் தா” என்றார். அவர் ..... 278. அவள், "யூதர்களாகிய நீங்கள் ஒரு சமாரியா ஸ்திரீயிடம் அவ்விதம் கேட்பது வழக்கமிலையே,” என்றாள். 279. உரையாடல், பாருங்கள். பிதாவானவர் அவரை அங்கு அனுப்பினார். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், பிதாவானவர் அவரிடம் காண்பிக்காமல் அவர் தாமாய் எதையும் செய்யமாட்டார். பாருங்கள்-? எனவே அவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்-? அவளுக்கு இருந்த தொல்லை என்னவென்பதை அவர் அறிய முயன்றார். அப்பொழுது அவள் செய்தியை அந்த மக்களிடம் எடுத்துச் செல்வாள். அவர் சொன்னார்... அவளுடைய தொல்லையைக் கண்டு பிடிக்க விரும்பினார். உங்களுக்குத் தெரியும். அவர், "தாகத்துக்குத் தா" என்றார். அவள், அது வழக்கமில்லையே” என்றாள். 280. அவர், "உன்னுடன் பேசுகிறவர் இன்னார் என்பதை நீ அறிந்து இருந்தாயானால், நீயே அவரிடத்தில் தண்ணீரைக் கேட்டிருப்பாய்,” என்றார். 281. அவள், "நல்லது. கிணறு ஆழமாயிருக்கிறதே. மொண்டு கொள்ள உம்மிடத்தில் ஒன்றுமில்லையே. பின்னை எங்கேயிருந்து உமக்குத் தண்ணீர் கிடைக்கும்-?” என்றாள். 282. இவ்விதம் உரையாடல் தொடர்ந்து, எருசலேமில் தொழுது கொள்வதைக் குறித்து உரையாடல் நடந்தது. உங்களுக்குத் தெரியும். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்-? அவளிடத்தில் உள்ள தவறு என்னவென்பதைக் காண, அவளுடைய ஆவியைப் பகுத்தறிய முயன்று கொண்டிருந்தார். அவர் அதைக் கண்டு பிடித்து விட்டார். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? அவளுக்கு ஐந்து புருஷர் இருந்தனர். அவர், "நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா,” என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை," என்றாள். 283. அவர், "நீ சொன்னது சரிதான். நீ சொன்னது சரிதான். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது நீ கூட சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவன் உன் புருஷன் அல்ல," என்றார். 284. இப்பொழுது கவனியுங்கள். அவள் அந்த பிரசங்கிமார்களைப் போல் "அவர் குறி சொல்பவர்,” என்று கூறவில்லை. "அவர் பெயல்செபூல்,” என்று கூற வில்லை. அவள், “ஐயா,” கவனியுங்கள், "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளை நமக்கு அறிவிப்பார்,” என்றாள். அது மேசியாவின் அடையாளம். இயேசு, “உன்னுடனே பேசுகிற நானே அவர்,” என்றார். 285. அவள் ஊருக்குள்ளே ஓடிப் போய் ஜனங்களிடம், "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாவல்லவா-?” என்றாள். 286. நல்லது, அது யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் மேசியாவின் அடையாளமாய் இருந்தால், அது புறஜாதிகளுக்கும் அடையாளமாய் இருக்க வேண்டும் அல்லவா-? அந்த மேசியா உயிரோடெழுந்து, அவருடைய சபையில் வாசம் செய்து, தம்மை வெளிப்படுத்தும் போது, அவர் வாக்களித்துள்ள விதமாகவே அவர் முன்பு செய்த கிரியைகளையே செய்வார் அல்லவா-? 287. இப்பொழுது நான் இங்கு நின்று கொண்டு உன்னுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன், உன்னை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் உன்னை நான் கண்டதில்லை. பார்-? ஆனால் நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்று கர்த்தராகிய தேவன் என்னிடம் கூறுவாரானால், அது உண்மையா இல்லையா என்று அறிந்து கொள்வாய். பார், நீ செய்த ஒன்றை அவர் என்னிடம் கூறுதல். நீ செய்யத்தகாத ஒன்றைச் செய்ததை அவர் என்னிடம் கூறுதல். நீ முன் காலத்தில் என்ன செய்தாய் என்று அவர் உன்னிடம் கூற முடிந்தால், நிச்சயமாக எதிர்காலம் என்னவென்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது சரியா, அவர் உன்னிடம் அதைக் கூறுவாரானால்-? நிச்சயமாக. நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்று அவர் என்னிடம் கூறுவாரானால், அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பாயா-? கூட்டத்திலுள்ள எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்-? நானும் இந்த ஸ்திரீயும் எங்கள் கைகளை உயர்த்தினவர்களாய், எங்களுக்கு.... நாங்கள், பாருங்கள், அந்நியர். எனக்கு அவளைப் பற்றி ஒன்றுமே தெரியாது, எனக்குத் தெரியாது என்று அங்கு நின்று கொண்டிருக்கிற உனக்குத் தெரியும். நீ எனக்குத் தெரியாதவள். ஆனால் கர்த்தராகிய தேவன்... நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் காரணம், ஆவியானவர் ஜனங்களை அபிஷேகிக்கத் தொடங்க வேண்டும் என்பதற்காக, பார். அதன் பிறகு அது வெளிப்படும். பார்-? அவர் என்னிடம் என்ன கூறுவார் என்று காண, நான் உன்னையே நோக்கிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் உன்னைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர் உன்னிடம் ஒன்றைக் கூறுவாரானால், அப்பொழுது அது உண்மையா இல்லையா என்பதை நீ அறிந்து கொள்வாய், இல்லையா-? அவர் செய்வாரென்று எல்லோரும் விசுவாசிப்பீர்களா-? 288. பரலோகப் பிதாவே, இப்பொழுது என்னால் வேறொன்றும் செய்ய முடியாது. இந்நேரம் வரைக்கும் நான் பேசிக் கொண்டிருந்தேன். கர்த்தாவே, இப்பொழுது முதல் நீர் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனங்களை நான் உம்முடைய வார்த்தையிடம் கொண்டு வந்து விட்டேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும். இவைகளை நீர் வாக்களித்திருக்கிறீர். நாங்கள் எத்தனையோ வாரங்கள் இக்கடைசி நாட்களுக்கென்று வாக்களித்துள்ளவைகளை பேசிக் கொண்டே சென்றாலும், எங்களுக்கு பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கும். எத்தனையோ முறை நாங்கள் உலகம் முழுவதிலும் சென்று இருக்கிறோம். ஆனால் கர்த்தாவே, எங்களை நீர் ஒருபோதும் கைவிட்டதில்லை. இங்கு ஒரு கூட்டம் ஜனங்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த தரிசனங்களில் ஒன்று என்னை பலவீனப்படுத்தும் என்று நான் அறிந்திருக்கிறேன். அதை நான் உணருகிறேன். தேவனுடைய குமாரனாகிய, கலப்பட மற்ற தேவனுடைய குமாரனாகிய உம்மிடத்திலிருந்தே வல்லமை புறப்பட்டு சென்றது என்னும் போது, கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவியாகிய எனக்கு அது இன்னும் எவ்வளவு அதிகமாயிருக்கும்-? 289. பிதாவே, அது நடக்க நீர் அனுமதிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இன்று காலை அளிக்கப்பட்ட செய்தி கனி கொடுக்காமல் போகாதிருப்பாக. உம்மிடம் கைகளையுயர்த்தின இரட்சிக்கப்பட்ட இந்த இளைஞர்கள் ஏறக்குறைய 20, 30 பேர் அவர்களுடைய தேவன் மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார் என்றும், இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிற தேவன் தம்மை வெளிப்படுத்தி, இது கடைசி நாட்களில் நடக்கும் என்று வாக்களித்துள்ளார் என்பதைக் குறித்தும் திருப்தியடைவார்களாக. இதோ நாங்கள் முடிவு காலத்தில் இருக்கிறோம். தேவனை அறிந்து கொள்ள, யூதர்களைப் போலவே புறஜாதிகளுக்கும் 2000-ஆண்டுகள் இருந்தன. இப்பொழுது புறஜாதிகள் அதே அடையாளத்தை பெற்று, யூதர்களைப் போலவே அதைப் புறக்கணிக்கின்றனர். யூதர்கள் அவர்களுடைய மேசியாவைப் புறக்கணித்தனர். ஏனெனில் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். இன்றைக்கும், கர்த்தாவே, புறஜாதிகள் அதையே செய்துள்ளனர். நாங்கள் அதற்கு ஆமோதம் தெரிவிக்க முடியாது. கர்த்தாவே, நாங்கள் சாட்சிகளாக மாத்திரம் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒரு செம்மறியாட்டைப் போல. அது எதையும் உற்பத்தி செய்வதில்லை. அது செம்மறி ஆடாய் இருப்பதனால், உரோமத்தைப் பெற்றுள்ளது. கர்த்தராகிய தேவனே, நாங்களும் கிறிஸ்தவர்களாக இருப்பதனால் தேவனுடைய ஆவியை பெற்றிருப்போமாக. நாங்கள் உம் பேரில் விசுவாசமாயிருக்கிறோம். நாங்கள் தேவனுடைய குமாரன் மேல் விசுவாசமாயிருக்கிறோம். இப்பொழுதும் கர்த்தாவே, நான் அபாத்திரன், ஆனால்..... யார் பாத்திரவான்-? கர்த்தாவே, யார் பாத்திரவான்-? நாங்கள் ஒருவருமே அல்ல. நாங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இவ்வுலகிற்கு வந்தோம். கர்த்தாவே. எங்கள் அசுத்தத்தை மன்னிப்பீராக. நீர் மனித குலத்துடன் இந்தக் கடைசி நாளில் ஈடுபடும் போது, எங்களை உபயோகிப்பீராக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 290. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுக்குள் கொண்டு வருகிறேன், என் கட்டுக்குள் கொண்டு வருகிறேன். பாருங்கள்-? அது ஒரு வரம். உங்களை தேவனுடைய முன்னிலையில் நீங்கள் இழுத்துக் கொள்ளும் விதமாக, உங்களை வெறுமை ஆக்குங்கள். அவர் கிரியை செய்யட்டும். எனக்குத் தெரியாது, ஆனால் அவர் இங்கிருக்கிறார் என்று நானறிவேன். அவர் இங்கு நின்று கொண்டிருக்கிறார் என்று நானறிவேன். ஆம், அம்மணி, இது தான் உன் கோளாறு. புற்றுநோய்க்காக நீ ஜெபித்துக் கொள்ள விரும்புகிறாய். அது உன் முகத்தில் ஏற்பட்டுள்ளது. அது அவ்வளவாக காணப்படவில்லை, அது உன் கண்ணைச் சுற்றிலும் உள்ளது. அது உண்மையானால், உன் கையையுயர்த்து. 291. இந்த கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர், "அவர் அதை ஊகித்திருப்பார், அல்லது அவளுடைய முகத்தைப் பார்த்திருப்பார்,” என்று கூறினது அங்கிருந்து புறப்பட்டு வந்ததை நான் உணர்ந்தேன். நான் அவ்விதம் செய்யவில்லை. அமைதியாய் நில். நான்... சாத்தானே, நீ தவறு. சகோதரியே, அமைதியாய் நில். அவனை நீங்கள் துவக்கி விட்டு, அவன் துவங்கி விட்டால், அவன் அதம் பண்ணி விடுவான். அந்த பிசாசை நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்து கொண்டு, அவனை அவமானப்படுத்துவோம். 292. அதைக் காட்டிலும் உனக்கு அதிகம் கோளாறு உண்டு. உனக்கு இருதய வியாதியும் உள்ளது. சிக்கல்கள், நரம்பு தளர்ச்சி நிலை. இவை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. அது முற்றிலும் உண்மை. களைப்பு, சுவையற்ற உணர்ச்சி, எல்லாமே. அது.... அது உண்மையானால், உன் கையையுயர்த்து. நீ சுகமாகி விட்டாய். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சுகமடைந்தவளாய் வீடு செல். அது பரவாயில்லை, விசுவாசித்துக் கொண்டே போ. தேவனுக்கு நன்றி செலுத்து. 293. நீ விசுவாசிக்கிறாயா-? ஸ்திரீயே, அங்கு நில். இந்தப் பக்கம் பார். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா-? தேவன் இருதய வியாதியை சுகப்படுத்த முடியுமா-? சரி, நீ விசுவாசிப்பாயானால், அவர் உன் இருதய வியாதியை சுகமாக்கி விட்டார். ஆமென். 294. அவரால் புற்று நோயை சுகமாக்க முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா-? அப்படியானால் உன் இருக்கைக்கு திரும்பிச் சென்று, "உமக்கு நன்றி....” என்று சொல். 295. நான் உன்னிடம் ஒரு வார்த்தையும் கூறாமலிருந்தால்..... நீ வரிசையில் வந்து கொண்டிருக்கும் போதே சுகமாகி விட்டாய் என்று நான் கூறினால், நீ விசுவாசிப்பாயா-? என் வார்த்தையை நம்புவாயா-? நீ ஏற்கனவே சுகமடைந்து விட்டாய், உன்னிடம் இதைக் கூற வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு நபரையும் தொடவில்லை. 296. நீ தேவனை விசுவாசித்தால், உனக்கு அறுவை சிகிச்சை தேவையிருக்காது. உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? கட்டி போய் விட்டது. வீடு செல், நீ சுகமாயிருப்பாய். 297. சகோதரியே, இந்தப் பக்கம் பார். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா-? ஒரு நிமிடம். இப்பொழுது, ஒரு மனிதன் எனக்கு முன்னால் காணப்பட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் கூட்டத்தில் எங்கோ இருக்கிறார். இந்த ஸ்திரீக்கு உள்ள கோளாறே அவருக்கும் உள்ளது. புகைப் படத்தில் நீங்கள் காணும் அந்த ஒளி அங்கு நின்று கொண்டிருக்கிறது. உங்களால் அதைக் காண முடிகிறதா-? இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதன். ஐயா, உம்மிடம் ஜெப அட்டை உள்ளதா-? இளைஞர். நீர் சகோ. ஹப் என்று நினைக்கிறேன், இல்லையா-? உம்மை இப்பொழுது தான் அடையாளம் கண்டு கொண்டேன். சகோ.ஹப், உங்களுக்குள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். உங்களுக்குள்ள கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு ஒரு கோளாறு உள்ளது. நீங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு விசுவாசித்துக் கொண்டிருந்தீர்கள். அண்மையில் உங்கள் மகளுக்கு இங்கு நேர்ந்த ஒன்றின் காரணமாக நீங்கள் விசுவாசிக்கத் தான் வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், இல்லையா-? இந்த ஸ்திரீக்கு மூட்டு வாதம் (arthritis) உள்ளது. உமக்கும் உள்ளது. அது உண்மையானால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் இருவரும் சுகமடைவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சாத்தான் அந்த மனிதனைத் தள்ளி விடலாம் என்று யோசித்தான், ஆனால் அவனால் முடியவில்லை. இப்பொழுது, இங்குள்ள இந்த மனிதனுக்கு... சகோ. ஹப், உங்களிடம் ஜெப அட்டை கிடையாது, இல்லையா-? ஆம், இங்கு நீர் உட்கார்ந்து கொண்டு, விசுவாசித்துக் கொண்டு இருந்தீர். உங்களுக்கு என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசியுங்கள். 298. எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இந்த காரியங்கள் என்னை மிகவும் பலவீனப்படுத்து கின்றன என்பதை உணருகிறீர்களா.... 299. நீ இருதயத்தில் விசுவாசிக்கிறாயா-? நீ சுகமடையப் போகிறாய் என்று நான் உன்னிடம் சொன்னால், என் வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசிப்பாயா-? அப்படியானால், இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. 300. தேவன் நரம்புத் தளர்ச்சியை சுகப்படுத்தி, உன்னை குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா-? போய், அதை விசுவாசி. நான் நினைக்கிறேன்.. எனக்கு நிச்சயமாகத்தெரியவில்லை, அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியவில்லை. ஒரு தரிசனம் அவள் மேல் காணப்பட்டது. ஆனால் அதை நான் நிறுத்திக் கொண்டு, மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். ஏனெனில் அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியும் என்று நினைத்தேன், ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. 301. இப்பொழுது பயபக்தியாயிருங்கள், ஒவ்வொருவரும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இங்கு எனக்கு நீண்ட ஜெபவரிசை உள்ளது. எனக்கு... சற்று நில்லுங்கள். இப்பொழுது, நான் உங்களிடம் ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பிரசங்கித்தேன். ஆனால் பிரசங்கம் செய்த போது இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது இரட்டிப்பாக பலவீனமாய் இருக்கிறேன். பாருங்கள், அது என் ஜீவனை உறிஞ்சுகிறது. ஆனால், இவைகளை, நாம் ஜனங்களிடம் பேசிக் கொண்டேயிருக்கலாம், அவர்கள் குணமாகி விடுவார்கள், அதனால் ஒரு வித்தியாசமும் இருக்காது. நீங்கள் நின்று கொண்டு ஜனங்களிடம் நீங்கள் விரும்பும் வரைக்கும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருக்கலாம், ஆனால் அதிகம் பேசும் தோறும் அது நடந்து கொண்டிருக்கிறது. வரிசையில் வரும் மற்றவர்களுக்காக என் பெலத்தை சிறிது சேமித்து வைத்துக் கொள்வதற்கென, நான் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். நான் கூறுவது விளங்குகிறதா-? நான் எத்தனையோ முறை ஜனங்களிடம் பேசி, அது அவர்களைக் குறித்து எல்லாவற்றையும் அறிவித்து, அவர்கள் யாரென்றும் அவர்கள் எங்கிருந்துவருகின்றனர் என்று கூறுவதை உங்களில் எத்தனை பேர் கண்டிருக்கிறீர்கள்-? என்னே, நீங்கள் கூட்டங்களுக்கு வந்து அதை கண்டு இருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும். 302. அடுத்தது - நீங்கள் தான் அடுத்ததா-? சரி, ஐயா, உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நல்லது. அருமையானது. நாம் விசுவாசிகள், நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் விசுவாசிக்க வேண்டும். உம்மை எனக்குத் தெரியாதிருக்கும் பட்சத்தில், கர்த்தராகிய இயேசு என்னிடம் உமக்குள்ள கோளாறு என்னவென்று உரைத்தால், அது சரியா தவறா என்று நீர் அறிந்து கொள்வீர். இல்லையா ஐயா-? ஆம், ஐயா. இது நம்முடைய... நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று எண்ணுகிறேன். உம்முடைய முகத்தைக் கண்டதாக எனக்கு ஞாபகமில்லை. நாம் இருவரும் ஊழியக்காரர்கள். நாம்.... ஆனால் நாம் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக அறிந்திருக்கவில்லை. சரி, ஐயா. அப்படியானால், ஐயா, நீர் இந்த பக்கம் பார்த்து, நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். சரி, ஐயா. இந்த மனிதன் பெருங்குடல் கோளாறினால் அவதியுறுகிறார். அது அவருடைய பெருங்குடலில் உள்ளது. மட்டுமல்ல, உமக்கு இருதய வியாதியும் உள்ளது. நீர் ஒரு ஊழியக்காரன், அது உண்மை, நீர் ஐக்கிய சகோதரர் சபையைச் சேர்ந்தவர். நீர் இந்தியானாவிலுள்ள ராம்ஸேயைச் சேர்ந்தவர். உம்முடைய பெயர் திரு. பீன்ப்ளாஸ்ஸம். சங்கை. பீன்பிளாஸ்ஸம். அது உண்மையானால், உமது கையையுயர்த்தும். சுகமடைந்தவராய் வீடு செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 303. தேவனுக்கு மூட்டு வாதம் ஒரு பொருட்டல்ல. அவர் உங்களை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீரா-? அவர் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீரா-? சென்று அவரை முழு இருதயத்தோடும் விசுவாசியும், அப்பொழுது நீர் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வீர்..... உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியும். 304. சகோதரனே, உம்மை எனக்குத் தெரியும், உம்முடைய நிலைமை எனக்குத் தெரியும். நான் அபிஷேகத்தின் கீழ் உள்ள போதே, தேவன் உம்மை சுகமாக்குவார் என்று இப்பொழுதே விசுவாசியும். சகோ.காலீன்ஸ், சென்று அதை விசுவாசித்து குணமடைவீராக. சரி. 305. நான்... உம்மை நான் கண்டது போல் தோன்றுகிறது, ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. உமக்குள்ள கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூறுவாரானால், நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீரா-? அதை நீர் விசுவாசிக்கிறீரா-? சரி. நீர் நரம்பு தளர்ச்சியினால் அவதியுறுகிறீர். அதற்காகத் தான் உமக்கு ஜெபம் தேவைப்படுகிறது. அது சரியா-? அது உண்மையானால், உமது கையை உயர்த்தும். சுகமடைந்தவராய் வீடு செல்வீராக. இப்பொழுதே அதை விசுவாசியும். அதை விளைவிக்கும் சிறு விசுவாசம் உமக்கிருப்பதாக. 306. நல்லது. நீ அங்கு நின்று கொண்டிருக்கும் போது, கிறிஸ்து உன்னை இப்பொழுதே சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா-? அதை விசுவாசித்து வீடு சென்று, “இயேசு கிறிஸ்து இப்பொழுதே என்னை சுகமாக்கி விட்டார்,” என்று சொல். நீ உயிரோடிருக்க வேண்டுமானால், விசுவாசித்து தான் ஆக வேண்டும். அது உனக்குத் தெரியும், இல்லையா சகோதரியே-? இல்லையென்றால் நீ மரிக்க வேண்டும். அது உனக்குத் தெரியும். ஆனால் அவர் எல்லாவிதமான வியாதிகளையும் - புற்று நோயானாலும் வேறு வியாதியானாலும் - சுகப்படுத்தி உன்னை குணமாக்க வல்லவராயிருக்கிறார். அதை நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? அப்படியானால், நீ போய் உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகம் அடைவாயாக. 307. சரி, சகோதரனே, உம்மை எனக்குத் தெரியும் என்று உமக்குத் தெரியும். இருந்தாலும், நான் அறிந்து கொள்ள முயல்கிறேன். நீர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் உள்ள போது, இயேசு கிறிஸ்து உம்மை இப்பொழுதே சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீரா-? நீர் சென்று உம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசியும். 308. இப்பொழுது என்ன-? சரி. ஒரு நிமிடம். நான் எங்கு நிறுத்தினேன். 25, 26, 27, 28, 29. 30. நீங்கள் போய் வரிசையில் சேர்ந்து கொள்ளுங்கள். 30, 31. 32, 33, 34, 35. 36, 37, ஐம்பது வரைக்கும் அங்கு வரிசையில் நில்லுங்கள், ஜெப அட்டைகள் வைத்திருப்பவர்கள். ஜெப அட்டைகளை வாயிற்காப்போனிடத்திலாவது அல்லது வேறெந்த சகோதரரிடத்திலாவது, அவர்கள் வரும்போது கொடுத்து விடுங்கள். 309. இப்பொழுது நாம் ஒரு நிமிடம் இளைப்பாறுவோம். நீங்கள் விசுவாசிக் கிறீர்களா-? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 310. சகோதரன் மற்றும் சகோதரி ஸ்பென்சர், என் சிறு வயது முதற்கொண்டே உங்களை நான் அறிந்திருக்கிறேன். உங்களுக்குள்ள கோளாறு என்னவென்றும் நீங்கள் எதற்காக அங்கு நிற்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று அங்கு நின்று கொண்டே விசுவா சிக்கிறீர்களா-? ஓ பரலோகத்தின் தேவனே, உமது ஆசீர்வாதங்களை இந்த வயோதிப தம்பதிகளின் மேல் அருளி, அவர்களை சுகமடைந்தவர்களாய் அனுப்புவீராக. பிதாவே, அவர்களுக்கு வயது சென்ற போதிலும், அவர்கள் இன்னும் உமக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். உங்கள் இருக்கை களுக்குத் திரும்புங்கள். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களுடைய 83 ஆண்டுகளை எடுத்து, அநேக ஆண்டுகளை கூட்டித் தரப் போகிறார். அதை முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தேவன் உங்களோடு இருப்பார். சகோ.ஜெஸ், நீங்களும் கூட. தேவன் உங்களை இங்கு ஆசீர்வதிப்பாராக. 311. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? பொறுங்கள், கீழேயுள்ள அந்த சகோதரிக்கு ஜெபம் பண்ணாமல் விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். சரி, நமக்கு ஜெபம் செய்ய இரண்டு டோலிகள் உள்ளன. இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அவர்களிடம் செல்ல வேண்டும். அங்குள்ள சகோதரியே, ஒரு நிமிடம் காத்திருப்பதில் உனக்கு ஆட்சேபனை இல்லையே , மற்ற டோலியிலுள்ள அந்த நபரும் கூட. 312. இப்பொழுது உண்மையாக பயபக்தியாயிருங்கள். அமைதியாக நில்லுங்கள். எல்லோரும் பயபக்தியாயிருங்கள் பாருங்கள், நீங்கள் உண்மையில் மிகவும் பயபக்தியாயிருக்க வேண்டும். இப்பொழுது நாம் தரிசனங்களிலிருந்து ஒரு நிமிடம் இளைப்பாறுவோம். உண்மையாகவே பயபக்தியாயிருங்கள். எல்லோரும் இந்தப் பக்கம் பாருங்கள். இப்பொழுது நாம் அமைதியாக நம்பிடுவாய் என்னும் பாடலைப் பாடுவோம். எல்லோரும் இப்பொழுது ஒன்று சேர்ந்து பாடுவோம். நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும், நம்பிடுவாய் நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும், நம்பிடுவாய். 313. அவர் என்னிடம் இப்பொழுது சென்று அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் நான் இப்பொழுது சிறிது இளைப்பாறிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் நான் எழுந்து மறுபடியும் ஜெப வரிசையைத் தொடங்குவேன். ஜெபம் பண்ண வேண்டிய அந்த மக்கள் எங்கே, நாற்காலியிலிருந்த அந்த ஸ்திரீ-? சரி, ஒரு நிமிடம், நான் .... நான் அவளிடம் செல்வேன். இன்னும் ஒரு நிமிடத்தில். சரி, ஒரு நிமிடம். இப்பொழுது எல்லோரும் உண்மையாக பயபக்தியாயிருங்கள். நான் எதன் கீழ் இருக்கிறேன் என்று நீங்கள் உணருகிறீர்கள் என்று நான் நிச்சயம் அறிந்திருக்கிறேன். பாருங்கள்-? இங்கு மாத்திரமல்ல, வெளிநாடுகளிலும் கூட, சில நேரங்களில் பல்லாயிரம் மடங்கு . 314. யாரோ ஒருவருடைய பெயர் அழைக்கப்பட்டதற்காக சிறிது வெறுப்பு உண்டானதை நான் சிறிது நேரத்துக்கு முன்பு உணர்ந்தேன். உங்கள் பெயரை இயேசு அறிந்திருக்கிறார் என்று நீங்கள் உணருவதில்லையா-? நீங்கள் அதைக் கண்டதில்லையா-? அவர்கள் ஒருக்கால் இங்கு அந்நியராக இருக்கக் கூடும், அவர்கள் கண்டிருக்க மாட்டார்கள். சில நேரங்களில் அவர் இந்த மேடையின் மேல் ஜனங்களிடம், அவர்களுக்கு இருக்கும் உள்ளான பாவங்களை வெளியே கொண்டு வந்து அதை அறிவிக்கிறார். உங்களுக்கு அது தெரியும். ஒவ்வொரு... இயேசு பேதுருவிடம், “உன் பெயர் சீமோன். உன் தகப்பன் பெயர் யோனா. நீ யோனாவின் குமாரன்,” என்று சொல்லவில்லையா-? பாருங்கள்-? அவர் இங்கிருக்கிறார் என்பதைக் காண்பிக்கவே. இப்பொழுது, யாருக்குமே தெரியும். இங்குள்ள ஒவ்வொருவரும் அதைச் செய்வது ஒரு விதமான ஆவி என்று கட்டாயம் கூறுவார்கள். நீங்கள், அது பெயல்செபூல்,” என்றோ அல்லது அது "கிறிஸ்து,” என்றே கூறலாம். அது எதுவாயிருந்தாலும் தேவன் நியாயந்தீர்ப்பார். பாருங்கள்-? அது வேதாகமத்தில் உரைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவனுடைய பரிசுத்த வேதாகமம் இந்த வாக்குத் தத்தத்தை அளித்துள்ளது. 315. இப்பொழுது, இப்பொழுது உண்மையாக பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, ஒரு நிமிடம். இவர் அடுத்த மனிதரா-? சரி, ஐயா, இந்த பக்கம் நடந்து வாருங்கள். இந்த மனிதனை எனக்குத் தெரியாது. தேவன் அவரை அறிவார். ஆனால், ஐயா, நீங்ள் எதற்காக இங்கிருக்கிறீர் என்று தேவன் என்னிடம் கூறுவாரானால், அது அவரை நீங்கள் விசுவாசிக்கச் செய்யும் அல்லவா-? அது நிச்சயமாக செய்யும். வெளியிலுள்ள எத்தனை பேரை அது விசுவாசிக்கும்படி செய்யும்-? இங்கு இரண்டு பேர் சந்திக்கின்றனர். இந்த மனிதன் என்னை விட இளையவர். தேவன் அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரைப் போஷித்து வந்திருக்கிறார். அவர் கண்களை மூடின வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். இந்த மனிதன் எதற்காக இங்கிருக்கிறார் என்று, அல்லது அதைக் குறித்து ஏதாவதொன்றை, அவர் எனக்கு. வெளிப்படுத்தித் தருவாரானால், அது ஒவ்வொருவரையும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும்படி செய்யும். நீங்களும் அவ்விதம் நினைக்கிறீர்கள் அல்லவா-? 316. இங்கு, ஒரு நிமிடம், இங்கு பின்னால் உள்ள வரிசையில் ஒரு மனிதன் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு வினோதமான காரியம் உள்ளது. நான் ஒரு மின்னலைக் காண்கிறேன். ஆம், அவர் மின்னலினால் தாக்கப்பட்டு இருக்கிறார். ஆம், விசுவாசமாயிருங்கள், என் சகோதரனே. ஐயா. நான் உமக்கு அந்நியன். அது உண்மையானால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். நமக்கு ஒருவரை ஓருவர் தெரியாது. தேவனுக்கு உங்களைத் தெரியும். இப்பொழுது விசுவாசமாயிருங்கள். 317. நீங்ள், “என்ன செய்து கொண்டிருக்கிறீர், சகோ. பிரான்ஹாமே-?” என்று கேட்கலாம். நான் அந்த ஒளியை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது நகர்ந்து கொண்டிருக்கிறது. 318. மூத்திரப்பை கோளாறு, அங்கு உட்கார்ந்து கொண்டு.... மூத்திரப்பை கோளாறுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்த மனிதன், அவர் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர், இல்லையா-? அந்த மனிதன் எதைத் தொட்டார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்முடைய மூத்திரப்பை கோளாறு போய் விட்டது. ஐயா. அவர் எதைத் தொட்டார்-? அவர் எனக்கு 30 அடி தூரத்தில் இருக்கிறார். அவர் நமது பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியரைத் தொட்டார். 319.' உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், அவரும் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர், "கர்த்தாவே, அடுத்தது நானாக இருக்கட்டும்” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் அதை இப்பொழுது தான் கூறினார். அது உண்மை. நீங்கள் எதைக் குறித்து ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு எப்படி தெரியும்-? ஜெபத்துக்கு உத்தரவு அருளுபவர். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிற அந்த குடல் சரிவு (hemia), உங்களுக்கு அது தான் உள்ளது, குடல் சரிவு. அது உண்மையானால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். சரி, நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் அது குணமாகும். 320. உங்கள் விசுவாசத்துக்கு நான் சவால் விடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் விசுவாசியுங்கள். ஓ, என்னே, என்ன ஒரு உணர்ச்சி-! அவர் இங்கிருக்கிறார். ஆம், அது நடக்கட்டும். யார் முதலாளி என்பதை நீங்கள் காண்பீர்கள். அவரே முதலாளி. நாத்திகன் என்ன வேண்டுமானாலும் இப்பொழுது கூறட்டும். அவிசுவாசி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. முடிவு காலம் இங்குள்ளது என்பதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க, அவருடைய ஆவி என் மேல் தங்கியுள்ளது. அது அவர். அது நானல்ல. உங்களை எனக்குத் தெரியாது. அது அவர். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 321. இந்த மனிதன், இவர் தான் அடுத்தவர் என்று நினைக்கிறேன், இங்குள்ள இந்த மனிதன். ஐயா, அந்த ஒளி போகும் வழியை நான் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்கள் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், நான் அவருடைய தீர்க்கதரிசி, அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களா-? நீங்கள் ஒரு தீரமுள்ள நபர். நீங்கள் வேறு யாருக்காகவோ இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள், அது உண்மை, அவர் உங்களுடன் சபைக்கு வருகிறவர், குடல் புண். அது உண்மை. நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவரல்ல. நீங்கள் வெகு தூரத்திலிருந்து வருகிறீர்கள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று அவர் என்னிடம் கூறுவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? மிஸ்ஸௌரி. அது முற்றிலும் உண்மை. திரு.ஃப்ரீயல்ஸ், நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், சுகமடைந்தவராய் வீடு திரும்பலாம். நீங்கள் கேட்டுக் கொள்கிற அனைத்துமே உங்களுக்கு அருளப்படும். நீங்கள் போய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். 322. நீ விசுவாசிக்கிறாயா-? உன்னை எனக்குத் தெரியும் போல் தோன்றுகிறது. உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன். ஓ, எனக்கு தெரியும். நீ எங்கிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ.... ஒரு நிமிடம் பொறு, நான் பிதற்றவில்லை, இது அபிஷேகம். நீ... இப்பொழுது, ஒரு நிமிடம் பொறு. நீ கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் சுகமடைந்தாய், இல்லை, உன் சகோதரி சுகமடைந்தாள். நீ.... ஹப், சகோதரி ஹப்பின் மகள், அது உண்மை. உன் சகோதரியைப் போல நீயும் சுகமடைவாய் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? வீடு செல், அதைப் பெற்றுக்கொள், இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். 323. சகோதரனே, அந்த நரம்புத் தளர்ச்சி நிரந்தரமாய் போய் விட்டதென்று விசுவாசியுங்கள். நீங்கள் வீடு செல்லுங்கள். நீங்கள், "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நான் வீடு செல்கிறேன், என்னை சுகமாக்கும்,” என்று சொல்லுங்கள். அவர் செய்வார். 324. ஐயா, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? இந்த அபிஷேகத்துடன் நான் கீழே வந்து, உங்கள் மேல் கைகளை வைத்தால் என்ன செய்வீர்கள்-? அது உங்களுக்கு நடக்கும் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள் அல்லவா-? நான் கீழே வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிப்பேன். நீங்கள் அங்கு படுத்துக் கொண்டு மரித்துப் போவீர்கள். நீங்கள் மிகவும், மிகவும் வியாதிப்பட்டிருக்கிறீர்கள், ஒன்றுமே செய்ய முடியாது. முற்றிலுமாக, அவர்கள் அதை செய்து விட்டனர். அது உண்மை. இவ்வுலகம் உள்ளது போன்று அவ்வளவு நிச்சயமாக நீங்கள் அங்கு படுத்துக் கொண்டு மரித்துப் போவீர்கள். இப்பொழுது, நீங்கள் ஏன் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கக் கூடாது-? (சகோ.பிரான்ஹாம் ஜெபிக்கிறார்- ஆசி). தேவனே, இதை அருளுவீராக. அவர், இயேசுவின் நாமத்தில் என் ஜெபத்தைக் கேட்டார். தேவனே, இதை அருளுவீராக. 325. “என்னைக் கடந்து செல்லாதேயும், ஓ மிருதுவான இரட்சகரே”. உங்கள் கைகளை இப்பொழுது உயர்த்துங்கள். அதை மேலே தூக்குங்கள். கைகளை வைக்கப் போகிறேன், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் இந்த ஜனங்கள் மேல் என் கைகளை வைக்கப் போகிறேன். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று வேதம் உரைக்கிறது. சரி. (சபையோர், "என்னைக் கடந்து செல்லாதேயும்”, என்னும் பாடலைப் பாடுகையில் சகோ. பிரான்ஹாம் ஜனங்களுக்கு தொடர்ந்து ஜெபிக்கிறார் - ஆசி). 326. இந்த துணிகளுக்காக இப்பொழுது நாம் ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, பரி.பவுலின் சரீரத்திலிருந்து அவர்கள் உறுமால்களையும் கச்சை களையும் கொண்டு வந்து போட, "அசுத்த ஆவிகள் அவர்களை விட்டு புறப்பட்டன,” என்று வேதம் உரைக்கிறது. நாங்கள் பரி.பவுல் அல்ல என்பதை உணருகிறோம். ஆனால் நீர் இன்னும் அதே இயேசு என்று நாங்கள் அறிந்து இருக்கிறோம். ஏனெனில் நீர் பரி. பவுலின் காலத்தில் இருந்தது போலவே இன்றைக்கும் உயிருள்ளவராக இருக்கிறீர். கர்த்தாவே, இந்த உறுமால்கள் எடுத்துரைக்கும் இந்த விண்ணப்பங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் - சிறு துணிகள், உறுமால்கள், குழந்தைகளுக்கு சிறு காலுறைகள். தேவனே, இதை நீர் அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 327. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு அணி வகுத்துச் செல்கையில் ஒரு மகத்தான அக்கினி ஸ்தம்பம் அவர்களுக்கு முன்பாக சென்றதாகவும், ஒரு தீர்க்கதரிசி அவர்களுக்கு பிரதிநிதியாக தேவனின் பிரதிநிதியாக பூமியில் இருந்ததாகவும் நாங்கள் போதிக்கப்பட்டு இருக்கிறோம். அவர்கள் .... இந்த தீர்க்கதரிசி அவர்களை சிவந்த சமுத்திரம் வரைக்கும் வழி நடத்திச் சென்றான். அது பாதையை மூடினது. அவர்கள் கடமையின் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒன்று குறுக்கே நின்றது. தேவன் பரலோகத்திலிருந்து அக்கினிஸ்தம்பத்தின் வழியாக கீழே நோக்கிப் பார்த்தார். சமுத்திரம் பயந்து போய், பக்கவாட்டில் உருண்டு சென்று, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கடமையின் பாதையில் செல்ல, அதன் வழியாக பாதையை திறந்து கொடுத்தது. அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர். 328. தேவனே, இந்த உறுமால்கள் வியாதியஸ்தர் மேலும் ஊனமுற்றோர் மேலும் வைக்கப்படும் போது... சாத்தான் அவர்களுடைய வழியில் குறுக்கே நின்று, கடமையின் பாதையில் செல்லாதபடிக்கு தடை செய்கிறான். இப்பொழுது இங்கு பிரசன்னமாயுள்ள நமது கர்த்தரை எழுப்பின அதே வல்லமை இந்த உறுமால்களின் மேல் இறங்குவதாக. அவை வியாதிக்காரரை தொடும் போதெல்லாம், அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாய் கீழே நோக்கிப் பார்த்து பிசாசு பயந்து போகவும், இவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்து தங்கள் கடமையின் பாதையில் தொடர்ந்து செல்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உமது சமுகம் இங்குள்ளது. ஓ. மானிடராகிய எங்களை அசைக்கும் இந்த மகிமையான உம்முடைய ஆவியின் அபிஷேகம், கர்த்தாவே. உம்முடைய நன்மைக்காக உமக்கு எவ்வளவாய் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்-! இவர்களை இப்பொழுது இயேசுவின் நாமத்தினால் ஆசீர்வதிப்பீராக. 329. உங்கள் தலைகள் வணங்கினவர்களாய், இங்குள்ள ஒவ்வொரு நபரும். உங்கள் தலைகளை மட்டுமல்ல, அதனுடன் கூட உங்கள் இருதயங்களையும் வணங்கும்படி உங்களை கேட்டுக் கொள்ளப் போகிறேன். தேவன் இங்குள்ளார் என்பதை நீங்கள் காண்பதற்கு இதைவிட அதிகமாக அவர் என்ன செய்ய முடியும்-? என் வார்த்தையை இப்பொழுது நம்புங்கள். இந்த அபிஷேகம் இப்பொழுது மிகவும் அதிகமாக இருப்பதால், எனக்கு இங்கு மயக்கம் உண்டாகிறது. நான் ஒரு மூடமதாபிமானி அல்ல. அது உங்களுக்குத் தெரியும். மாயையான தோற்றங்களில் (illusions) எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் உங்களுக்கு உண்மையையே எடுத்துரைக்கிறேன். இது வேதப்பூர்வமானது. அந்த ஒளி எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. அது எல்லா இடங்களிலும் உள்ளது போல் தோன்றுகிறது. அவ்வளவு அதிகமான தேவை-! என்னை நம்புங்கள். 330. வேதம் மாற்கு 16-ல், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்றுரைக்கிறது. எத்தனை விசுவாசிகள் இங்குள்ளனர், "ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). நல்லது, வேதம், விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைக்கிறது. எனவே இதில் நான் மட்டுமல்ல, நீங்களும் என் அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனை வெளிப்படுத்திக் காண்பிக்க, அவர் அளித்த வரம் மாத்திரமே. அது காரியங்களை அறிவிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அது உரைத்த ஏதாகிலும் ஒன்று, அது உரைத்தவிதமாக அப்படியே நிறைவேறாமல் இருந்ததுண்டா என்று எவரையும் கேட்க விரும்புகிறேன். அது ஒவ்வொரு முறையும் பிழையின்றி உண்மையாய் இருந்து வந்துள்ளது. அது அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனெனில் அது தேவன். இப்பொழுது, பாதி தூரத்தில் நோக்க வேண்டாம், அந்த ஒன்றிற்காக அப்பால் நோக்குங்கள். பாருங்கள், அவர் இப்பொழுது இங்குள்ளார். இந்த நேரத்தில். 331. இப்பொழுது, நீங்கள் ஒரு விசுவாசியாயிருந்தால், உங்கள் பக்கத்திலுள்ள யாராவது ஒருவர் மேல் உங்கள் கையை வையுங்கள். அவர்களும் உங்கள் மேல் கையை வைப்பார்கள். நீங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டாம், அவர்களுக்காக ஜெபியுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறார்கள். நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், நீங்கள் அவ்விதம் செய்வீர்களானால், நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நல்லது, இங்கு டோலிகளோ கட்டில்களோ எதுவும் காணவில்லை. இங்கு டோலிகளும் கட்டில்களும் வைக்கப்பட்டிருந்த போது இருந்தீர்கள் - சப்பாணிகள், முடவர்கள் - ஒவ்வொரு முறையும் அவர்கள் முழுவதும் குணமாகாமல் போனதில்லை. இப்பொழுது, நீங்கள் சபையில் ஜெபிக்கிற விதமாக; நீங்கள் மெதோடிஸ்டாக இருந்தால், மெதோடிஸ்டுகள் ஜெபிப்பது போல் ஜெபியுங்கள். நீங்கள் பாப்டிஸ்டாக இருந்தால், பாப்டிஸ்டுகள் ஜெபிப்பது போல் ஜெபியுங்கள். நீங்கள் பெந்தெகொஸ்தேயினராக இருந்தால், அவர்கள் ஜெபிப்பது போல் ஜெபியுங்கள். நீங்கள் யாராயிருந்தாலும், ஜெபியுங்கள். ஆனால் நீங்கள் யார் மேல் உங்கள் கைகளை வைத்திருக்கிறீர்களோ, அவர்களுக்காக ஜெபியுங்கள். அப்பொழுது விசுவாசியுங்கள். 332. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்," என்று வேதம் உரைக்கிறது. இப்பொழுது நீங்கள் தனிப்பட்ட நபர்களாக ஒவ்வொருவருக்காக ஜெபியுங்கள். உங்கள் அனைவருக்கும் நான் மேடையிலிருந்து மொத்தமாக ஜெபிக்கப் போகிறேன். இப்பொழுது ஒவ்வொருவரும், உங்கள் சொந்த வழியில். 333. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உம்முடைய இரக்கங்களை அணுகுகிறோம். எங்கள் நாமத்தில் நாங்கள் வரமாட்டோம், அவ்விதம் எங்களுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்படவில்லை. ஆனால் உம்முடைய அன்பான குமாரனால் எங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டுள்ளது; அதாவது, "என் நாமத்தினாலே நீங்கள் பிதாவைக் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதை நான் செய்வேன்”. அது உம்முடைய வாக்குத்தத்தம். இப்பொழுதும், பிதாவே, இந்த விசுவாசிகளுக்கு உம்மை வெளிப்படுத்தித் த ரவேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் வியாதியஸ்தர் மேல், ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்துள்ளனர். இப்பொழுது நாங்கள் அவர்களை தேவனுடைய சிங்காசனத் தண்டைக்கு கொண்டு வருகிறோம். வேதத்தில், மாற்கு 11-ம் அதிகாரம் 23-ம் வசனத்தில், "இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” என்றும் "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7) என்றும் நீர் உரைத்திருக்கிறீர். 334. இப்பொழுது பிதாவே, மற்றவர் என்ன கூறின போதிலும், உம்முடைய வார்த்தையின் ஒவ்வொரு போதனையையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அது எழுதப்பட்ட விதமாகவே அதை விசுவாசித்து வந்திருக்கிறேன். அதை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக்கூடாதென்றும் அது எழுதப்பட்ட விதமாகவே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நாங்கள் போதிக்கப் பட்டுருக்கிறோம். இந்த புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு நீர் எங்களை நியாயந்தீர்க்கப் போகிறீர் என்றால், அது சரியான வடிவில் எங்களுக்கு கிடைக்கப் பெற வேண்டுமென்று நீர் நிச்சயம் கவனித்திருப்பீர். ஏனெனில் நாங்கள் இந்த புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு நியாயந்தீர்க்கப்பட வேண்டிய வர்களாயிருக்கிறோம். இப்பொழுதும், பிதாவே, உம்மை அறியும்படி செய்யும் தீர்க்கதரிசன ஆவியின் வரத்துக்கும் மேலாக, என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஆகையால் தான் அது நீர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் அது எப்பொழுதுமே முற்றிலுமாக வேத வசனங்களுடன் பொருந்துகிறது. இப்பொழுது, கர்த்தாவே, நாங்கள் உம்மண்டையில் வந்து, அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது எங்களை அபிஷேகிப்பீராக. நாங்கள் சத்துருவின் இடத்தை அணுகுகிறோம். 335. ஓ சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டவன். உனக்கு வல்லமை எதுவும் கிடையாது. தேவனுடைய குமாரன் கல்வாரியில் உன் வல்லமையை எடுத்துப் போட்டு, உனக்கிருந்த எல்லாவற்றையும் களைந்து விட்டார். அவர் உயிர்த்தெழுதலின் மூலம் எங்களோடிருப்பதை நிரூபித்திருக்கிறார். எம்மாவூரிலிருந்து வந்தவர்களுக்கு அவர் தரிசனமானது போல, இன்று காலையில் அவர் எங்களுக்கு தரிசனமாகி, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்த ஒன்றை எங்களுக்கும் செய்தார். எனவே அவர் மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்று நாங்கள் அறிந்து இருக்கிறோம். சாத்தானே, நாங்கள் அவருடைய நாமத்தில், இயேசுவின் நாமத்தில், கிறிஸ்துவின் வல்லமையுடன் வருகிறோம். நீ தோற்கடிக்கப்பட்டு விட்டாய். நீ ஒரு பொய்காரன் மாத்திரமே. உன் பொய்யை நாங்கள் ஏற்றுக் கொள்வோமானால், எங்களை நீ அகாலமாக கொன்று போடுவாய். ஆனால் உன்னால் அதை செய்ய முடியாது. நாங்கள் பிறர் பொருட்டு அனுபவித்த இயேசுவின் பாடுகளையும் தேவனுடைய வார்த்தையையும் கொண்டு அதற்கு சவால் விட்டுக் கொண்டு வருகிறோம். உன் பொய்யை நாங்கள் தோற்கடிக்கிறோம். சாத்தானே, உன்னை சண்டைக்கு அழைக்கிறோம். தாவீது தன் நாட்களில் சிங்கத்தைத் துரத்தி ஆட்டுக் குட்டியை மீட்டது போல, நாங்களும் அந்த ஆட்டின் பின்னால் வருகிறோம். அந்த ஆட்டை மீண்டும் ஆரோக்கியத்துக்கும் பெலத்துக்கும் கொண்டு வர நாங்கள் வருகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை கட்டவிழ்த்து விடு-! இந்த இடத்திலிருந்து வெளியே வா-! சாத்தானே இந்த ஜனங்களை விட்டு வெளியே வா-! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உன்னைக் கடிந்து கொள்கிறோம். அவர்களைப் போக விடு. ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இன்று காலை இவர்களை ஆரோக்கியத்துடனும் பெலத்துடனும் பிதாவின் சிங்காசனத் தண்டைக்கு கொண்டு வருகிறோம். 336. விசுவாசமுள்ள ஜெபம் ஜெபிக்கப்பட்டு விட்டது என்று இப்பொழுது விசுவாசிக்கும் ஜனங்களாகிய நீங்கள் உங்கள் கைகளை வேறொருவர் மேல் வைத்து கிறிஸ்து அவர்களை சுகமாக்கி விட்டார் என்று விசுவாசித்தீர்கள். நீங்களும் சுகமடைந்ததாக விசுவாசிக்கிறீர்கள், ஏனெனில் உங்களுக்காக அந்த நபர் ஜெபித்து, இப்பொழுதே நீங்கள் சுகமடைந்ததாக அதை ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு முடமாக இருந்தாலும், எவ்வளவு குருடாக இருந்தாலும், எவ்வளவு செவிடாக இருந்தாலும், நீங்கள் என்னவாக இருந்தாலும், எவ்வளவு பெலவீனமாக இருந்தாலும், எவ்வளவு வியாதிப்பட்டு இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நின்று அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென். எல்லாவிடங்களிலும், எழுந்து நில்லுங்கள், என்ன கோளாறு இருந்தாலும். எழுந்து நின்று, உங்கள் கையயுயர்த்தி, தேவன் செய்த நன்மைக்காக இப்பொழுது அவரைத் துதியுங்கள்.